Tuesday, 3 November 2015

அக்னிஹோத்ரம்

போபால் விஷ வாயு கேள்விபட்டிருபீர்கள்
லக்ஷம் மக்கள் இறந்தார்கள்
ஆனால் ஒரு குடும்பம் பிழைத்தது அவர்கள்
வீட்டில்
அக்னி ஹோத்ரம் வளர்த்தார்கள் அகவே அவர்கள்
குடும்பம் பிழைத்தது
அக்னிஹோத்ரம் நாம் தினமும்
காலையில்,மாலையில் செய்து வந்தால் நம்
குடும்பத்திற்கு நன்மை மட்டுமே நடக்கும்
என்பது சாஸ்திரம் .இது அனைவரும் செய்யலாம்
ஆனால் குழந்தைகள் செய்ய கூடாது
வயதுவந்தவர்கள் மற்றும் பெரியவர்கள் தான்
செய்யவேண்டும் .
அக்னிஹோத்ரம்செய்ய தேவையான பொருட்கள்
1) சிறிய ஹோம குண்டம்,
ஒரு அடி அகலம் ஒரு அடி நீளம் அரை அடி ஆழம்
கொண்ட செம்பு உலோக பாத்திரம் அல்லது மண்
பாண்டத்தை குண்டமாக பயன்படுத்தலாம்.
தினமும் வீட்டில் ஒரே இடத்தில் நிரந்தரமாக செய்ய
சதுரமாக குழி தோண்டி அதில் சாணம்
கொண்டு மொழுகி பயன்படுத்தலாம்.
2) சாண வறட்டி
சிறிய அளவிலான வறட்டிகள் போதுமானது.
3) முனை உடையாத பச்சரிசி.
இரு பக்க முனைகளும் உடையாத பச்சரிசி
தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். நூறு
கிராம் பச்சரிசி ஒரு மாதத்திற்கு மேல்
பயன்படுத்த முடியும். காரணம் ஒரு சிட்டிகை
அளவே அரிசி தினமும் பயன்படுத்த போகிறோம்.
4) பசு நெய்
சிறிது அளவு போதுமானது. அதிகமான
பொருட்களை நாம் அக்னியில் இடுவதில்லை.
இது போக நெய் ஊற்ற சிறிய கரண்டி. அவ்வளவு
தான்.
அக்னி ஹோத்ரம் செய்யக்கூடிய நேரம் :
சூரிய உதிக்கும் நேரம் மற்றும் சூரிய அஸ்தமன
நேரம்.
நேரம் மிகத்துல்லியமாக கணிக்க வேண்டும்.
சூரிய அஸ்தமன/ உதய நேரத்திற்கு முன் சில
நிமிடங்களில் துவங்க வேண்டும்.
சரியான அஸ்தமன/ உதய நேரத்தில் பொருட்களை
அக்னியில் சேர்க்க வேண்டும்.
இந்த நடைமுறை மிக முக்கியமானது.
அக்னிஹோத்ரம் செய் முறை :
ஹோம குண்டத்திற்கு திலகம் இட்டு வணங்கவும்.
பின் சாண வறட்டியை இரண்டு மூன்று
துண்டுகளாக்கி குண்டத்தில் அடுக்கவும்.
வறட்டியில் சிறிது நெய் துளிகள் விட்டு,
வரட்டியில் நெருப்பை ஏற்றவும்.
நன்றாக வறட்டி எறியும் வரை காத்திருக்கவும்.
அக்னி நன்றாக உயர்ந்த நிலையில் சிறிது
பச்சரிசி எடுத்துக்கொண்டு சில துளி
நெய்யுடன் கலக்கவும். மந்திரம் கூறி அக்னியில்
சேர்க்கவும்.
இரு மந்திரங்கள் கூறுவதால் இரு முறை
மட்டுமே அக்னியில் அரிசியை சேர்த்தால்
போதுமானது.
அக்னியை வணங்கி அக்னிஹோத்ரத்தை
நிறைவு செய்யவும்..
அக்னி ஹோத்ரத்தில் கூற வேண்டி மந்திரம் :
சூரிய உதய காலத்தில் கூறும் மந்திரம்
சூர்யாய ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை
அக்னியில் சேர்க்கவும்)
சூர்யாய இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி
அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
சூரிய அஸ்தமனத்தில் கூற வேண்டிய மந்திரம்
அக்னியே ஸ்வாஹா ( முதல் பகுதி அரிசியை
அக்னியில் சேர்க்கவும்)
அக்னியே இதம் நமஹா
ப்ரஜாபதியே ஸ்வாஹா ( இரண்டாம் பகுதி
அரிசியை அக்னியில் சேர்க்கவும்)
ப்ரஜாபதியே இதம் நமஹா
Ramakrishnan Thambiran
அக்னிஹோத்ரம் செய்வதற்கு உகந்த, நேரத்தை
நீங்கள் இருக்கும் இடத்தின், (அட்சய ரேகை, தீர்க்க
ரேகை), சூரிய உதய நேரம், சூரிய அஸ்தமன
நேரம் கொண்டு துல்லியமான அக்னிஹோத்ர
நேரத்தை மற்றும் அதன் காலத்திற்கு ஏற்ற
மந்திரத்தை காட்டும் கடிகை என்னும்
விண்டோஸ் போனிற்க்காக (Windows phone)
மென்பொருள் செய்துள்ளேன். இது
அக்னிஹோத்ரம் மட்டுமின்றி, மிக முக்கியமான
ஹோரை, குளிகன், இராகுகாலம், எமகண்டம்,
சூரிய உதய மற்றும் மறைவு நேரங்கள், பருவ
காலங்கள் மற்றும் வேறு பல விஷயங்களை
காட்டுகிறது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.