Thursday, 26 November 2015

பதில்

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்…

சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)

சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.

சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை….

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)

சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில் போகும்போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.

சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.

சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.

சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.

சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.

✅இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு. ,

Wednesday, 25 November 2015

10 பொறுத்தம்

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்

1 தினப் பொருத்தம்
தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2 கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

3 மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

4 ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

5 யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.

6 ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர�
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.

7 ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.

8 வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.

9 ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

10 வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

நல்லதே நடக்கும்

Monday, 23 November 2015

1000 சிவன் பெயர்

சிவபெருமானின் 1000 தமிழ்ப் பெயர்கள்
1 Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
2 Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
3 Adaivorkkiniyan - அடைவோர்க்கினியன்
4 Adalarasan - ஆடலரசன்
5 Adalazagan - ஆடலழகன்
6 Adalerran - அடலேற்றன்
7 Adalvallan - ஆடல்வல்லான்
8 Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
9 Adalvidaiyan - அடல்விடையான். 10 Adangakkolvan - அடங்கக்கொள்வான்
11 Adarchadaiyan - அடர்ச்சடையன்
12 Adarko - ஆடற்கோ
13 Adhaladaiyan - அதலாடையன்
14 Adhi - ஆதி
15 Adhibagavan - ஆதிபகவன்
16 Adhipuranan - ஆதிபுராணன்
17 Adhiraiyan - ஆதிரையன்
18 Adhirthudiyan - அதிர்துடியன்
19 Adhirunkazalon - அதிருங்கழலோன்
20 Adhiyannal - ஆதியண்ணல்
21 Adikal - அடிகள்
22 Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
23 Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
24 Adumnathan - ஆடும்நாதன்
25 Agamabodhan - ஆகமபோதன்
26 Agamamanon - ஆகமமானோன்
27 Agamanathan - ஆகமநாதன்
28 Aimmukan - ஐம்முகன்
29 Aindhadi - ஐந்தாடி
30 Aindhukandhan - ஐந்துகந்தான்
31 Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
32 Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
33 Ainthozilon - ஐந்தொழிலோன்
34 Aivannan - ஐவண்ணன்
35 Aiyamerpan - ஐயமேற்பான்
36 Aiyan - ஐயன்
37 Aiyar - ஐயர்
38 Aiyaranindhan - ஐயாறணிந்தான்
39 Aiyarrannal - ஐயாற்றண்ணல்
40 Aiyarrarasu - ஐயாற்றரசு
41 Akandan - அகண்டன்
42 Akilankadandhan - அகிலங்கடந்தான்
43 Alagaiyanrozan - அளகையன்றோழன்
44 Alakantan - ஆலகண்டன்
45 Alalamundan - ஆலாலமுண்டான்
46 Alamarchelvan - ஆலமர்செல்வன்
47 Alamardhevan - ஆலமர்தேன்
48 Alamarpiran - ஆலமர்பிரான்
49 Alamidarran - ஆலமிடற்றான்
50 Alamundan - ஆலமுண்டான்
51 Alan - ஆலன்
52 Alaniizalan - ஆலநீழலான்
53 Alanthurainathan - ஆலந்துறைநாதன்
54 Alappariyan - அளப்பரியான்
55 Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
56 Alavayadhi - ஆலவாய்ஆதி
57 Alavayannal - ஆலவாயண்ணல்
58 Alavilan - அளவிலான்
59 Alavili - அளவிலி
60 Alavilpemman - ஆலவில்பெம்மான்
61 Aliyan - அளியான்
62 Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
63 Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
64 Aluraiadhi - ஆலுறைஆதி
65 Amaivu - அமைவு
66 Amaiyanindhan - ஆமையணிந்தன்
67 Amaiyaran - ஆமையாரன்
68 Amaiyottinan - ஆமையோட்டினன்
69 Amalan - அமலன்
70 Amararko - அமரர்கோ
71 Amararkon - அமரர்கோன்
72 Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
73 Ambalaththiisan - அம்பலத்தீசன்
74 Ambalavan - அம்பலவான்
75 Ambalavanan - அம்பலவாணன்
76 Ammai - அம்மை
77 Amman - அம்மான்
78 Amudhan - அமுதன்
79 Amudhiivallal - அமுதீவள்ளல்
80 Anaiyar - ஆனையார்
81 Anaiyuriyan - ஆனையுரியன்
82 Anakan - அனகன்
83 Analadi - அனலாடி
84 Analendhi - அனலேந்தி
85 Analuruvan - அனலுருவன்
86 Analviziyan - அனல்விழியன்
