Sunday 20 March 2016

காந்தம் -வான்காந்தம் -சீவகாந்தம்

காந்தம் -வான்காந்தம் -சீவகாந்தம்

எங்கும் எப்பொழுதும் நிலையாக இருப்பது காந்தம் (Magnetism) சடப்பொருளாகவும், சடப்பொருளில் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, வாசனையாக தன்மாற்றம் பெறுவதும் காந்தமே.

இக் காந்தத்தை வான்காந்தம் என்கிறோம்.

உயிர்ப்பொருளாகவும்,உயிர்ப்பொருட்களில் அழுத்தம்,ஒலி, ஒளி, சுவை, வாசனையாக தன்மாற்றம் பெறுவதும் காந்தமே.இக் காந்தத்தை சீவகாந்தம் என்கிறோம்.

காந்தசக்திக்குள் உட்பொருளாக இருப்பது "அறிவு ".

சடப்பொருட்களிலும் உயிர்ப்பொருட்களிலும் இயக்க ஒழுங்காக இருப்பதே அறிவு.

சீவன்களில் காந்த தன்மாற்றத்தை உணரும் அறிவே "மனம்".

அறிவையும் காந்தத்தையும் பிரித்துப்பார்க்க இயலாது.

அறிவும் காந்த ஆற்றலும்தான் ஆண்டவர், இறைவன், தெய்வம், கடவுள் (God) என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

சர்வமும் கடவுள் மயம்.

கடவுளைத்தவிர எதும் இல்லை.

இன்பதுன்ப உணர்வும் கடவுள்தான்!உணர்வதும் உணரப்படுவதும் ஒன்றே......!!!

"கடவளே தன் எழிலை தானே ரசித்து இன்பமுற திட்டமிட்டு எடுத்த உருவமே மனிதன்"

காந்த தத்துவத்தை தெளிவாக அறிந்து, இயற்கையையும் இயற்கை நீதியையும் முழுமையாக அறிந்துகொண்டு, பற்றும் பாசமும் அற்ற மனநிலையில் உடல்நலம் காத்து, பொருள்வளம் பெருக்கி, நட்புநலம் பேணி,ஐயறிவு மூலம் சிற்றின்பத்தையும் ஆறாவது அறிவில் உயர்ந்து பேரின்பத்தையும் அனுபவித்து எல்லோரும் இன்புற்றிருக்க தொண்டுசெய்து மனநிறைவும் அமைதியும் அடைவதே மனித வாழ்வின் இலட்சியம்.

இதற்குமேல் வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஏதும் இல்லை.

"பிரம்மம் பிரணவ சொரூபம்.
பிரம்மம் ஞான சொரூபம்"
- வேத வியாசர்

"காந்தசக்தியும் அறிவுமே பிரம்மம்"
- வேதாத்திரி மகரிஷி

The whole universe is packed with magnetic energy. Magnetism is the chief factor governing all the event in the universe.
- scientists

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.