Friday 12 February 2016

ஓஷோ தியானத்தின் பாதை- பகுதி-6

ஓஷோ  தியானத்தின் பாதை- பகுதி-6

சுற்றிலும் நடைபெறும் இயக்கங்களை எடுத்துரைக்க மட்டுமே வடிவமைக்கப்பட்டது மனிதன் பயன்படுத்தும் மொழி. இந்த வகையில் மனித மொழியின் எல்லை மிகவும் குறுகியது. இதனால்தான் மொழியால் ஆன்மாவை எடுத்துரைத்து விளக்க முடிவதேயில்லை.

பேச்சினை விளக்குவதற்காக வடிவாகிவிட்ட ஒன்றினால் எப்படி பேச்சற்ற மவுனத்தை விளக்க முடியும்?‘தியானம்’ என்ற சொல், எதையோ செய்வது எனும் பொருளைத் தருகின்றது. ஆனால், எதையும் செய்வதை குறிப்பதல்ல இப்பதம். ‘நான் தியானம்’ பண்ணிக்கிட்டிருந்தேன் என்று சொல்வது தவறு. ‘நான் தியானத்தில் இருந்தேன்’ என்பதே சரி. அன்பினைப் போன்றது தியானம். ஒருத்தர் அன்பாய் இருக்கலாம்.

அன்பில் இருக்கலாம். அன்பினை அவரால் செய்ய முடியாது. அன்பையும் கருணையையும் அவரால் பண்ண முடியாது. இதனால்தான் தியானம் என்பது புத்தியின் ஒரு நிலைப்பாடு, ஒரு தளம், என்கிறேன் நான். ஆரம்பத்திலிருந்தே இது குறித்து ஐயமற விளங்கிக் கொண்டு விடுவது தலையாயதாகும்.
(தொடரும்)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.