Tuesday, 3 November 2015

கண்ணன் சொன்ன பாடம்

ஹிந்து தர்ம சிந்தனைகள் 45 :
உதங்க முனிவருக்கு கண்ணன் சொன்ன பாடம் :
வர்ணம் என்ற விஷயத்தை ஏதோ பெரிய கேடு போல
சொல்லும் போது வர்ணம் குறித்தகண்ணனின்
விளக்கத்தையும் அதன் தொடர்பான ஒரு
கதையையும் சொல்ல விழைகிறேன்!!
கண்ணனின் சொல் : வர்ணங்கள் உண்டு !! ஆனால் வர்ண
பேதங்கள் இல்லை!! இதையே என் தத்துவம்என்று
அறிவாயாக!!
கண்ணனின் காலத்தில் உதங்க முனிவர் என்ற ஒரு
பெரும் தவ ஸ்ரேஷ்டர்இருந்தார்!! பற்றை அறுத்து
நெடுங்காலமாக கானகத்தில் அலைந்து
கடுந்தவம்இருந்து வந்தார்!! அவருக்கு மோட்சம் தர
எண்ணிய கண்ணன் அதற்கு முன் ஒருபரீட்சை
வைத்தான்!!
ஒரு நாள் உதங்கர் தவம் செய்த இடத்துக்குதேரில் வந்த
கண்ணன் அவரை வணங்க உதங்கர் கண்ணனைப்
பணிந்து துதித்தார்!!கண்ணன் அவரிடம்
(சாதாரணமாக கண்ணன் யாருக்கும் சுலபமாக
வரங்கள் தருவதில்லை!)என்ன வரம் வேண்டும்
கேளுங்கள் என்றான்! முனிவரோ ''கண்ணா நான்
ஆசைகளைஅறுத்து இறுதி நாட்களை தவம் செய்து
கழிக்கிறேன் எனக்கு என்ன வரம் வேண்டும்சொல் உன்
அருள் இருந்தாலே போதும்'' என்றார் !! கண்ணன்
விடாப்பிடியாகவற்புறுத்திக் கேட்கவும் முனிவர் "
எனக்கு ஒரு குறையுமில்லை கண்ணா!காட்டில்
கிடைக்கும் கனிவகைகளை உண்கிறேன்! ஆனால்
சமயங்களில் தாகம் மிகும்நேரம் பக்கத்தில்
நீர்நிலைகள் இல்லாமல் போகிறது!! அதற்காக
நெடுந்தூரம்அலைவதில் தவம் தடைபடுகிறது!!
அதனால் அவ்வாறான நேரங்களில் எனக்கு
தடையின்றிநீர் கிடைக்க அருளினால் போதும்!!''
என்றார்!! அவ்வாறே அருளிச் சென்றான்கண்ணன்!!
பல நாட்கள் கழித்து ஒரு நாள் முனிவருக்கு தாகம்
மேலிடநீர்நிலைகளைத் தேடினார் எங்கும் இல்லை!!
அடடா இந்தக் கண்ணன் நமக்கு வரம்தந்தானே ஆனால்
இப்போது நீர் எங்குமே இல்லையே இது என்ன
சோதனை என்றுஎண்ணினார் முனிவர்! அந்நேரம்
அங்கு ஒரு புலையன் நடந்து வந்தான்! அவன்கையில்
வில் அம்பும் தோளில் ஒரு நீர்க்குடுக்கையும்
இருந்தது! அவன் நேராகமுனிவரிடம் வந்து '
முனிவரே தாகமாக உள்ளதா?? தண்ணீர்
வேண்டுமா??' எனக்கேட்டு நீர்க்குடுக்கைய
ை எடுத்தான்!! அவன் நான்காம் வர்ணம்
என்பதால்அருவருப்படைந்த முனிவர் மனதுக்குள்
கண்ணா நீ தந்த வரம் இப்படியா வேலை
செய்யவேண்டும் என நினைத்து அவனை
வெறுப்பாகப் பார்த்தவாறே பேசாமல் நின்றார்!!
புலையன் அவரை சிறிது நேரம் ஆச்சரியமாகப்
பார்த்துப் பின் மறைந்து போனான்!!
அப்போது அங்கு கண்ணபிரான் பிரத்தியட்சமானா
ன்!! முனிவர் அவனிடம் கோபமாக உன்வரம் பலிக்கும்
விதம் இதுதானா என்று கேட்டார்!! கண்ணன்
சிரித்தவாறேசொன்னான் "அட முட்டாள் முனிவனே!!
வர்ணங்கள் உண்டு வர்ணபேதங்கள் கிடையாதுஎன்பதே
என் தத்துவம்!! இதை நீ அறியாதது உன்
பக்குவமின்மையைக் காட்டுகிறது!!உண்மையில்
புலையன் வேடமிட்டு வந்தவன் இந்திரன்!! அவன்
குடுக்கையில்இருந்தது முக்தியைத் தரும்
அமிர்தம்!! வர்ணத்தின் பால் கொண்ட மயக்கத்தால்நீ
மோட்சம் பெரும் அருமையான வாய்ப்பை இழந்தாய்!!
இனி மோட்சம் பெற நீ பலப்பலபிறவிகளை எடுத்து
உழன்றே ஆக வேண்டும்!!!' என்று சொல்லி
மறைந்தான்!!!
இப்போது சிந்தியுங்கள் வர்ணம் வேறுபாடுகளைப்
போதித்ததா என???

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.