Thursday 31 March 2016

அடிப்படை உண்மைகளை உணர்ந்து சந்தோஷமாக வாழு - பகிர்வு

அடிப்படை உண்மைகளை உணர்ந்து சந்தோஷமாக வாழு - பகிர்வு

நீ உன்னை உணர முதலில் உன் அடிப்படை உண்மை தன்மை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

ஆழமான உண்மையை உனக்கு எந்த வழி  சிறந்ததோ, எந்த வழி சுலபமோ, எது இயல்பாக காண்பிக்கிறதோ அதை நீ முழுமையாக உணர்ந்து  பெற்று கொள்வதுக்கு-  உன்னை நீ எப்படி வேண்டுமானாலும், உனக்கு பிடித்த மாறி, எந்த வகையில் வேண்டுமானாலும்  மாற்றிக்கொள் அது தவறாக நிச்சயம் ஆகாது , ஏனெனில் உண்மை என்பது ஒன்றே ஒன்று தான்!

உனக்கு உள்ளே நீ ஆழமாக உணராத எதுவாக இருந்தாலும் அது  ஒரு பொய்க்கு சமம் தான் அது ஞானிகள் சொல்லி முழுமையான உண்மையாக  இருந்தாலும் இதில் அடங்கும் !

நீ முழுக்க முழுக்க 99% உன்னை சுற்றி வெளியே கிடைத்த கருத்துக்கள், வெளியே கிடைத்த தத்துவங்கள், சடங்குகள், மனமற்ற நிலை அல்லது சுத்தவெளி என உனக்கு வரும் தத்துவங்கள்  எந்த நிலையாக இருந்தாலும் அது உன்னை அடக்கி பிடித்து வைக்கும் பிடிப்பு தான்- அது  உன்னை உணர ஒருபோதும் உதவாது என்று எப்பொழுது புரிந்து கொள்ள போகின்றாயோ அப்பொழுது தான் நீ நீயாக அடிப்படையை உணர்ந்து வாழ  முதல் படி எடுத்து வைக்கிறாய்,

கருத்துக்களை தத்துவங்களை பிடித்து தொங்கிக் கொண்டே வாழ்க்கை தொலைத்து கொள்கிறாய், உன்னை தொலைத்து கொள்வது இல்லாமல் இயல்பாக இருப்பவர்களுக்கு அதே புரியாத உணராத உனது  தத்துவங்களை சொல்லி அவர்கள் வாழ்க்கையும் இழக்க செய்கின்றாய் என்பதை உணர்வது எக்காலமோ இறைவா !

உனக்கு தேவை பட்டால் இணைத்து கொள்ளவும், உன் ego வு க்காக வெளியே ஏற்றுவதுக்கும் நான் உனக்கு ஆளில்லை , இது போல உன்னை வெளியேற்றம் செய்யும் பொழுது ஏன் சங்கம் சேற்று குச்சல் செய்து கொண்டிருக்கிறாய் அங்கு உன் தத்துவம் எங்கே போயிற்று, உனக்கே நிலையான முடிவை எடுக்க தெரியவில்லை பின்பே ஏன் வெட்டி தத்துவம் பல ஆண்டுகால ஆன்மீக சடங்கு என உனக்கு நீயே கேட்டு பார்!

இழப்பதுக்கு எனக்கு ஒன்றுமில்லை ஆனால் உன் ego வால் பல பேர் உண்மையை உணர்வதற்கு நீயே தடை என்பதை புரிந்துகொள்,

நீ ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்  அதன் உண்மை வழி பாதையை உனக்கு கிடைத்தை நீ உணர்ந்து உள்ளாய்-ஆனால் அதில் நீ உன்னை எப்படி இழக்கிறாய் என்பதை உதாரணம் கொண்டு பார்ப்போம் பின்வருமாறு,

நீ வாகனத்தை ஓட்டி செல்கிறாய் -உனக்கு முன்னே,
உனக்கு பின்னே ,
உனக்கு இடதில் ,
உனக்கு வலது புறம் என நான்கு பக்கமும் உன்னை சுற்றிலும் வாகனம் செல்கின்றது நீ நடுவில் உனக்கு கிடைத்த  பாதையை நோக்கி  பயணிக்கிறாய்,

அப்பொழுது உன்னை சுற்றி உள்ள வாகனத்தில் வருபவர்கள் ஆளு ஆளுக்கு high beam  digital effect horn  sound  எழுப்புகின்றனர் அவர்கள் பயணிக்கவும் , அவர்களுக்கு தெரிந்த தன்மையை கொண்டு உன்னை ஒதுக்கி ஓரம் கட்டி செல்வதுக்கு , அப்பொழுது நீ அதை பொருட்படுத்தி நீ அதை கவனித்தால் அல்லது பார்வையை மாற்றினால் உன் பாதையை உன் இயல்பை இழந்து மாற்றி விடுவாய்.

