Tuesday 9 February 2016

குழந்தைகளுக்குச் சுயமாய் சிந்திக்கக் கற்றுக்கொடு.

குழந்தைகளுக்குச் சுயமாய் சிந்திக்கக் கற்றுக்கொடு. 

தீய பழக்கங்கள் உள்ள ஒரு நண்பனிடம் நட்பு வைத்துக்கொண்டால், உன் குழந்தைக்கும் அந்தப்பழக்கம் வந்துவிடக்கூடும் என நீ அஞ்சினால்  உன் வளர்ப்பு சரியில்லை என்று பொருள். 

எட்டுத்திக்கும் மனிதர்கள் நல்லது கெட்டதின் கலவையாகத்தான் இருப்பர். 

மனிதர்களை நல்லவன், கெட்டவன் என உன் முட்டாள் அளவுகோலைக் கொண்டு மதிப்பீடு செய்து வெறுத்து ஒதுக்குவதால் உனக்குத்தான் இழப்பு.

அதே சமயத்தில் ஒருவனின் தீய எண்ணத்தினால் உனக்கு ஆபத்து நேருகிறது எனத்தெரியவரும்போது அதை சரியான முறையில் கையாளவும் தெரிந்திருத்தல் வேண்டும். 

மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்க்கையில் எல்லாச் சூழ்நிலைகளுக்கும், எல்லா காலங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தும் கருத்துக்களை, அறநெறிகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை, மதங்களை வகுத்துக்கொடுக்க ஞானிகளாலும் இயலாது.

அப்படி வகுத்துக்கொடுக்கப்பட்ட வரையறைகளின் படி வாழ நீ ஒன்றும் இயந்திர மனிதன் அல்ல.   உணர்வுள்ள, உயிருள்ள மனிதன்.  உன் உணர்வுகளை முழுமையாக வாழ்.

எந்த சூழ்நிலையில் நீ எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது, சமுதாயத்திலிருந்து உன் மீது திணிக்கப்பட்ட ஒழுக்கக்கோட்பாடுகளின்படி இல்லாமல், உன் விழிப்புணர்விலிருந்து நிகழ்வதாய் இருக்கட்டும்.

இத்தகைய விழிப்புணர்வை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தரும் கல்வியே உண்மையான கல்வி.  எனவே உன் முட்டாள்தனங்களால் நிரப்பப்பட்ட மனதை குழந்தையிடம் உருவாக்காதே.   விழிப்புணர்வோடு சுதந்திரமாய் வாழக் கற்றுக்கொடு.

#ராகவேந்தர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.