Friday, 13 November 2015

சூழ்நிலை

🌺🌺இன்றைய சூழ்நிலையில்

💐வீரம் என்பது
பயப்படாத மாதிரி
நடிக்கிறது;

💐புத்திசாலி என்பது
அடுத்தவனை
முட்டாளாக்குவது;

💐சந்தோஷம் என்பது
பணம் இருப்பதாய்
காட்டி கொள்வது;

💐அமைதி எனப்படுவது
அடுத்து என்ன பேசனும்னு
தெரியாமலிருப்பது;

💐குற்றம் என்பது
அடுத்தவர் செய்யும்போது
தெரிவது;

💐தன்னிலைவிளக்கம் என்பது
தன் தவறுக்கு
சால்ஜாப்பு சொல்வது;

💐பொதுசனம் என்பது
கூடி நின்று
வேடிக்கை பார்ப்பது;

💐தலைவர் என்பது
ஊரை அடித்து
உலையில் போடுவது;

💐தானம் என்பது
வீட்டில் உள்ள
பழையதை கொடுப்பது;

💐பணிவு என்பது
மரியாதை இருப்பதுபோல்
நடிப்பது;

💐காதல் என்பது
இரண்டு பேரும் சேர்ந்து
பொய் சொல்வது;

💐கல்வி என்பது
காப்பி பேஸ்ட்
செய்வது;

💐நேர்மை என்பது
நூறை திருப்பிக் கொடுத்து
இருநூறாய் கேட்பது;

💐நல்லவன் என்பது
கஷ்டப் பட்டு
நடிப்பது;

💐எதார்த்தம் என்பது
நெல்லை விற்றுவிட்டு
அரிசி வாங்கிக்கொள்வது;

💐மனிதன் என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது;

💐சிரிப்பு என்பது
அடுத்தவன் விழும்போது
வருவது;

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.