தாம்பூலம் பிரச்சனம்
பிரச்சனம் என்றால் என்ன?
கேள்வி கேட்டு பதில் சொல்வது பிரச்சனம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க பிரசன்னம் மூலம் தீர்வு காணலாம்.
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் பிரச்சனைகளை வரும் நேரத்தின் அடிப்படையில் லக்கினம் கணித்து கிரக நிலைகளைக் குறித்து பலன் கூறுவார்கள்.
சிலர் சோழிகளை பயன்படுத்தி பிரசன்னம் கூறுவார்கள்.
சிலர் 108க்குள் ஒரு எண்ணைக் கூறி அதன் அடிப்படையில் பிரசன்னம் கூறுவார்கள்.
சில சோதிடர் வரும் நேரத்தில் உள்ள பஞ்சபட்சி அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
சில ஜோதிடர்கள் சந்திரக்கலை,சூரியகலை என நாடியின் அடிப்படையில் பலன் கூறுவார்கள்.
இவைகள் எல்லாம் கூறுவதற்கு மிகமிக ஜோதிட அறிவு வேண்டும். ஆனால் எளிமையாக மக்கள் புரியும்படி பலன் கூறுவது தாம்பூல பிரசன்னம். இது கேரளாவில் பிரபலமானது. அடிக்கடி பயன்படுத்தி பலன் கூறுவார்கள்.
தாம்பூல பிரசன்னம்:
அமர கோசம் நூலின் கருத்துப்படி தாம்பூலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை கொடி நாகலோகத்தில் உண்டானது அதற்கு நாகவல்லி என்று பெயர்.அது மகா லட்சுமி அம்சமாகும்.
தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறமும், தாம்பூல மத்திய பாகமும் இவை இரண்டும் சிவபெருமனைக் குறிக்கும்.
வெளிப்பக்கம்(உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனைக் குறிக்கும்.
ஜோதிட வல்லுநர்கள் 6 அங்குல நீளம் 2 அங்குல உள்ள வெற்றிலையின் அடிப்படையில் பிரச்சனைக்கு உரிய பதிலைக் கூறுகிறார்கள்.
தாம்பூல பிரசன்னம் பார்க்கும் விதம்:
முதலில் பிரசன்னம் பார்க்க வருபவரிடம் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி வாங்கிவரும்படி கூறவும்.
குறிப்பு : வெற்றிலை வாங்கிவரும்பொழுது 12 வெற்றிலைக்கு மேல் வேண்டும். எனவே ஜோதிடர் வெற்றிலையின் விலையை அறிந்து வாங்கி வரும்படி கூறவும்.
1) இவைளை வாங்கி வந்தவுடனே பிரசன்னம் பார்க்க வந்தவரிடம் அவருடைய குலதெய்வம், வண்ங்கும் தெய்வத்தை வணங்கிக் கொள்ளும்படி கூறவும்.
2) பிறகு ஜாதகர் கொண்டுவந்த வந்த வெற்றிலையின் எண்ணிக்கையை முதலில் இரண்டால் பெருக்க வேண்டும்.
3) பெருக்கி வந்த தொகையை 5ஆல் பெருக்க வேண்டும்.
4) பெருக்கி வந்த தொகையுடன் 1யை கூட்டிக் கொள்ள வேண்டும்.
5) வரும் மொத்த தொகையை 7ஆல் வக்க வேண்டும். வரும் மீதி……….
1 எனில் சூரியன்
2 எனில் சந்திரன்
3 எனில் செவ்வாய்
4 எனில் புதன்
5 எனில் குரு
6 எனில் சுக்கிரன்
7 எனில் சனி எனக்கொள்ள வேண்டும்.
இது என்ன சித்திர குப்தர் கணக்கு என யோசிக்கிறீர்களா?
(வெற்றிலையின் எண்ணிக்கை) எண்ணை 2ஆல் பெருக்க வேண்டும். பின்பு அத்தொகையுடன் 1யை கூட்ட வேண்டும்.இதுஏன்? என வாசகர்கள் மனதில் ஐயம் ஏற்படும். அதற்கான பதில் இதோ.
