Friday 18 March 2016

சக்கர தியானம

ஒஸோவின் சக்கர தியானம் ஹிந்தி உரைக்கான மொழிப்பெயர்ப்பு:
முதல் சக்கரம் மூலதாரம்-பாலுணர்வு தொடர்புடையது.
2வது சக்கரம் நாபிக்கு கீழேயுள்ளது.
இச்சக்கரம் சித்திக்குமனால் மனிதனின் பயம் நீங்கிவிடும்.
2வது சக்கரம் மரணத்துடன் சம்பந்தமுடையது.
2வது சக்கரத்தை கடந்தால் மரணத்தை கடந்தவராக ஆவீர்.
ஒருவன் பயத்தினால் ஆட்க்கொள்ளப்படும்போது வயிற்றில்
உபாதைகள் வருவது நிச்சயம். மிகவும் பயத்தில் இருப்பவருக்கு
மலஜலம் கட்டுப்பாடின்றி வெளியாகும். பயத்தினால்
ஆட்க்கொள்ளப்படும்போது வயிற்றை காலி செய்ய இச்சக்கரம்
முற்படுவதால் அந்த சமயத்தில் மலஜலம் வெளியேறும்
நிலை ஏற்ப்படும். அதிக பயத்தில் உரலும் ஒருவனுக்கு
அல்சர் நோய் வந்துவிடும். அதிகப்படியாக சுரக்கும் அமிலம்
சதையைத் தின்றுவிடுவதால் அல்சர் ஏற்ப்படும்.
இந்த சக்கரத்தை அடைந்தவர் பயம் அறியார். அவர்
மரணத்தைக் கடந்தவராவார்.
3வது சக்கரம் நாபிக்கு மேலேயுள்ளது. இச்சக்கரம்
வாழ்வில் பெரும் மாற்றங்களை கொண்டுவரும்.
வாழ்வில் சமநிலை உண்டாகும்.
4வது சக்கரம் இதயத்திற்கான சக்கரமாகும். இந்த
சக்கரத்தை அடையும்போதுதான் உங்கள் வாழ்வில்
முதன்முதலாக காதல் பிறக்கின்றது. அதற்கு முன்புவரை
நீ பேசிவந்த காதல் நீ அனுபவித்த காதல் உடல்ரீதியானது.
நீங்கள் காதல் என்ற ஆபரணத்தைக்கொண்டு மறைக்க
முயன்றாலும் அதனுள்ளே இருப்பது காம ஆசைகள் தான்.
அது பொய்யான காதல், இதயத்தின் சக்கரத்தை நீ
அடையும்போது உன்னில் முதன்முதலாக உண்மையான
காதல் பிறக்கிறது.
5வது சக்கரம் தொண்டையில் உள்ளது (விசுக்தி)
ஆற்றல் இந்த சக்கரத்தை அடையும்போது நீ
சொல்வதை பிறர் புரிந்துகொள்ளாமல்ப்போக கூடும்.
கேட்பவரும் இந்த 5வது சக்கரத்தில் இருந்தால் மட்டுமே நீ
சொல்வதை விளங்கிக்கொள்வார்.
6வது சக்கரம் புருவமத்தியில் உள்ளது. இது சிவனின்
மூன்றாவது கண் என குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது கண்
திறக்கப்பெற்றவர் ஒளிமயமானவராகிவிடுவார்.  அவருக்கு
இருள் என்பதே இல்லை. அவர்தம் பாதையில் அவரே
ஒளியாய் இருப்பார்.
7வது சக்கரம் தலையில் உள்ளது (துரியம்).
இந்த சக்கரத்தை அடைந்தவர் அகங்காரம் அற்றவராகிவிடுவார்.
ஏற்றத்தாழ்வுகளின்றி அனைவருடனும் அன்பாக பழகுவர்.
நீ பணிவாக இருக்கும்போது இந்த 7வது சக்கரம்
வேலை செய்யத்தொடங்கும்; முழுதும் அகங்காரமற்ற
நிலையில் இந்த சக்கரம் முழுமையாக வேலை செய்யும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.