Sunday 21 February 2016

சங்கரரின் விளக்கம்

சங்கரரின் விளக்கம்

இந்தியாவில் அத்வைத வேதாந்தத்தின் தலைசிறந்த ஆன்மஞானியான சங்கரரைப் பற்றி ஒரு கதை உண்டு.

அவர் ஞான ஒளியூட்டம் பெற்ற மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவர்.அவர் தன் சிஷ்யர்களுக்கு எதையோ விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது சுவற்றில் ஒரு படம் வரைந்தார்.படத்தின் நடுவில் ஒரு மிக இளமையான ஒரு சிறுவனை வரைந்தார்.அவனைச்சுற்றி மிகவும் வயது முதிர்ந்த பல சிஷ்யர்கள் அமர்ந்திருப்பது போல் வரைந்தார்.

அதைக்கண்ட ஒரு சிஷ்யர், "ஐயா,ஏன் இப்படி மாற்றி வரைகிறீர்கள்.சிஷ்யர்கள் எப்படி முதியவர்களாக இருக்கிறார்கள்? குரு அல்லவா முதியவராக இருப்பார்.!"

சங்கரர் பதிலளித்தார் :

"நான் வேண்டுமென்றுதான் இப்படி வரைந்துள்ளேன்.மிகுந்த யோசனை செய்த பிறகுதான் இப்படி வரைந்தேன்.

மனம் மிகவும் வயதான ஒன்று.

மெய்யிருப்புணர்வே எப்போதும் இளமையுடன் இருக்கும்.தளிர்போல புதிதாகவே இருக்கும்.

குருவுக்கு முடிவில்லாத உண்மை தெரிந்துள்ளதால் அவர் எப்போதும் இளமையுடன் இருக்கிறார்.அவர் ஒரு சிறுவனைப்போல் தோற்றமுடையவராய் இருக்கிறார்.

சிஷ்யர்களுக்கு கவலைகள் மிகுந்த மனம் உள்ளது.

பல படலங்களால் மூடப்பட்ட மனம் அவர்களிடம் உள்ளது.இவர்களுடைய மனம் பல பிறவிகளின் சுமையை ஏந்தியவாறு வயது முதிர்ந்து காணப்படுகிறது.

அவர்களுடய மனம் எல்லாவிதமாகவும் முறைப்படுத்தப்பட்டவாறு எல்லாவித கர்மங்களையும் பதிவுகளையும் ஏற்றுக் கொண்டதாயும் இருக்கிறது.

அவர்கள் வயது முதிர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள்."

குரு அவருடைய இக்கணப் போதாய் இருக்கிறார்.அவருக்கு கடந்த காலமோ எதிர்காலமோ கிடையாது.அவர் இளைஞராக இருக்கிறார்.அவர் இப்போதுதான் பிறந்தவர் போல் இருக்கிறார்.

அவர் இக்கணம் உலகில் உதித்தவர்போல் காணப்படுகிறார்.அவர் அடுத்தடுத்து வரும் கணப்பொழுதுகளிலும் இருப்பார்.

ஆனால் இக்கணப்போதை அவர் தன்னுடன் சுமந்து செல்ல மாட்டார்.

ஆகவே நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிக புலன் உணர்ச்சியுடன்,திறந்தபடி,நீரைப்போல வழிந்தோடியவாறு இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்த ஒருவித மென்மையைக் காண்பீர்கள்.

பாறைகள் உருகுவதைப்போல்,வெண்ணை போல் மென்மையாக இருக்கும் எதையோ காண்பீர்கள்.இந்த மென்மையினூடே அன்பும் கருணையும் மேலெழுந்து வரும்.

இதை வழிந்தோட விடுங்கள்.இதை மறக்காமல் இருங்கள்-இங்கிருந்து உங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போன பிறகும் இதை மறக்காமல் இருங்கள்.

--ஓஷோ--

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.