ஒரு குழந்தை பிறக்க, தாய், தந்தை ஆகிய இருவர் இணைய வேண்டும். எனவே தான் பிரசன்னம் பார்ப்பவர் கொண்டுவரும் வெற்றிலையின் எண்ணிக்கையை 2ஆல் பெருக்கிறோம்.
பின்பு இந்த உடல் 5 பூதங்களால் ஆனது என்பதைக் குறிக்க 5ஆல் பெருக்குகிறோம்.
பின்பு இந்த உடல் ஆண், பெண் இணைந்து பஞ்ச பூதங்களால் ஆன பின்பு மனிதனாக பிறக்கிறது என்பதைக் குறிக்க 1யைகூட்டுகிறோம்.
பிறகு, அந்த மொத்த எண்ணிக்கையை ஏழு கிரகங்களைக் குறிக்கும் எண்ணாகிய 7ஆல் வகுக்கிறோம். வரும் மீதியானது பிறந்த குழந்தையின் ஆத்மா கிரகமாகும். அது உள்ள இடமே லக்னம் அல்லது தாம்பூல லக்னம் ஆகும். அவ்வாறு மொத்த எண்ணிக்கையை 7ஆல் வகுத்து வரும் மீதி, தாம்பூல கிரகமாகும்.
சூரியன் என்றால் துக்கமும், சந்திரன் எனில் சுகமும், செவ்வாய் எனில் கலகமும், புதன் & குரு எனில் பணமும்;(புதன்-செய்யும் தொழிலின் மூலம் பணமும் குரு-ஞானம், ஆன்மீகப் பணி மூலம் பணம் கிடைப்பதைக் குறிக்கும்).
சுக்கிரன் எனில் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
சனி எனில் கண்டங்கள், தடங்கல்கள் ஏற்படும் .மாந்தியுடன் சேர்தால் மரணம் எற்படும்.
அடுத்து இந்த தாம்பூலம் கிரகம் உள்ள இடமே தாம்பூல லக்னம் எனப்படும். அதை எப்படி அறிவது?
பிரசன்னம் பார்க்க வந்தவர், வந்த நேரத்தில் பஞ்சாங்கத்தின் உதவியால் கிரகங்களைஉள்ள நிலையை கட்டத்தில் குறித்துக் கொள்ளலாம். பிரசன்னம் பார்க்க வந்தவர் நேரத்தின் அடிப்படையில் ராசிக்கட்டத்தில் கிரகங்களை குறித்துவிட்டோம். இனி பலன்கள் கூற வேண்டும். அதை எவ்வாறு செய்வது எனக் காண்போம்.
தாம்பூல பிரசன்ன பலன் கூறும் முறை:
1. பிரசன்னம் கேட்க வரும் நேரத்தில் அடிப்படையில் வெற்றிலையை எடுத்து பலன்கள் கூறுவோம்.
2. பிரசன்னம் கேட்க வரும் நாளில் சூரிய உதயம் + சூரிய அஸ்தமனம்= வரும் மொத்த நேரத்தை 2ஆல் வகுத்தால் கிடைப்பது அந்த நாளில் மத்திய பாகம் ஆகும்.
எடுத்துகாட்டு:
` கிருஷணகிரியில் ஆகஸ்ட் 21ம் தேதி காலை 11 மணிக்கு ஒருவர் பிரசன்னம் பார்க்க வருகிறார்.
ஆகஸ்ட் 21 சனி சூரிய உதயம் காலை 6.09 மணி
சூரிய அஸ்தமனம் (அதாவது மாலை 6.31) 18.31 மணி
மொத்தம் 24.40 மணி
மத்திய பகுதி (24.40/2)=12.20 மணி
எனவே, காலை 11 மணிக்கு பிரசன்னம் பார்க்க வருபவரிடம் கொண்டு வந்த வெற்றிலையின் மேல்பகுதியிலிருத்து முதல் 12 வெற்றிலையின் அடிப்படையின் 12 பாவங்கட்கும் பலன்கள் கூற வேண்டும்.