87 Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
88 Anandhan - ஆனந்தன்
89 Anangkan - அணங்கன்
90 Ananguraipangan - அணங்குறைபங்கன்
91 Anarchadaiyan - அனற்சடையன்
92 Anarkaiyan - அனற்கையன்
93 Anarrun - அனற்றூண்
94 Anathi - அனாதி
95 Anay - ஆனாய்
96 Anban - அன்பன்
97 Anbarkkanban - அன்பர்க்கன்பன்
98 Anbudaiyan - அன்புடையான்
99 Anbusivam - அன்புசிவம்
100 Andakai - ஆண்டகை
101 Andamurththi - அண்டமூர்த்தி
102 Andan - அண்டன்
103 Andan - ஆண்டான்
104 Andavan - ஆண்டவன்
105 Andavanan - அண்டவாணன்
106 Andhamillariyan - அந்தமில்லாரியன்
107 Andhivannan - அந்திவண்ணன்
108 Anekan - அனேகன்/அநேகன்
109 Angkanan - அங்கணன்
110 Anip Pon - ஆணிப் பொன்
111 Aniyan - அணியன்
112 Anna - அண்ணா
113 Annai - அன்னை
114 Annamalai - அண்ணாமலை
115 Annamkanan - அன்னம்காணான்
116 Annal - அண்ணல்
117 Anthamillan - அந்தமில்லான்
118 Anthamilli - அந்தமில்லி
119 Anthanan - அந்தணன்
120 Anthiran - அந்திரன்
121 Anu - அணு
122 Anychadaiyan - அஞ்சடையன்
123 Anychadiyappan - அஞ்சாடியப்பன்
124 Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
125 Anychaiyappan - அஞ்சையப்பன்
126 Anychezuththan - அஞ்செழுத்தன்
127 Anychezuththu - அஞ்செழுத்து
128 Appanar - அப்பனார்
129 Araamuthu - ஆராஅமுது
130 Aradharanilayan - ஆறாதாரநிலயன்
131 Araiyaniyappan - அறையணியப்பன்
132 Arakkan - அறக்கண்
133 Arakkodiyon - அறக்கொடியோன்
134 Aran - அரன்
135 Aranan - ஆரணன்
136 Araneri - அறநெறி
137 Aranivon - ஆறணிவோன்
138 Araravan - ஆரரவன்
139 Arasu - அரசு
140 Araththurainathan - அரத்துறைநாதன்
141 Aravachaiththan - அரவசைத்தான்
142 Aravadi - அரவாடி
143 Aravamudhan - ஆராவமுதன்
144 Aravan - அறவன்
145 Aravaniyan - அரவணியன்
146 Aravanychudi - அரவஞ்சூடி
147 Aravaraiyan - அரவரையன்
148 Aravarcheviyan - அரவா
149 Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
150 Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
151 Aravendhi - அரவேந்தி
152 Aravidaiyan - அறவிடையான்
153 Arazagan - ஆரழகன்
154 Arccithan - அர்ச்சிதன்
155 Archadaiyan - ஆர்சடையன்
156 Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
157 Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
158 Arikkumariyan - அரிக்குமரியான்
159 Arivaipangan - அரிவைபங்கன்
160 Arivan - அறிவன்
161 Arivu - அறிவு
162 Arivukkariyon - அறிவுக்கரியோன்
163 Ariya Ariyon - அரியஅரியோன்
164 Ariya Ariyon - அறியஅரியோன்
165 Ariyan - ஆரியன்
166 Ariyan - அரியான்
167 Ariyasivam - அரியசிவம்
168 Ariyavar - அரியவர்
169 Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
170 Ariyorukuran - அரியோருகூறன்
171 Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
172 Arpudhan - அற்புதன்
173 Aru - அரு
174 Arul - அருள்
175 Arulalan - அருளாளன்
176 Arulannal - அருளண்ணல்
177 Arulchodhi - அருள்சோதி
178 Arulirai - அருளிறை
179 Arulvallal - அருள்வள்ளல்
180 Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
181 Arulvallan - அருள்வல்லான்
182 Arumalaruraivan - அறுமலருறைவான்
183 Arumani - அருமணி
184 Arumporul - அரும்பொருள்
185 Arunmalai - அருண்மலை
186 Arunthunai - அருந்துணை
187 Aruran - ஆரூரன்
188 Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
189 Arurmudiyan - ஆறூர்முடியன்
190 Arut Kuththan - அருட்கூத்தன்
191 Arutchelvan - அருட்செல்வன்
192 Arutchudar - அருட்சுடர்
193 Aruththan - அருத்தன்
194 Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
195 Arutpizambu - அருட்பிழம்பு
196 Aruvan - அருவன்
197 Aruvuruvan - அருவுருவன்
198 Arvan - ஆர்வன்
199 Athikunan - அதிகுணன்
200 Athimurththi - ஆதிமூர்த்தி
201 Athinathan - ஆதிநாதன்
202 Athipiran - ஆதிபிரான்
203 Athisayan - அதிசயன்
204 Aththan - அத்தன்
205 Aththan - ஆத்தன்
206 Aththichudi - ஆத்திச்சூடி
207 Atkondan - ஆட்கொண்டான்
208 Attugappan - ஆட்டுகப்பான்
209 Attamurthy - அட்டமூர்த்தி
210 Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
211 Avinasi - அவிநாசி
212 Avinasiyappan - அவிநாசியப்பன்
213 Avirchadaiyan - அவிர்ச்சடையன்
214 Ayavandhinathan - அயவந்திநாதன்
215 Ayirchulan - அயிற்சூலன்
216 Ayizaiyanban - ஆயிழையன்பன்
217 Azagukadhalan - அழகுகாதலன்
218 Azakan - அழகன்
219 Azal Vannan - அழல்வண்ணன்
220 Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
221 Azalmeni - அழல்மேனி
222 Azarkannan - அழற்கண்ணன்
223 Azarkuri - அழற்குறி
224 Azicheydhon - ஆழிசெய்தோன்
225 Azi Indhan - ஆழி ஈந்தான்
226 Azivallal - ஆழிவள்ளல்
227 Azivilan - அழிவிலான்
228 Aziyan - ஆழியான்
229 Aziyar - ஆழியர்
