Wednesday 24 February 2016

மனித உறவுகள் சீராக

🏡 இல்லத்தில்..
📴 அலுவலகத்தில்..
📳 பொது வாழ்வில்... மனித உறவுகள் சீராக இருக்க...

A 2 Z வாக்கியங்கள்....

📝 APPRECIATION --- மற்றவர்களின் நிறைகளை மனதார பாராட்டுங்கள்..

📕BEHAVIOUR ---
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புசொற்களை சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்...

📗 COMPROMISE ---
அற்பவிஷயங்களை பெரிது படுத்தாதீர்கள், நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்...

📘 DEPRESSION ---
மற்றவர்களை புரிந்து கொள்ளமுடியவில்லையே என்று சோர்வடையாதீர்கள்..

📙 EGO ------
மற்றவர்களை விட உங்களையே உயர்ந்தவர் என கர்வப்படாதீர்கள் ...

📓 FORGIVE ---
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும் எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்...

📔 GENUINENESS ----
எந்தகட்டதிலும் சந்தேகம் வேண்டாம், எந்த விஷயத்தையும் நேர்மையாக கையாளுங்கள்...

📒 HONESTY ---
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதை கெளரவமாக கருதுங்கள்...

🔖 INFERIORITY COMPLEX ---
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள், நான் சிறியவன் என்று தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்...

📝 JEALOUSY ---
பொறாமை வேண்டவே வேண்டாம்.. அது கொண்டவனையே அழிக்கும்..

📒 KINDNESS --
பொது இடங்களில் இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்...

📓 LOOSE TALK ---
சம்பந்தமில்லாமலும், அர்த்தமில்லாமலும், பின் அறியாமலும் பேச வேண்டாம்...

📙 MIS_STANDING---
மற்றவர்களை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்...

📘 NEUTRAL ---
எப்போதும் எந்த விஷயத்தையும் முடிவு எடுத்துவிட்டு பேசவேண்டாம், பேசிவிட்டு முடிவு எடுங்கள் முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்...

📗OVER EXPECTATION-
அளவுக்கு அதிகமாகவும், தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்...

📕 PATIENCE ----
சில சங்கடங்களை சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என உணருங்கள்...

📙 QUIETNESS ---
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள், அநேகப் பிரச்சனைகளுக்கு தெரியாததை பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலேயே இருந்துவிடுங்கள்...

🔖 ROUGHNESS ---
பண்பில்லாத வார்த்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்....

📝 STUBBORNNESS ----
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்...

📙 TWISTING ---
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் (பார்த்ததையும்) சொல்வதை விடுங்கள்...

📕 UNDER-ESTIMATE ---
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்...

📗 VOLUNTARY ----
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள், பின்பு அதற்கு பதில் கொடுங்கள்...

📒 WOUND ---
எந்த பேச்சும்,செயலும் யார் மனதையும் காயபடுத்தாமவல் இருக்கட்டும்....

📘 XEROX ---
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்கிறோமோ அப்படியே மற்றவர்களையும் நாம் நடத்தவேண்டும்

📔 YIELD ---
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள்.. விட்டுக்கொடுப்பவன் கெட்டுபோவதில்லை, கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை...

🔖 ZERO ---
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை ஜீரோவாகிடும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.