வருபவர் மாலை 3 மணிக்கு வந்தால் அடிப்பகுதியிலிருந்து 1,2,3…………………….12 என ஒவ்வொரு வெற்றிலைகளாக எடுத்து பலன்கள் கூற வேண்டும்.
ஏன் 12 வெற்றிலையை வைத்து மட்டும் பலன் கூறுகிறோம்?
ஜாதகத்தில் 12 பாவங்கள் உள்ளதால் 12 வெற்றிலையின் அடிப்படையில் ஜாதகப்பலன்கள் கூறுகிறோம். அந்த பாவங்கள் 12ம் எதைக் குறிக்கிறது என அறிந்தால் தான் பலன்களை எளிதாக கூற இயலும்
வெற்றிலையை ஆராய்ந்து பலன் கூறும் விதம்:
1. வெற்றிலையின் மொத்த எண்ணிக்கை 24க்கு மேல் எனில்,பூர்வீக இடத்தை விட்டு வந்து இங்கு 2 தலைமுறையாக வாழ்கிறார்கள்.
2. அடிப்பாகம் பெரிய நரம்பு உள்ள பகுதி துவாரம் :கர்ப்பிணி பெண் மரணம்.
3. நடுவில் துவாரம் : துர்மரணம் அடைந்த பிரேத தோஷம் உண்டு.
4. தாம்பூலம் கிழிந்து இருந்தால் : பூர்வ புண்ணியம் தோஷம் உண்டு. இறந்த பிரேத தோஷம் – சர்ப்ப தோஷம்.
5. நுனிப்பகுதி கிழிந்திருந்தல் : தோஷம் அப்பகுதிக்கு
6. பலன் கூறும்பொழுது பாதகாதிபதி தொடர்பு எந்த பாவத்திற்கு வருகிறதோ அது பாதிக்கும்.
சர ராசிகளான பாதக இடம்
மேஷம் கும்பம்
கடகம் ரிஷபம்
துலாம் சிம்மம்
மகரம் விருச்சிகம்
11ம் இடம். பாதகமாகும்
7.ஸ்திர ராசிகட்கு 9 ம் இடம் பாதகமாகும்
ராசி பாதக இடம்
ரிஷபம் மகரம்
சிம்மம் மேஷம்
விருச்சிகம் கடகம்
கும்பம் துலாம்
8.உபய ராசிகட்கு 7ம் பாதக இடம்
ராசி பாதக இடம்
மிதுனம் தனுசு
கன்னி மீனம்
தனுசு மிதுனம்
மீனம் கன்னி
எடுத்துகாட்டு:
7-2-2004ம் தேதி காலையில் ஒருவர் 17 வெற்றிலைகளைக் கொண்டு வந்து தந்தார்.
மொத்த வெற்றிலையின் எண்ணிக்கை : 17
பெற்றோரைக் குறிக்கும் 2ஆல் பெருக்க : 17*2=34
பஞ்சபூதத்தைக் குறிக்கும் 5ஆல் பெருக்க :34*5=170
ஆன்மா 1யைக் கூட்ட : 170+1=171
7 கிரகங்களுக்கு பங்கிட :171/7=24 ஈவு, மீதி 3
மீதி 3க்கு உரிய கிரகம் :செவ்வாய்
அது உள்ள ராசி மேஷம்.எனவே பிரசன்ன தாம்பூல ஆருட லக்கினம் செவ்வாய் உள்ள வீடு மேஷம் ஆகும்.
அன்றைய கிரக நிலைகள்:
பிரசன்னம் கேட்பவர் காலையில் வந்ததால் மேல் உள்ளா வெற்றிலையை எடுக்க
முதல் பாவம் :உடல், வாக்கு, உருவம், சுபாவம், சுகதுக்கங்களைக் குறிக்கும்.
முதல் வெற்றிலை நிலை : சிறியது – அடியில் கறுப்பு – ஓட்டை.