230 Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
231 Bagampennan - பாகம்பெண்ணன்
232 Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
233 Budhappadaiyan - பூதப்படையன்
234 Budhavaninathan - பூதவணிநாதன்
235 Buvan - புவன்
236 Buvanankadandholi - புவனங்கடந்தொளி
237 Chadaimudiyan - சடைமுடியன்
238 Chadaiyan - சடையன்
239 Chadaiyandi - சடையாண்டி
240 Chadaiyappan - சடையப்பன்
241 Chalamanivan - சலமணிவான்
242 Chalamarchadaiyan - சலமார்சடையன்
243 Chalanthalaiyan - சலந்தலையான்
244 Chalanychadaiyan - சலஞ்சடையான்
245 Chalanychudi - சலஞ்சூடி
246 Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
247 Changarthodan - சங்கார்தோடன்
248 Changarulnathan - சங்கருள்நாதன்
249 Chandramouli - சந்ரமௌலி
250 Chargunanathan - சற்குணநாதன்
251 Chattainathan - சட்டைநாதன்
252 Chattaiyappan - சட்டையப்பன்
253 Chekkarmeni - செக்கர்மேனி
254 Chemmeni - செம்மேனி
255 Chemmeni Nathan - செம்மேனிநாதன்
256 Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
257 Chemmeniyamman - செம்மேனியம்மான்
258 Chempavalan - செம்பவளன்
259 Chemporchodhi - செம்பொற்சோதி
260 Chemporriyagan - செம்பொற்றியாகன்
261 Chemporul - செம்பொருள்
262 Chengkankadavul - செங்கன்கடவுள்
263 Chenneriyappan - செந்நெறியப்பன்
264 Chenychadaiyan - செஞ்சடையன்
265 Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
266 Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
267 Cherakkaiyan - சேராக்கையன்
268 Chetchiyan - சேட்சியன்
269 Cheyizaibagan - சேயிழைபாகன்
270 Cheyizaipangan - சேயிழைபங்கன்
271 Cheyyachadaiyan - செய்யச்சடையன்
272 Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
273 Chiththanathan - சித்தநாதன்
274 Chittan - சிட்டன்
275 Chivan - சிவன்
276 Chodhi - சோதி
277 Chodhikkuri - சோதிக்குறி
278 Chodhivadivu - சோதிவடிவு
279 Chodhiyan - சோதியன்
280 Chokkalingam - சொக்கலிங்கம்
281 Chokkan - சொக்கன்
282 Chokkanathan - சொக்கநாதன்
283 Cholladangan - சொல்லடங்கன்
284 Chollarkariyan - சொல்லற்கறியான்
285 Chollarkiniyan - சொல்லற்கினியான்
286 Chopura Nathan - சோபுரநாதன்
287 Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
288 Chudalaiyadi - சுடலையாடி
289 Chudar - சுடர்
290 Chudaramaimeni - சுடரமைமேனி
291 Chudaranaiyan - சுடரனையான்
292 Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
293 Chudarendhi - சுடரேந்தி
294 Chudarkkannan - சுடர்க்கண்ணன்
295 Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
296 Chudarkuri - சுடற்குறி
297 Chudarmeni - சுடர்மேனி
298 Chudarnayanan - சுடர்நயனன்
299 Chudaroli - சுடரொளி
300 Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
301 Chudarviziyan - சுடர்விழியன்
302 Chulaithiirththan - சூலைதீர்த்தான்
303 Chulamaraiyan - சூலமாரையன்
304 Chulappadaiyan - சூலப்படையன்
305 Dhanu - தாணு
306 Dhevadhevan - தேவதேவன்
307 Dhevan - தேவன்
308 Edakanathan - ஏடகநாதன்
309 Eduththapadham - எடுத்தபாதம்
310 Ekamban - ஏகம்பன்
311 Ekapathar - ஏகபாதர்
312 Eliyasivam - எளியசிவம்
313 Ellaiyiladhan - எல்லையிலாதான்
314 Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
315 Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
316 Emperuman - எம்பெருமான்
317 Enakkomban - ஏனக்கொம்பன்
318 Enanganan - ஏனங்காணான்
319 Enaththeyiran - ஏனத்தெயிறான்
320 Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
321 Engunan - எண்குணன்
322 Enmalarchudi - எண்மலர்சூடி
323 Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
324 Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
325 Ennuraivan - எண்ணுறைவன்
326 Ennuyir - என்னுயிர்
327 Enrumezilan - என்றுமெழிலான்
328 Enthai - எந்தை
329 Enthay - எந்தாய்
330 En Tholar - எண் தோளர்
331 Entolan - எண்டோளன்
332 Entolavan - எண்டோளவன்
333 Entoloruvan - எண்டோளொருவன்
334 Eramarkodiyan - ஏறமர்கொடியன்
335 Ereri - ஏறெறி
336 Eripolmeni - எரிபோல்மேனி
337 Eriyadi - எரியாடி
338 Eriyendhi - எரியேந்தி
339 Erran - ஏற்றன்
340 Erudaiiisan - ஏறுடைஈசன்
341 Erudaiyan - ஏறுடையான்
342 Erudheri - எருதேறி
343 Erudhurvan - எருதூர்வான்
344 Erumbiisan - எரும்பீசன்
345 Erurkodiyon - ஏறூர்கொடியோன்
346 Eruyarththan - ஏறுயர்த்தான்
347 Eyilattan - எயிலட்டான்
348 Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
349 Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
350 Ezukadhirmeni - எழுகதிமேனி
351 Ezulakali - ஏழுலகாளி
352 Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
353 Gangaichchadiayan - கங்கைச்சடையன்
