Friday 28 April 2017

காகம் கரைதலும் அதன் பலன்கள்

காகம் கரைதலும் அதன் பலன்கள்!

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நு}லோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
என்ற குறளுக்கிணங்க வாழ்க்கை வாழும் 'காகம்" இனம் விருந்தோம்பலுக்கும் விளக்கமாய் திகழ்கிறது. அதன் தகுதியை எண்ணிய முன்னோர் அதன் கரைதலுக்கு கணிதம் கண்டு பலபலன்களை வகுத்துள்ளனர்.

🐦 காலம், பு ர்வம், கிழக்கு முதலான திசைகளில் ஒன்றரை மணி நேரம் சஞ்சரித்து இருந்து கரையும் பலன் கிழக்கு முதலிய திசை எட்டிற்கும் முறையே லாபம், சத்ருநாசம், பந்து ஜன லாபம், தனவரவு, மழை, கலகம், பிராண பயம், அறப்பலன் ஆகியவை ஆகும்.

🐦 இதைக்கொண்டு காகம் கரைதலுக்கு பலன் கண்டு கொள்ளலாம். இப்போதும் வீட்டிற்கு அருகில் காகம் கரைந்தவுடன், 'காகம் கரைகிறது விருந்தாளி வரப்போகிறார்" என்று யு கிப்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது.

🐦 இத்தகு சிறப்புமிக்க காகம் கரைதலை விடுத்து, நடமாடும் நம்மீது விழுவது, உராய்வது, தலையில் தட்டிவிட்டுப் போவதும் உண்டு. இது நமக்கு நன்மையை அளிக்கக் கூடியவை அல்ல.

பரிகாரம் :

🐦 பரணி, கார்த்திகை, ஆயில்யம், பு ரம், கேட்டை, பு ராடம், பு ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் காகம் மேலே விழுந்தாலோ அல்லது உரசிவிட்டுப் போனாலோ அது தோஷம் ஆகும். இதற்கு அச்சமயம் உடுத்தியிருந்த ஆடையுடன் ஸ்நானம் செய்ய தோஷ நிவர்த்தி ஆகும் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

🐦 காகம் தலையில் தட்டினால் சனீஸ்வரனின் ஆதிக்கம் அதிகரிப்பதால், அதற்கு தகுந்த பரிகாரங்களைச் செய்து சனீஸ்வரனை சாந்தியும் செய்ய வேண்டும். உடல் முழுவதும் நனைய நீராடி முடித்து அதன்பிறகு உள்ளன்போடு ஆலயத்திற்குச் சென்று எள் தீபம் ஏற்றி முறைப்படி பரிகாரம் செய்தால் காக வாகனத்தான் கனிவு காட்டுவார். காகத்திற்கும் அன்னமிடுவது நல்லது. குறிப்பு :

உங்களுக்கு பொன்னியின் செல்வன் தொடர் சரிவர கிடைக்கப்பெறவில்லை எனில் நித்ரா நாட்காட்டியின் முதற்பகுதியில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் பொன்னியின் செல்வன் தொடர் தினமும் கொடுக்கப்பட்டு வருகிறது, படித்து பயன் பெறவும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.