# கனகதாரா_ஸ்தோத்ரம்
அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய:
முக்தாமுஹுர்விதததி வதநே முராரே:
பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி
மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:
ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்
ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம்
ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம்
பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:
பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா
ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா:
காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே:
தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ
மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி:
பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:
ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந
மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம்
மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:
விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம்
ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி
ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த
மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:
இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த
ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே
திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:
தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா
மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே
துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்
நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ:
கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி
ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா
தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை
ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை
ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை
புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை
நமோஸ்து நாளீகநிபாநநாயை
நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை
நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை
நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை
நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை
நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதரவல்லபாயை
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை
நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை
சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி
சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி
த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதா
நி
மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே
யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி:
ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:
ஸந்தநோதி வசநாங்க மாநஸை:
த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே
ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே
தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே
பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே
த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம்
திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்
ருஷ்ட
ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம்
ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ
லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம்
கமலே கமலாக்ஷவல்லபே த்வம்
கருணாபுர தரங்கிதைரபாங்கை:
அவலோகய மாமகிஞ்சநாநாம்
ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:
ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம்
த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம்
குணாதிகா குருதரபாக்யபாகிந:
பவந்தி தே புவி புதபாவிதாஸயா:
# கனகதாரா_மந்திரத்தின்_அர்த்தம்
# தமிழில்...!!
1. மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல்!
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். மரகதத மாலை மலர் மொட்டுகளை மொய்கின்ற பொன்னிற கருவண்டு போல் !
மாதவன் மார்பினில் வாசம் புரிந்தங்கு மெய்சிலிர்ப்பு ஏற்றும் விழிகள். பரவும் பல் வடிவத்தின் செல்வவளம் ஆக்கிடும் திருமகளின் அழகு விழிகள் !
பரிவோடும் அந்த இரு விழிகளின் கடை நோக்கு மங்களம் எனக்கு அருள்கவே.
2. நீலமா மலரினில் உல் சென்று வெளி வந்து உலவிடும் பெண்வண்டு போல்,
நீலமா முகில் வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல் சுளன்று - கோலம் கண்டு
உடன் நாணம் ஏற மீண்டும் கீழ் வந்து மேல் சென்றிடும் குறு நகையால்
அலை மகள் கண் வரிசை என்வாழ்வில் செல்வம் எல்லாம் தருகவே.
கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
3. ஆனந்தமாய் சற்று விழிகளை மூடிய முகுந்தனை காணும் விழிகள் ஆனந்தம் தந்தபடி இமை சிறிதும் அசையாமல் இனிமையை வார்க்கும் விழிகள் மன்மத சாயலை தன்னில் ஏற்கும் விழிகள் பள்ளிகொள்ளும் பரமனின் - மனைவியாம் திருமகளின் பாதி மூடும் விழிகள் செல்வ சுகம் யாவும் தருக.
எந்த கடை பார்வை நாரணனின் கவ்ஸ்துவ மார்பினில் வாழ்கின்றதோ எந்த கடை பார்வை இந்திரனின் நீலமணி சரமாய் ஒளிர்கின்றதோ
4. எந்த கடை பார்வை சுந்தர திருமாலின் தேவைகளை தருகின்றதோ அந்த கடை பார்வை வீசிடும் கமலமகள் மங்களம் எனக்கு அருள்கவே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே.
கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே நீருண்ட மேகமாய் காருண்டு காட்சி தரும் விஷ்ணுவின் திருமார்பினில் நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னளாகி அகில உலகுக்கும் தாயுமாகி பார்கவ குலத்திற் அவதரித்து
5. பூஜை செய்வதற் உரியதாகி பரிமளிக்கும் வடிவம் எதுவோ அது என்னில் மங்களம் மழை பொலியட்டுமே மங்கலங்கள் யாயும் தன்னிடத்தில் கொண்ட மாயன் வைகுந்தன் நெஞ்சில் மதுகைடவர்யெனும் வலிமைமிகு அசுரனை மாயத திருமாலின் நெஞ்சில் மன்மதன் சென்று அமர வழிசெய்த அந்த கடல்குமரி திருவின் பார்வை புன்சிரிபேந்திடும் அந்த கடை கண் பார்வை என்னையும் அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே.
6. உலகாளும் வாய்ப்பையும் இந்திர பதவியையும் வேடிக்கையாய் கொடுக்கும் முரணை வெற்றிகொண்ட விஷ்ணுவிற்கு பெரும் ஆனந்தம் தந்து நிற்கும் நீலோத் பல மலரினில் உட்புற பகுதிபோல் நளினமாய் தோன்றிநிற்கும் நிலமகளின் கடைநோகில் ஒரு பாதி என்மீது கணமேதும் பொலியட்டுமே.
மறுமைக்கு தேவையாய் உல்லென செயல்களை செய்கின்ற தகுதி இல்லா மனிதர்கும்கூட எந்த கடை பார்வை சொர்கத்தை தருகின்றதோ..!!
7. அந்த கருணை பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிக்கும் அன்னையாம் ஸ்ரீ மகா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே கருனையெனும் அருள் காற்றினை நன்மைதர கூட்டியே வந்துநிற்கும் திருமகளின் விழியெனும் தயைகொன்ட நீருண்ட கரியமா வண்ணமேகம் ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதக குஞ்சுகலாம் எங்களுக்கு,
8. செல்வமழை பெய்து பெரும் பாவம் வறுமை நீக்கி வளம்மெல்லாம் அருளட்டுமே கலைமாமகள் என்றும் கருட கொடியானின் அலைமாமகள் என்றுமாய் நிலமாலும் சாகம்பரி என்றும் பிறை சூடும் பெம்மானின் மலைமகளும்மாய் உலகத்திலே நின்று உயிர் படைத்தது காத்து முடிப்பதை விளையாட்டென செய்பவள் மூவுலகம் ஆளும் நாராயணனின் நாயகியே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே..!!