354 Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
355 Gangaichudi - கங்கைசூடி
356 Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
357 Gnanakkan - ஞானக்கண்
358 Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
359 Gnanamurththi - ஞானமூர்த்தி
360 Gnanan - ஞானன்
361 Gnananayakan - ஞானநாயகன்
362 Guru - குரு
363 Gurumamani - குருமாமணி
364 Gurumani - குருமணி
365 Idabamurvan - இடபமூர்வான்
366 Idaimarudhan - இடைமருதன்
367 Idaiyarrisan - இடையாற்றீசன்
368 Idaththumaiyan - இடத்துமையான்
369 Ichan - ஈசன்
370 Idili - ஈடிலி
371 Iirottinan - ஈரோட்டினன்
372 Iisan - ஈசன்
373 Ilakkanan - இலக்கணன்
374 Ilamadhichudi - இளமதிசூடி
375 Ilampiraiyan - இளம்பிறையன்
376 Ilangumazuvan - இலங்குமழுவன்
377 Illan - இல்லான்
378 Imaiyalkon - இமையாள்கோன்
379 Imaiyavarkon - இமையவர்கோன்
380 Inaiyili - இணையிலி
381 Inamani - இனமணி
382 Inban - இன்பன்
383 Inbaniingan - இன்பநீங்கான்
384 Indhusekaran - இந்துசேகரன்
385 Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
386 Iniyan - இனியன்
387 Iniyan - இனியான்
388 Iniyasivam - இனியசிவம்
389 Irai - இறை
390 Iraivan - இறைவன்
391 Iraiyan - இறையான்
392 Iraiyanar - இறையனார்
393 Iramanathan - இராமநாதன்
394 Irappili - இறப்பிலி
395 Irasasingkam - இராசசிங்கம்
396 Iravadi - இரவாடி
397 Iraviviziyan - இரவிவிழியன்
398 Irilan - ஈறிலான் -
399 Iruvareththuru - இருவரேத்துரு
400 Iruvarthettinan - இருவர்தேட்டினன்
401 Isaipadi - இசைபாடி
402 Ittan - இட்டன்
403 Iyalbazagan - இயல்பழகன்
404 Iyamanan - இயமானன்
405 Kadaimudinathan - கடைமுடிநாதன்
406 Kadalvidamundan - கடல்விடமுண்டான்
407 Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
408 Kadavul - கடவுள்
409 Kadhir Nayanan - கதிர்நயனன்
410 Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
411 Kaichchinanathan - கைச்சினநாதன்
412 Kalabayiravan - காலபயிரவன்
413 Kalai - காளை
414 Kalaikan - களைகண்
415 Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
416 Kalaiyan - கலையான்
417 Kalaiyappan - காளையப்பன்
418 Kalakalan - காலகாலன்
419 Kalakandan - காளகண்டன்
420 Kalarmulainathan - களர்முளைநாதன்
421 Kalirruriyan - களிற்றுரியன்
422 Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
423 Kallalnizalan - கல்லால்நிழலான்
424 Kalvan - கள்வன்
425 Kamakopan - காமகோபன்
426 Kamalapathan - கமலபாதன்
427 Kamarkayndhan - காமற்காய்ந்தான்
428 Kanaladi - கனலாடி
429 Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
430 Kanalendhi - கனலேந்தி
431 Kanalmeni - கனல்மேனி
432 Kanalviziyan - கனல்விழியன்
433 Kananathan - கணநாதன்
434 Kanarchadaiyan - கனற்ச்சடையன்
435 Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
436 Kandan - கண்டன்
437 Kandthanarthathai - கந்தனார்தாதை
438 Kandikaiyan - கண்டிகையன்
439 Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
440 Kangkalar - கங்காளர்
441 Kangkanayakan - கங்காநாயகன்
442 Kani - கனி
443 Kanichchivanavan - கணிச்சிவாணவன்
444 Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
445 Kanna - கண்ணா
446 Kannalan - கண்ணாளன்
447 Kannayiranathan - கண்ணாயிரநாதன்
448 Kannazalan - கண்ணழலான்
449 Kannudhal - கண்ணுதல்
450 Kannudhalan - கண்ணுதலான்
451 Kantankaraiyan - கண்டங்கறையன்
452 Kantankaruththan - கண்டங்கருத்தான்
453 Kapalakkuththan - காபாலக்கூத்தன்
454 Kapali - கபாலி
455 Kapali - காபாலி
456 Karaikkantan - கறைக்கண்டன்
457 Karaimidarran - கறைமிடற்றன்
458 Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
459 Karanan - காரணன்
460 Karandthaichchudi - கரந்தைச்சூடி
461 Karaviiranathan - கரவீரநாதன்
462 Kariyadaiyan - கரியாடையன்
463 Kariyuriyan - கரியுரியன்
464 Karpaganathan - கற்பகநாதன்
465 Karpakam - கற்பகம்
466 Karraichchadaiyan - கற்றைச்சடையன்
467 Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
468 Karumidarran - கருமிடற்றான்
469 Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
470 Karuththan - கருத்தன்
471 Karuththan - கருத்தான்
472 Karuvan - கருவன்
473 Kathalan - காதலன்
474 Kattangkan - கட்டங்கன்
475 Kavalalan - காவலாளன்
476 Kavalan - காவலன்
477 Kayilainathan - கயிலைநாதன்
478 Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
479 Kayilaimalaiyan - கயிலைமலையான்
480 Kayilaimannan - கயிலைமன்னன்
481 Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
482 Kayilaipperuman - கயிலைபெருமான்
483 Kayilaivendhan - கயிலைவேந்தன்
484 Kayilaiyamarvan - கயிலையமர்வான்
485 Kayilaiyan - கயிலையன்
