Tuesday, 3 November 2015

கயிலை மலை

கயிலை மலை

உயரம் 6,638 மீட்டர்கள்
அமைவிடம் திபேத் (இமயமலை தொடர்)
தொடர் இமயமலை
ஆள்கூறுகள் 31°04′N 81°18′E
கைலை மலை அல்லது கைலாசம் அல்லது கைலாயம் இமய மலைத் தொடரில் ஒரு புகழ் பெற்ற மலை முடி. இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் மிக பெரும் சிந்து ஆறும், சட்லெச்சு ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் புறப்பட்டு ஓடுகின்றது. அருகே புகழ் மிக்க இரு ஏரிகள் உள்ளன. அவையாவன மானசரோவர் ஏரியும் ராட்சதலம் ஏரியும் ஆகும். மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி என்பர். இந்து மதத்திலும் புத்த, சமண மதத்திலும் இக் கைலாய மலை பற்றி பல கதைகள் மெய்ப்பொருள் கருத்துக்கள் உள்ளன. கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் சீனாவில் இமயமலையின் வடக்கில் அமைந்துள்ளது. மானசரோவர் ஏரியும் சிந்து முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.