எனவே, ஜாதகர் உடல் நிலை பாதிக்கலாம். ஜாதகப்படி லக்னத்த்பில் அதிபதி செவ்வாய் ராகுவுடன். எனவே பாதிப்பு இல்லை. ஏன்? குரு பார்வையால் அது போகும்.
2ம் பாவம் : தனம், குடும்பம், வாக்கு, வித்தை அதில் ஓட்டை, அழுக்கு,எனவே தோஷம் உண்டு.
2ம் வீட்டு அதிபதி 12ல் உள்ளார். அவரை 11ம் அதிபதி பாதகாதிபதி சனி பார்க்கிறார்.மேலும் சனி வீட்டில் –மாந்தி 11ல்.எனவே,பிரேத தோஷம் உண்டு. மனைவியால் சுகம் இல்லை. கல்விக்கு விரயம். இடமாற்றம்.
3ம் பாவம் : சகோதரம், வீரம், பாக்கியம், சிறிய பயணம்
வெற்றிலையில் ஓட்டை. நல்ல பலன் இல்லை. எப்படி? மேஷத்திற்கு 11ம் அதிபதி சனி 3ல் உள்ளார். எனவே சகோதரர்களால் நன்மை இல்லை.
4ம் பாவம்: மாதா, சுகம், வாகனம், மன நிம்மதி.
4வது வெற்றிலையில் ஓட்டை நல்ல பலன் இல்லை. ஏன்?
4ம் வீட்டை செவ்வாய் பார்க்கின்றார்.3,6க்குடைய புதன் 4ம் வீட்டை பார்க்கின்றார்.5ம் வீட்டின் அதிபதி சூரியன் 4ம் விட்டை பார்க்கின்றார்.4ம் அதிபதி சந்திரனை பாதகாதிபதி சனி பார்க்கின்றார்.
மாந்திக்கு 2,7,12 பார்வை உண்டு.
எனவே,மாதாவால் கடன் உண்டு. அலைச்சல் உண்டு.
5ம் பாவம்: புத்தி – அறிவு – விவேகம் – பூர்வ புண்ணியம் – குழந்தை – பங்கு மார்க்கெட் – காதல்
வெற்றிலையில் நுனி இல்லை – அப்பளம் போல் உள்ளது.
எனவே 5ம் அதிபதி 10ல் பகை வேட்டில் 3ம்ற்றும் 6க்கு உடைய புதன் உடன்.எனவே புதல்வர்களால் பலன் இல்லை.ஆனால் 9,12க்குரிய குரு இருப்பதால் விரய செலவு உண்டு.
6ம் பாவம்: ரோகம் – கடன் – சத்ரு
வெற்றிலை நன்றாக உள்ளது.
6ம் அதிபதி சனி வீட்டில் சூரியனுடன் தொழில் செய்ய கடன்பட்டிருப்பார்.
நண்பர்களுக்காக கடன்பட்டிருப்பார்.
தாய்மாமனுக்கு கடன்பட்டிருப்பார்.
7ம் பாவம் : மனைவி
7ல் கேது வெற்றிலையில் கரும்புள்ளி. மனைவியால் சுகம் இல்லை.மனச்சங்கடம்.
8ல் பாவம்: ஆயுள் – நஷ்டம் – விபத்தைக் குறிக்கும்.
வெற்றிலையில் கரும்புள்ளி .எனவே நோய்ப்படுவான்.விபத்து உண்டு – சாக மாட்டான்.ஏன்? 8ன் அதிபதி செவ்வாய் ஆட்சி 9ம் அதிபதி – பூர்வபுண்ணிய அதிபதி – குரு பார்வை உள்ளது.
9ம் பாவம்: பாக்கியம் – தருமம் – புண்ணிய காரியங்கள் – தந்தை நிலை.
வெற்றிலை நிலை : மத்தியில் ஓட்டை
கிரக நிலைகள் :சனி,குரு பார்வை. குரு பார்வை நன்று.ஆனால் பாதகாதிபதி சனி நல்லதை செய்யமாட்டார்.எனவே தந்தையால் உதவி இல்லை.மேலும் பாதகாதிபதி வீட்டில் மாந்தி.பிரேத தோஷம் உண்டு.