486 Kayilaiyan - கயிலையான்
487 Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
488 Kayilayanathan - கயிலாயநாதன்
489 Kazarchelvan - கழற்செல்வன்
490 Kedili - கேடிலி
491 Kediliyappan - கேடிலியப்பன்
492 Kezalmaruppan - கேழல்மறுப்பன்
493 Kezarkomban - கேழற்கொம்பன்
494 Kiirranivan - கீற்றணிவான்
495 Ko - கோ
496 Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
497 Kodikkuzagan - கோடிக்குழகன்
498 Kodukotti - கொடுகொட்டி
499 Kodumudinathan - கொடுமுடிநாதன்
500 Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
501 Kokazinathan - கோகழிநாதன்
502 Kokkaraiyan - கொக்கரையன்
503 Kokkiragan - கொக்கிறகன்
504 Kolachchadaiyan - கோலச்சடையன்
505 Kolamidarran - கோலமிடற்றன்
506 Koliliyappan - கோளிலியப்பன்
507 Komakan - கோமகன்
508 Koman - கோமான்
509 Kombanimarban - கொம்பணிமார்பன்
510 Kon - கோன்
511 Konraialangkalan - கொன்றை அலங்கலான்
512 Konraichudi - கொன்றைசூடி
513 Konraiththaron - கொன்றைத்தாரோன்
514 Konraivendhan - கொன்றைவேந்தன்
515 Korravan - கொற்றவன்
516 Kozundhu - கொழுந்து
517 Kozundhunathan - கொழுந்துநாதன்
518 Kudamuzavan - குடமுழவன்
519 Kudarkadavul - கூடற்கடவுள்
520 Kuduvadaththan - கூடுவடத்தன்
521 Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
522 Kulavan - குலவான்
523 Kumaran - குமரன்
524 Kumaranradhai - குமரன்றாதை
525 Kunakkadal - குணக்கடல்
526 Kunarpiraiyan - கூனற்பிறையன்
527 Kundalachcheviyan - குண்டலச்செவியன்
528 Kunra Ezilaan - குன்றாஎழிலான்
529 Kupilan - குபிலன்
530 Kuravan - குரவன்
531 Kuri - குறி
532 Kuriyilkuriyan - குறியில்குறியன்
533 Kuriyilkuththan - குறியில்கூத்தன்
534 Kuriyuruvan - குறியுருவன்
535 Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
536 Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
537 Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
538 Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
539 Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
540 Kurumpalanathan - குறும்பலாநாதன்
541 Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
542 Kurundhamevinan - குருந்தமேவினான்
543 Kooththan - கூத்தன்
544 Kooththappiran - கூத்தப்பிரான்
545 Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
546 Kuvilanychudi - கூவிளஞ்சூடி
547 Kuvindhan - குவிந்தான்
548 Kuzagan - குழகன்
549 Kuzaikadhan - குழைகாதன்
550 Kuzaithodan - குழைதோடன்
551 Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
552 Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
553 Machilamani - மாசிலாமணி
554 Madandhaipagan - மடந்தைபாகன்
555 Madavalbagan - மடவாள்பாகன்
556 Madha - மாதா
557 Madhavan - மாதவன்
558 Madhevan - மாதேவன்
559 Madhimuththan - மதிமுத்தன்
560 Madhinayanan - மதிநயனன்
561 Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
562 Madhivanan - மதிவாணன்
563 Madhivannan - மதிவண்ணன்
564 Madhiviziyan - மதிவிழியன்
565 Madhorubagan - மாதொருபாகன்
566 Madhupadhiyan - மாதுபாதியன்
567 Maikolcheyyan - மைகொள்செய்யன்
568 Mainthan - மைந்தன்
569 Maiyanimidaron - மையணிமிடறோன்
570 Maiyarkantan - மையார்கண்டன்
571 Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
572 Malaimadhiyan - மாலைமதியன்
573 Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
574 Malaivalaiththan - மலைவளைத்தான்
575 Malaiyalbagan - மலையாள்பாகன்
576 Malamili - மலமிலி
577 Malarchchadaiyan - மலர்ச்சடையன்
578 Malorubagan - மாலொருபாகன்
579 Malvanangiisan - மால்வணங்கீசன்
580 Malvidaiyan - மால்விடையன்
581 Maman - மாமன்
582 Mamani - மாமணி
583 Mami - மாமி
584 Man - மன்
585 Manakkuzagan - மணக்குழகன்
586 Manalan - மணாளன்
587 Manaththakaththan - மனத்தகத்தான்
588 Manaththunainathan - மனத்துணைநாதன்
589 Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
590 Manavalan - மணவாளன்
591 Manavazagan - மணவழகன்
592 Manavezilan - மணவெழிலான்
593 Manchumandhan - மண்சுமந்தான்
594 Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
595 Mandhiram - மந்திரம்
596 Mandhiran - மந்திரன்
597 Manendhi - மானேந்தி
598 Mangaibagan - மங்கைபாகன்
599 Mangaimanalan - மங்கைமணாளன்
600 Mangaipangkan - மங்கைபங்கன்
601 Mani - மணி
602 Manidan - மானிடன்
603 Manidaththan - மானிடத்தன்
604 Manikantan - மணிகண்டன்
605 Manikka Vannan - மாணிக்கவண்ணன்
606 Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
607 Manikkam - மாணிக்கம்
608 Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
609 Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