9. நல்ல பல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேத வடிவினளே போற்றி நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதி தேவி போற்றி போற்றி எல்லை இல்லா சக்தி எனவாகி தாமரையில் அமரும் மலர்மகளே போற்றி .
எங்கும் விளங்கிடும் பூரணமே எளில்புரிச உத்தமனின் துணையே போற்றி செங்கமல மலர் போன்ற சிங்கார முகம் கொண்ட திருமகளே போற்றி போற்றி.
மந்தரமலை அசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றி போற்றி சந்திர தேவனுடன் தேவர் அமுதத்துடன் பிறந்தவளே போற்றி போற்றி!
10. நந்தகோவிந்தன் நாராயணனின் நாயகியே நிலமகளே போற்றி போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தங்கநிற தாமரையை செந்தளிர் கரமேந்தும் செந்திருவே போற்றி போற்றி தரணி மண்டலம் முழுதும் அரசாட்சி செய்கின்ற நாயகியே போற்றி போற்றி தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயை புரியும் செல்வமே போற்றி போற்றி!
11. சாந்தமென்னும் வில்லை ஏந்திடும் இராமனின் இல்லறமே போற்றி போற்றி பிருகு முனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றி போற்றி திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றி போற்றி கமலமென்னும் மலரினில் ஆலயம் கொண்டவளே இலக்சுமியே போற்றி போற்றி.
காலடிகள் மூன்றினால் உலகினை அளந்த தாமோதரனின் துணையே போற்றி கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
12. ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும் கொண்டவளே போற்றி போற்றி உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல நாயகியே போற்றி போற்றி அமரருடன் அனைவரும் அடிபணிந்தே தொழும் அலைமகளே போற்றி போற்றி.
நந்தகோபன் குமரன் நந்தகோபாலனின் நாயகியே போற்றி போற்றி செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம் பெற்றிடும் தாயே பல்வகை பதவிகள் அறியாசனகளை தருகின்ற கமலனயணி அழல் வினைகளை போக்குபவளே எங்கள் அன்ஞானம் நீக்குபலே செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே என்னையே என்றும் காப்பாய்!
13. கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே தொழுகின்ற அடியார்க்கு பொழுதெல்லாம் துணை நின்று செல்வங்கள் யாவற்றையும் முளிதாக பொலிகின்ற திருநோக்கு எவருடைய கடைகண்ணின் கருணை நோக்கு அந்த கருணை நோக்கு முரஹரியின் மனம் வாழும் திருமகளே உனது நோக்கு உன்னை ஏன் மனதாலும் மெய்யாலும் சொல்லலும் துதிசெய்து புகழ்கிறேன் நான்..!!
14. பத்ம மலரில் வாழும் பத்மினி பத்மத்தை கையேந்து பதுமை நிதியே புத்தொளி வீசும் வெண்ணாடை மணமாலையுடன் ஒளிகின்ற செல்வச்சுடரே பகவதி ஹரினாதனின் பிரனனாயகியே நெஞ்சம் எல்லாம் அறிந்தோம் ஜகம் மூவிநிற்கும் பெரும் ஐஸ்வரியம் தருபவளே...!!!
என்னிடம் கருணை காட்டு கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே அயிஸ்வரியம் தந்தருள்கவே!
15. தேவகங்கை நதியின் தூய நல்நீரினை பொற்குடத்தில் திசைகளில் மத யானைகள் ஏந்தி நீர்ராற்று திகழ்கின்ற தெய்வ அழகே தாவும் அலைகடல் அரசன் பெற்ற பெண்னே உலகம் யாவிற்குமே அன்னையே தரனிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே காலையுனை துதிசெய்கிறேன்....
அரவிந்த மலர்போன்ற அழகிய கண்ணனின் ஆனந்த காதலி நீ ஐஸ்வரியம் இல்லாமல் ஏழ்மையில் புலல்வதில் முதல்வனாய் நிற்பவன் நான் அருள்வெள்ளம் மலை மோதும் உன்கடை கண்களில் பார்வைக்கு
16. ஏங்கிநிற்கும் அடியனை உந்தயயை உண்மையாய் தேடிடும் என்னை நீ காண வேண்டும் கனக மழை பொலிகின்ற காருணிய மேகமே...
இலக்சுமியே வந்தருள்கவே கனக தாரை என்னும் துதி கேட்டு வாழ்விலே...
அயிஸ்வரியம் தந்தருள்கவே மூன்று வடிவங்களின் உருவமாய் நிற்பவள்
மூவுலகினிற்கும் தாயாம் மோகன இலச்சுமியை...!!
மேல்சொன்னை துதிகளால் நிதம் புகழும் மனிதர் எவரும்
சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறான்...!!
செல்வம்மெல்லாம் பெறுகிறான்..!!
ஜெகமிதில் மேம்பட்ட குணமெல்லாம் கைவர
பாக்கியம் பல பெறுகிறார்...!!
செல்வமெலாம் பெறுகிறார்...!!
பாக்கியம் பல பெறுகிறார்...!!
# ஓம_சிவாயநம_ஓம் …
Sunday, 2 April 2017
கனகதாரா_ஸ்தோத்ரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.