Friday 6 November 2015

விவேகானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி
விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...
உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு
ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும்
மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக
ஆழமான பரந்த பொருளை கொண்டவை.
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே
நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது
உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால்
மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு
மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை
பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல்
தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது.
நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால்
அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த
சோதனையின் மூலம் அவர்கள்
மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல
மாட்டார்கள். (By experience their life becomes better, not
bitter!)
சுவாமி விவேகானந்தர் : அப்போது,
சோதனைகள் நன்மைக்கு என்று
சொல்கிறீர்களா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை
விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை.
அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு
பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற
பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள்
எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே
பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு
புரியாது. உனக்குள்ளே பார். புரியும்.
கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால்
உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes
provide sight. Heart provides the way.)
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில்
போகும்போதும் தோல்வி அடிக்கடி
ஏற்படுகிறதே?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும்
பாதையில் வெற்றி என்பது பிறரால்
அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும்
திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே
உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான
சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம்
குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி
எப்படி போகப்போகிறோம் என்று
அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி
வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து
வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த
வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை
நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது
“எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று
கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை. அதை நினைத்து தான்
வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச்
சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை
வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை
நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை
அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே
வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற
கடைபிடிக்கவேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு
கேள்வி. சில நேரங்களில் என்னுடைய
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ
என்று தோன்றுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத
பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There
are no unanswered prayers!) அச்சத்தை விடு.
நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு
காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர
பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று
மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக
மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.