610 Manimidarran - மணிமிடற்றான்
611 Manivannan - மணிவண்ணன்
612 Maniyan - மணியான்
613 Manjchan - மஞ்சன்
614 Manrakkuththan - மன்றக்கூத்தன்
615 Manravanan - மன்றவாணன்
616 Manruladi - மன்றுளாடி
617 Manrulan - மன்றுளான்
618 Mapperunkarunai - மாப்பெருங்கருணை
619 Maraicheydhon - மறைசெய்தோன்
620 Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
621 Maraineri - மறைநெறி
622 Maraipadi - மறைபாடி
623 Maraippariyan - மறைப்பரியன்
624 Maraiyappan - மறையப்பன்
625 Maraiyodhi - மறையோதி
626 Marakatham - மரகதம்
627 Maraniiran - மாரநீறன்
628 Maravan - மறவன்
629 Marilamani - மாறிலாமணி
630 Marili - மாறிலி
631 Mariyendhi - மறியேந்தி
632 Markantalan - மாற்கண்டாளன்
633 Markaziyiindhan - மார்கழிஈந்தான்
634 Marrari Varadhan - மாற்றறிவரதன்
635 Marudhappan - மருதப்பன்
636 Marundhan - மருந்தன்
637 Marundhiisan - மருந்தீசன்
638 Marundhu - மருந்து
639 Maruvili - மருவிலி
640 Masarrachodhi - மாசற்றசோதி
641 Masaruchodhi - மாசறுசோதி
642 Masili - மாசிலி
643 Mathevan - மாதேவன்
644 Mathiyar - மதியர்
645 Maththan - மத்தன்
646 Mathuran - மதுரன்
647 Mavuriththan - மாவுரித்தான்
648 Mayan - மாயன்
649 Mazavidaippagan - மழவிடைப்பாகன்
650 Mazavidaiyan - மழவிடையன்
651 Mazuppadaiyan - மழுப்படையன்
652 Mazuvalan - மழுவலான்
653 Mazuvalan - மழுவாளன்
654 Mazhuvali - மழுவாளி
655 Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
656 Mazuvendhi - மழுவேந்தி
657 Mazuvudaiyan - மழுவுடையான்
658 Melar - மேலர்
659 Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
660 Meruvidangan - மேருவிடங்கன்
661 Meruvillan - மேருவில்லன்
662 Meruvilviiran - மேருவில்வீரன்
663 Mey - மெய்
664 Meypporul - மெய்ப்பொருள்
665 Meyyan - மெய்யன்
666 Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
667 Mikkarili - மிக்காரிலி
668 Milirponnan - மிளிர்பொன்னன்
669 Minchadaiyan - மின்சடையன்
670 Minnaruruvan - மின்னாருருவன்
671 Minnuruvan - மின்னுருவன்
672 Mudhalillan - முதலில்லான்
673 Mudhalon - முதலோன்
674 Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
675 Mudhukattadi - முதுகாட்டாடி
676 Mudhukunriisan - முதுகுன்றீசன்
677 Mudivillan - முடிவில்லான்
678 Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
679 Mukkanan - முக்கணன்
680 Mukkanan - முக்கணான்
681 Mukkannan - முக்கண்ணன்
682 Mukkatkarumbu - முக்கட்கரும்பு
683 Mukkonanathan - முக்கோணநாதன்
684 Mulai - முளை
685 Mulaimadhiyan - முளைமதியன்
686 Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
687 Mulan - மூலன்
688 Mulanathan - மூலநாதன்
689 Mulaththan - மூலத்தான்
690 Mullaivananathan - முல்லைவனநாதன்
691 Mummaiyinan - மும்மையினான்
692 Muni - முனி
693 Munnayanan - முன்னயனன்
694 Munnon - முன்னோன்
695 Munpan - முன்பன்
696 Munthai - முந்தை
697 Muppilar - மூப்பிலர்
698 Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
699 Murramadhiyan - முற்றாமதியன்
700 Murrunai - முற்றுணை
701 Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
702 Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
703 Murththi - மூர்த்தி
704 Murugavudaiyar - முருகாவுடையார்
705 Murugudaiyar - முருகுடையார்
706 Muthaliyar - முதலியர்
707 Muthalvan - முதல்வன்
708 Muththan - முத்தன்
709 Muththar Vannan - முத்தார் வண்ணன்
710 Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
711 Muththiyar - முத்தியர்
712 Muththu - முத்து
713 Muththumeni - முத்துமேனி
714 Muththuththiral - முத்துத்திரள்
715 Muvakkuzagan - மூவாக்குழகன்
716 Muvameniyan - மூவாமேனியன்
717 Muvamudhal - மூவாமுதல்
718 Muvarmudhal - மூவர்முதல்
719 Muvilaichchulan - மூவிலைச்சூலன்
720 Muvilaivelan - மூவிலைவேலன்
721 Muviziyon - மூவிழையோன்
722 Muyarchinathan - முயற்சிநாதன்
723 Muzudharindhon - முழுதறிந்தோன்
724 Muzudhon - முழுதோன்
725 Muzhumudhal - முழுமுதல்
726 Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
727 Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
728 Nadan - நடன்
729 Nadhichadaiyan - நதிச்சடையன்
730 Nadhichudi - நதிசூடி
731 Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
732 Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
733 Naduthariyappan - நடுத்தறியப்பன்
734 Naguthalaiyan - நகுதலையன்
735 Nakkan - நக்கன்
736 Nallan - நல்லான்
737 Nallasivam - நல்லசிவம்
738 Nalliruladi - நள்ளிருளாடி
739 Namban - நம்பன்
740 Nambi - நம்பி
741 Nanban - நண்பன்
742 Nandhi - நந்தி
743 Nandhiyar - நந்தியார்
744 Nanychamudhon - நஞ்சமுதோன்