10ம் பாவம் : தொழிலைக் குறிப்பது.
வெற்றிலை நிலை : அடியில் ஓட்டை – 3ஓட்டைகள் – கிழிசல்.
கிரக நிலைகள் : பாதகாதிபதி சனி. அவரது வீட்டில் 6,3 வீட்டு அதிபதி புதன்.5ம் வீட்டு சூரியன் சனிக்கு பகை.அவர் 10ல். எனவே,கடன்ப்ட்டு வணிகம் செய்து இழப்பு.
கிழிதல் : பணத்திற்கு சண்டை ஏற்படும்.சனி வீட்டில் மாந்தி.பிதுர்வகை பிரேத
தோஷம் உண்டு.ஏன்? குளிகன் அல்லது மாந்திக்கு 12ம் பார்வை 10ல் படுகிறது. எனவே பாட்டன்களுக்கு கர்மம் செய்யவில்லை. அதனால் தோஷம்.
11ம் பாவம் : குறிப்பது லாபம் – மூத்த சகோதரர் – ஆசைகள் நிறைவேறல்.
வெற்றிலை நிலை : வளைந்து உள்ளது. ஓட்டை உண்டு.
பலன் : கெட்டது. லாபம் இல்லை. ஆசைகள் நிறைவேறாது.
கிரக நிலை : 11ல் மாந்தி. 11க்கு உரியவர் 3ல் உள்ளார்.
11ல் மாந்தி : பிரேத தோஷம். யாருடைய பிரேதம்? சகோதரர். உடையது. ஏன்? 3ல் 11க்கு உடையவர் உள்ளார். 3ல் மறைகிறார். எனவே ஒரு சகோதரர் பிரேதம் தோஷம் உண்டு.
12ம் பாவம் : குறிப்பன மோட்சம். இடது கண், குடும்ப செலவு, மருத்துவ செலவு.
வெற்றிலை நிலை : ஓட்டை, கிழிதல்
பலன் : அளவுக்கு மேல் குடும்ப செலவு – மருத்துவ செலவு.
கிரக நிலை : 12ல் 2க்குரிய சுக்கிரன். 3ல் உள்ள சனி பார்வை. எனவே மனைவிக்கு மருத்துவ செலவு. சகோதரர்களுக்கு செலவு. தொழில் செய்ய செலவு ஏற்படும்.
குறிப்பு : வெற்றிலையை வாங்கி வரும் நேரத்திற்கு ஏற்ப பலனை உடனே அறியலாம்.
எடுத்துகாட்டு : குரு ஓரை, சனி அந்தரம். குரு மகனை குறிப்பவர். சூரியன் தந்தை. எனவே சனி அந்தரம் – மகன்களால் தொல்லை ஏற்படும்.
(எ.கா) சுக்கிரன் ஓரை – சூரிய அந்தரம்.
மனைவியால் அவமானப்படல்
என்ன வாசகர்களே ! வெற்றிலை பிரசன்னம் எளிது தானே !
இதில் மாந்தியை குறிக்க வேண்டும்.
மற்ற கிரகங்களையும், சந்திரனையும் பஞ்சாங்கத்தைப் பார்த்துக் குறிக்கலாம்.
மாந்தி உதயமாகும் நேரம் பஞ்சாங்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய சூரிய உதயம் மணி முதல் கீழ் கானும் நேரங்களைக் கூட்டிக்கொள்ள வேண்டும்
திங்கள் 22 நாழிகை அல்லது 8 மணி 48 நிமிடங்கள்
செவ்வாய் 18 நாழிகை அல்லது 7 மணி 12 நிமிடங்கள்
புதன் 14 நாழிகை அல்லது 5 மணி 36 நிமிடங்கள்
வியாழன் 10 நாழிகை அல்லது 4 மணி 00 நிமிடங்கள்
வெள்ளி 6 நாழிகை அல்லது 2 மணி 24 நிமிடங்கள்
சனி 2 நாழிகை அல்லது 00 மணி48 நிமிடங்கள்
இரவுக்கு அன்றைய பகலின் உதய நாழிகை (மணி) 5வது நாள் இரவுக்கு வரும்.