ஆனால் நீ உனக்கு கிடைத்த பாதையை, நீ எதையும் கண்டு கொள்ளாமல் உன் முழு கவனத்தில் கிடைத்த உண்மை பாதையை மட்டும் நீ நோக்கி சென்றால் உன் இயல்பில் நீ போக வேண்டிய இடத்துக்கு நிச்சயம் சென்று விடுவாய்,

சுற்றி உள்ள டிஜிடல் horn sound என்று சொல்வது முட்டாள் கருத்து , ஒன்றுக்கும் உதவாத உணராத தத்துவங்கள் ஆகும் - பாதை என்பது ஆன்மீக பாதை ஆகும்.

இன்னொரு உதாரணம் ஒருவன் உதவி செய்யும் கையில் அன்பு இருந்தால் போதும் அது வலது கை - இடது கை என பிரித்து பார்க்க நினைக்கும் பொழுது அங்கு சடங்குகளை பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கின்றாய் என புரிந்துகொள்,

ஒருவன் உள்ளே வெறுப்பு கொண்டு வலது கையில் அந்த வேலையை செய்வதும் , ஒருவனுக்கு வலது கையே இல்லாமல் இடது கையில் அன்புடன் கொடுப்பது என இரண்டிற்கும் உள்ள வித்யாசத்தை புரிந்து கொள்பவன் உண்மையை உணர்ந்து கொள்கின்றான்,

உனக்கு வலது கையில் இதை செய்ய வேண்டும், இடது கை பீச்சாங் கை அதில் எதையும் செய்யகூடாது  என சொல்லி கொடுத்தது சமுதாயம் தானே அங்கு நீ உணர்ந்தாயா ?

எந்த கையில் எதை செய்தால் என்ன தவறு இருக்கிறது? என்ன அதை வாங்கி கொண்டு பயன் பெறுபவனுடைய  குடி மூழ்கி போகுமா? வாங்கி கொண்டவன் வாழ்க்கையில்  பெரும் நஷ்டம் பெற்று விடுவானா?- இந்த போலி பண்பு பணிவு இதெல்லாம் உன் மனதில் நீ உருவாக்கி கொண்டவை தானே, அதர்க்கு முன்னே சமுதாயம் உனக்கு சொல்லி கொடுத்ததை உணராமல் மொட்டையாக செய்யும் சடங்கு என எப்பொழுது உணர போகின்றாய்? 

கையே இல்லாதவன் காலில் எல்லா வேலைகளையும் செய்வதை பார்த்து இயல்பாக பரிதாபபட்டு ஏற்றுக்கொள்ளும் இயல்பும் உன்னிடம் உள்ளது தானே!

இந்த மாறி உன்னை சுற்றி உள்ள போலி தனமான ஏராளமான  சடங்குகளை பிடித்து   தொங்கிக் கொண்டிருப்பது, உணராத தத்துவங்கள், பொருந்தாத கருத்துக்கள் சொல்வதை கேட்பதும்,

நீ நீயாக வாழ  உண்மை  பாதையை உணர உனக்கு நீயே தடையாக மாறி விடுகின்றாய்,

உன்னை சுற்றி இருப்பவர்கள் கருத்துக்கு, அவர்கள் அபிப்ராயத்துக்கு தீனியாகி விட்டு உன்னை இழக்காமல் , அதில் ஆழமான உண்மை இருந்தால் பொருத்தமாக இருந்தால் ஆய்வு செய்து எடுத்துக்கொள் இல்லையெல் அதை கண்டு கொள்ளாமல் உன் பாதையில் நீ சென்று கொண்டு இரு !

ஆனால் பல நேரத்தில் உண்மை இது தான் இப்படி சென்றால் நாம் வந்த வாழ்க்கையின் அர்த்தம் உணர்ந்து கொள்வதுக்கு உண்டான பாதை இது தான் என்று தெரிந்தும் -அது முழுமையாக ஏற்றுக்கொள்ள சமுதாயம் என்ன சொல்லுமோ? என முட்டாள் தனமான உன் உண்மைக்கு பொருத்தமில்லாத ஒன்றை concrete உன் உணர்வுகளை  பிடிப்புடன் கட்டி வைத்து கொள்வது மிக அடி முட்டாள் தனமான ஒன்று என்று ஒருநாள் புரிந்து கொள்வாய்- அதை இயற்கை உனக்கு உணர்த்தும்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமான உண்மை என்ன?, ஒவ்வொரு அசைவிலும் ஆழமான உண்மை என்ன ?என உனக்கு உள்ளே ஆழமான ஆய்வுடன் கவனித்து கொண்டே செல்,

அது  உண்மையின் பாதையை, நபர்களை, சூழ்நிலைகளை காண்பித்து கொண்டே இருக்கும்,

யாருக்காகவும் அவர்களின் முட்டாள் தனமான அறிவுரைகளையும் கோட்பாடுகளை கொண்டு அடிமை படுத்தும் தன்மைகளுக்கு இடம் கொடுத்து  உன்னை நீ இழக்காமல்,

நீ நீயாக உண்மையை உணர்ந்து சந்தோஷமாக வாழு!

வாழ்க்கை உனக்கே உனக்காக

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.