745 Nanychanikantan - நஞ்சணிகண்டன்
746 Nanycharththon - நஞ்சார்த்தோன்
747 Nanychundon - நஞ்சுண்டோன்
748 Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
749 Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
750 Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
751 Nanychunporai - நஞ்சுண்பொறை
752 Narchadaiyan - நற்ச்சடையன்
753 Naripagan - நாரிபாகன்
754 Narravan - நற்றவன்
755 Narrunai - நற்றுணை
756 Narrunainathan - நற்றுணைநாதன்
757 Nasaiyili - நசையிலி
758 Nathan - நாதன்
759 Nathi - நாதி
760 Nattamadi - நட்டமாடி
761 Nattamunron - நாட்டமூன்றோன்
762 Nattan - நட்டன்
763 Nattavan - நட்டவன்
764 Navalan - நாவலன்
765 Navalechcharan - நாவலேச்சரன்
766 Nayadi Yar - நாயாடி யார்
767 Nayan - நயன்
768 Nayanachchudaron - நயனச்சுடரோன்
769 Nayanamunran - நயனமூன்றன்
770 Nayananudhalon - நயனநுதலோன்
771 Nayanar - நாயனார்
772 Nayanaththazalon - நயனத்தழலோன்
773 Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
774 Nellivananathan - நெல்லிவனநாதன்
775 Neri - நெறி
776 Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
777 Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
778 Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
779 Nerrinayanan - நெற்றிநயனன்
780 Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
781 Nesan - நேசன்
782 Neyyadiyappan - நெய்யாடியப்பன்
783 Nidkandakan - நிட்கண்டகன்
784 Niilakantan - நீலகண்டன்
785 Niilakkudiyaran - நீலக்குடியரன்
786 Niilamidarran - நீலமிடற்றன்
787 Niilchadaiyan - நீள்சடையன்
788 Niinerinathan - நீனெறிநாதன்
789 Niiradi - நீறாடி
790 Niiranichemman - நீறணிச்செம்மான்
791 Niiranichudar - நீறணிசுடர்
792 Niiranikunram - நீறணிகுன்றம்
793 Niiranimani - நீறணிமணி
794 Niiraninudhalon - நீறணிநுதலோன்
795 Niiranipavalam - நீறணிபவளம்
796 Niiranisivan - நீறணிசிவன்
797 Niirarmeniyan - நீறர்மேனியன்
798 Niirchchadaiyan - நீர்ச்சடையன்
799 Niireruchadaiyan - நீறேறுசடையன்
800 Niireruchenniyan - நீறேறுசென்னியன்
801 Niirran - நீற்றன்
802 Niirudaimeni - நீறுடைமேனி
803 Nirupusi - நீறுபூசி
804 Nikarillar - நிகரில்லார்
805 Nilachadaiyan - நிலாச்சடையன்
806 Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
807 Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
808 Nimalan - நிமலன்
809 Ninmalan - நின்மலன்
810 Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
811 Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
812 Niramayan - நிராமயன்
813 Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
814 Niraivu - நிறைவு
815 Niruththan - நிருத்தன்
816 Neethi - நீதி
817 Niththan - நித்தன்
818 Nokkamunron - நோக்கமூன்றோன்
819 Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
820 Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
821 Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
822 Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
823 Noyyan - நொய்யன்
824 Nudhalorviziyan - நுதலோர்விழியன்
825 Nudhalviziyan - நுதல்விழியன்
826 Nudhalviziyon - நுதல்விழியோன்
827 Nudharkannan - நுதற்கண்ணன்
828 Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
829 Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
830 Nunniyan - நுண்ணியன்
831 Odaniyan - ஓடணியன்
832 Odarmarban - ஓடார்மார்பன்
833 Odendhi - ஓடேந்தி
834 Odhanychudi - ஓதஞ்சூடி
835 Olirmeni - ஒளிர்மேனி
836 Ongkaran - ஓங்காரன்
837 Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
838 Opparili - ஒப்பாரிலி
839 Oppili - ஒப்பிலி
840 Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
841 Oruthalar - ஒருதாளர்
842 Oruththan - ஒருத்தன்
843 Oruthunai - ஒருதுணை
844 Oruvamanilli - ஒருவமனில்லி
845 Oruvan - ஒருவன்
846 Ottiichan - ஓட்டீசன்
847 Padarchadaiyan - படர்ச்சடையன்
848 Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
849 Padhimadhinan - பாதிமாதினன்
850 Padikkasiindhan - படிகாசீந்தான்
851 Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
852 Padiran - படிறன்
853 Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
854 Pakavan - பகவன்
855 Palaivana Nathan - பாலைவனநாதன்
856 Palannaniirran - பாலன்னநீற்றன்
857 Palar - பாலர்
858 Palichchelvan - பலிச்செல்வன்
859 Paliithadhai - பாலீதாதை
860 Palikondan - பலிகொண்டான்
861 Palinginmeni - பளிங்கின்மேனி
862 Palitherchelvan - பலித்தேர்செல்வன்
863 Pallavanathan - பல்லவநாதன்
864 Palniirran - பால்நீற்றன்
865 Palugandha Iisan - பாலுகந்தஈசன்