எடுத்துகாட்டு :
ஞாயிறு பகலில் மாந்தி உதயமாகும் நேரம் 26 நாழிகை (10 மணி 24 நிமிடங்கள்) இரவுக்கு ஞாயிறுவின் 5வது நாள் வியாழனுடைய 10 நாழிகை (4 மணி) வரும்.
எளிய முறை :
சூரிய ஸ்புடம் + மாந்தி உதய நாழிகை * 6 எடுத்துக்காட்டு.
சூரிய ஸ்புடம் = 160.15
சனிக்கிழமை மாந்தி உதயம் = 2 நாழிகை
எனவே மாந்தி உதயம் = 6 * 2 =12 நாழிகை
சூரிய ஸ்புடம் + மாந்தி உதயம் = 160.15+12 =172.15 தான் மாந்தி பகலில் . உள்ள இடம்
இத்துடன் 30 யைக் கூட்டினால் மாந்தி இரவில் உள்ள ராசி ஆகும்.
எனவே, இவ்வாறு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன்களை அறியவும்.
தாம்பூல பிரசன்னம் மூலம் கீழ்கண்ட செய்திகளை எளிதாக அறியலாம்.
வெளிநாடு போக :
1. 4க்கு உடையவர் சர ராசியில் இருக்க வேண்டும்.
2. 4க்கு உரியவர் ஜல ராசியில் இருக்க வேண்டும்.
3. 10,4க்கு உடையவர் சம்பந்தம் இல்லையா? ஊரை விட்டு போவார்.
இதே போல் நவாம்சம் பார்க்க வேண்டும்.
திருமணம்
7ம் இடம் சுக்கிரன் நிலையைப் பார்.
வீடு கட்ட
4 & 7 க்கு உடையவர் னிலை
வேலை
10க்கு உரியவர் நிலை
காரகர் : குரு, சனி, சூரியன், செவ்வாய் நிலை.
பணம் கிடைக்குமா?
2 & 1ம் இடம்
7ம் இடம் நிவர்த்தி ஸ்தானம்
பரிகார பலன் அறிய : 10ம் இடம்
7ம் இட அதிபதி நன்கு இருந்தால் :வெற்றி
பிரிவினை : 7 & 8 சந்திரன் நிலை
தாம்பூல பிரசன்னம் மூலம் கோவில் செய்திகள் அறிதல்
30.07.2004 வெள்ளி ஆடி 17 அன்று மதுரை அருகே ஒரு கோவிலில் தாம்பூல பிரசன்னம் போடப்பட்டது. அன்று கிரக நிலைகள் அருகே உள்ளவாறு இருந்தன.
கொண்டு வந்த தாம்பூலத்தின் எண்ணிக்கை 10
எனவே 10 * 2 = 20
பஞ்சபூதங்கள் 5ஆல் பெருக்க = 20 * 5 =100
ஆன்மா 1யை கூட்ட = 100 + 1 = 101
அதை நவக்கிரகங்கள் 7ல் வகுக்க = 101/7 =14 3/7 =மீதி 3.
எனவே,
தாம்பூல கிரகம் 3ம் எண்ணுக்குரியவர் செவ்வாய். செவ்வாய் உள்ள ராசி கடகம். எனவே கடகம் தாம்பூல லக்னம் ஆகும்.
கோவில் பிரசன்னத்தின் பலன்கள் :
கோவில் பிரசன்னத்தின் முதல் பாவம் குறிப்பது :
கோவில் பூர்வீகம் – சிலை - வடிவம்
வெற்றிலை தந்த நேரம் :
காலை 11.26 மணி. எனவே, மேல் இருந்து வெற்றிலையை எடுத்தார்.
வெற்றிலை நிலை :
சில ஓட்டைகள் காணப்பட்டன.
கிரக நிலைப்படி பலன்கள் :
ஆருட லக்னத்தில் சூரிய பகவான் சிவனை குறிப்பவர். ஆனால் சூரியனுடன் செவ்வாய் நீசம். கடக ராசி, நீர் ராசி, செவ்வாய் 5 மற்றும் 10ம் உரியவர். சூரியன் மேஷத்தில் உச்சமாவார்.
