Monday, 10 April 2017

சட்டோரிஅனுபவம் (சமாதி)

சட்டோரிஅனுபவம்
(சமாதி)
சட்டோரி அனுபவம்
கிடைப்பது எப்போது ?
மனதை கவனித்து அது எங்கிருக்கிறது,என்ன அது என்பதைப் பாருங்கள்.
எண்ணங்கள் மிதந்து செல்வதையும் இடையில் இடைவெளிகள் இருப்பதையும் உணர்வீர்கள்.
நீண்டநேரம் கவனித்தால் எண்ணங்களைவிட இடைவெளிகளே அதிகம் என்பதை காண்பீர்கள்.
ஏனெனில் ஒவ்வொரு எண்ணமும் இன்னொரு எண்ணத்தில் இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.
உண்மையில் ஒவ்வொரு சொல்லுமே இன்னொரு சொல்லில் இருந்து தனித்திருக்க வேண்டி உள்ளது.
இன்னும் ஆழ்ந்து நீங்கள் போனால் மென்மேலும் அதிக இடைவெளிகளை பெரிய இடைவெளிகளை காண்பீர்கள்.
நீங்கள் முற்றிலும் விழிப்புடன் இருந்தால் மைல்கணக்கில் இடைவெளி நிலவுவது உங்களுக்குத் தெரியவரும்.
அந்த இடைவெளிகளில்தான் சட்டோரிகள் எனப்படும் தியான அனுபவங்கள் நிகழ்கின்றன.
அந்த இடைவெளிகளில்தான் சத்தியம் உங்கள் கதவைத் தட்டுகிறது.
அந்த இடைவெளிகளில் தான் விருந்தாளி வருகிறார்.
அந்த இடைவெளிகளில்தான் கடவுள் காட்சி அளிக்கிறார்-அல்லது நீங்கள் விரும்பும் வேறு எவ்விதத்திலும் அதை வெளிப்படுத்தலாம்.
விழிப்புணர்வு முழுமை பெறுகையில் ஒன்றுமின்மையின் ஒரு மிகப்பரந்த இடைவெளி மட்டுமே இருக்கிறது.
-- ஓஷோ --

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.