866 Palvanna Nathan - பால்வண்ணநாதன்
867 Palvannan - பால்வண்ணன்
868 Pambaraiyan - பாம்பரையன்
869 Pampuranathan - பாம்புரநாதன்
870 Panban - பண்பன்
871 Pandangkan - பண்டங்கன்
872 Pandaram - பண்டாரம்
873 Pandarangan - பண்டரங்கன்
874 Pandarangan - பாண்டரங்கன்
875 Pandippiran - பாண்டிபிரான்
876 Pangkayapathan - பங்கயபாதன்
877 Panimadhiyon - பனிமதியோன்
878 Panimalaiyan - பனிமலையன்
879 Panivarparru - பணிவார்பற்று
880 Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
881 Paramamurththi - பரமமூர்த்தி
882 Paraman - பரமன்
883 Paramayoki - பரமயோகி
884 Paramessuvaran - பரமேச்சுவரன்
885 Parametti - பரமேட்டி
886 Paramparan - பரம்பரன்
887 Paramporul - பரம்பொருள்
888 Paran - பரன்
889 Paranjchothi - பரஞ்சோதி
890 Paranjchudar - பரஞ்சுடர்
891 Paraparan - பராபரன்
892 Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
893 Parasupani - பரசுபாணி
894 Parathaththuvan - பரதத்துவன்
895 Paridanychuzan - பாரிடஞ்சூழன்
896 Paridhiyappan - பரிதியப்பன்
897 Parrarran - பற்றற்றான்
898 Parraruppan - பற்றறுப்பான்
899 Parravan - பற்றவன்
900 Parru - பற்று
901 Paruppan - பருப்பன்
902 Parvati Manalan - பார்வதி மணாளன்
903 Pasamili - பாசமிலி
904 Pasanasan - பாசநாசன்
905 Pasuveri - பசுவேறி
906 Pasumpon - பசும்பொன்
907 Pasupathan - பாசுபதன்
908 Pasupathi - பசுபதி
909 Paththan - பத்தன்
910 Pattan - பட்டன்
911 Pavala Vannan - பவளவண்ணன்
912 Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
913 Pavalam - பவளம்
914 Pavan - பவன்
915 Pavanasan - பாவநாசன்
916 Pavanasar - பாவநாசர்
917 Payarruraran - பயற்றூரரன்
918 Pazaiyan - பழையான்
919 Pazaiyon - பழையோன்
920 Pazakan - பழகன்
921 Pazamalainathan - பழமலைநாதன்
922 Pazanappiran - பழனப்பிரான்
923 Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
924 Pemman - பெம்மான்
925 Penbagan - பெண்பாகன்
926 Penkuran - பெண்கூறன்
927 Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
928 Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
929 Pennanaliyan - பெண்ணாணலியன்
930 Pennanmeni - பெண்ணாண்மேனி
931 Pennanuruvan - பெண்ணானுருவன்
932 Pennidaththan - பெண்ணிடத்தான்
933 Pennorubagan - பெண்ணொருபாகன்
934 Pennorupangan - பெண்ணொருபங்கன்
935 Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
936 Penparrudhan - பெண்பாற்றூதன்
937 Peralan - பேராளன்
938 Perambalavanan - பேரம்பலவாணன்
939 Perarulalan - பேரருளாளன்
940 Perayiravan - பேராயிரவன்
941 Perchadaiyan - பேர்ச்சடையன்
942 Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
943 Perinban - பேரின்பன்
944 Periyakadavul - பெரியகடவுள்
945 Periyan - பெரியான்
946 Periya Peruman - பெரிய பெருமான்
947 Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
948 Periyasivam - பெரியசிவம்
949 Periyavan - பெரியவன்
950 Peroli - பேரொளி
951 Perolippiran - பேரொளிப்பிரான்
952 Perrameri - பெற்றமேறி
953 Perramurthi - பெற்றமூர்த்தி
954 Peruman - பெருமான்
955 Perumanar - பெருமானார்
956 Perum Porul - பெரும் பொருள்
957 Perumpayan - பெரும்பயன்
958 Perundhevan - பெருந்தேவன்
959 Perunkarunaiyan - பெருங்கருணையன்
960 Perunthakai - பெருந்தகை
961 Perunthunai - பெருந்துணை
962 Perunychodhi - பெருஞ்சோதி
963 Peruvudaiyar - பெருவுடையார்
964 Pesarkiniyan - பேசற்கினியன்
965 Picchar - பிச்சர்
966 Pichchaiththevan - பிச்சைத்தேவன்
967 Pidar - பீடர்
968 Pinjgnakan - பிஞ்ஞகன்
969 Piraichchenniyan - பிறைச்சென்னியன்
970 Piraichudan - பிறைசூடன்
971 Piraichudi - பிறைசூடி
972 Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
973 Piraikkirran - பிறைக்கீற்றன்
974 Piraiyalan - பிறையாளன்
975 Piran - பிரான்
976 Pirapparuppon - பிறப்பறுப்போன்
977 Pirappili - பிறப்பிலி
978 Piravapperiyon - பிறவாப்பெரியோன்
979 Piriyadhanathan - பிரியாதநாதன்
980 Pitha - பிதா
981 Piththan - பித்தன்
982 Podiyadi - பொடியாடி
983 Podiyarmeni - பொடியார்மேனி
984 Pogam - போகம்
985 Pokaththan - போகத்தன்
986 Pon - பொன்
987 Ponmalaivillan - பொன்மலைவில்லான்
988 Ponmanuriyan - பொன்மானுரியான்
989 Ponmeni - பொன்மேனி
990 Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
991 Ponnambalam - பொன்னம்பலம்
992 Ponnan - பொன்னன்
993 Ponnarmeni - பொன்னார்மேனி
994 Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
995 Ponnuruvan - பொன்னுருவன்
996 Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
997 Poraziyiindhan - போராழிஈந்தான்
998 Porchadaiyan - பொற்சசையன்
999 Poruppinan - பொருப்பினான்
1000 Poyyili   -
  பொய்யிலி