எனவே இங்கு பூர்வீகத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது எனக் கூறியவுடனே மக்கள், “ஆம், இருந்தது” எனக் கூறினார்கள்.
அது தென்கிழக்கு எல்லையில் இருந்தது. ஆற்று பக்கம், கிணறு, குளம் இருந்து மூடப்பட்டது.
லக்னத்தில் செவ்வாய். எனவே ஆரம்பத்திலிருத்து இந்த கோவிலுக்காக சண்டை, தகராறு, கோஷ்டி பூசல் இருந்த்து. செவ்வாய் 5ம் வீட்டிற்கு அதிபதி. அவர் நீசம். எனவே ஆதியில் இருந்த மூலஸ்தானம் மாற்றப்பட்டதா?
மக்களின் பதில் :
முதலில் சிவன் கோவில் இருந்தது. இறைவன் பெயர்
திருமேனிநாதன். பின்பு அம்மன் கோவில் ஆனது. அது 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.
லக்னத்தில் 2ம் அதிபதி சூரியன் உள்ளது. ஜல ராசி. எனவே கீழே விழுந்து தேவதை தலையில் அடிப்பட்டது.
சூரியன் 10ல் மேஷ ராசியில் உச்சம். எனவே, ஒரு காலத்தில் சிறப்பாக கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டன.
எனவே, 5,10க்குரிய செவ்வாய் நீசம். உடன் சூரியன், சூரியன் மேஷத்தில் உச்சம். எனவே ஆரம்பத்தில் சிவன் கோவில் – பின்பு செவ்வாய் நீசமானதால் அம்மன் கோவில் – மேஷத்தில் ராகு – அம்மனைக் குறிக்கும்.
2ம் வீடு : கோவில் நிர்வாகம் – வரவு – உண்டியல் – பூமாலை –அலங்காரங்கள்
வெற்றிலை நிலை : ஓட்டை இருக்கிறது. எனவே வரவு இல்லை.
கிரக நிலைப்படி : 2ல் மாந்தி -2ம் அதிபதி சூரியன் 12ல் எனவே வருமானம் இல்லை. சூரியன் அரசை குறிப்பதால் வருமானத்தை அரசு அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்கள்.
3ம் வீடு குறிப்பது : நைவேத்தியம் – பாரிகாரகர்கள் –கோவில் நடத்தும் சிப்பந்திகள் மற்றும் சுத்தம் செயிபவர்கள் அதாவது வேலை ஆட்கள்.
வெற்றிலை நிலை : ஓட்டை (அ) துவாரம் உள்ளது. சுவாமிக்கு பிரசாதம், படையல் ஒழுங்காக செய்து படைக்கவில்லை.
கிரக நிலை : 3ம் அதிபதியுடன் மாந்தி உள்ளார்- எனவே நைவேத்திஉயம் இல்லை.3ம் இடம் மடப்பள்ளியில் தயாராகும் நைவேத்தியம் சுத்தம் இல்லை.
4ம் பாவம் : பிரகாரம் – கொடி மரம் – வாகனம் – உப தேவதைகள் மண்டபம் –சாமரம்
வெற்றிலை நிலை : மேல் தூசு படிந்துள்ளது – துவாரம். எனவே உப தேவதைகள் சிறப்பாக இல்லை
கிரக நிலை : 4ல் உள்ள கிரகம் கேது. செவ்வாய் பார்க்கிறார். கேது உள்ளதால் பிரேத தோஷம் உண்டு. பசு, பூனைக்குட்டி இறப்பு உண்டு.
பைரவர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பைரவர் தெற்கு முகமாக இருக்க வேண்டும். ஆனால் வடக்கு முகமாக உள்ளது.
தண்ணீர் – நீர் கிணறு அசுத்தம் உண்டு – குளத்தில் / கிணற்றில் குழந்தை விழுந்து இறந்த்து.
செவ்வாய் 4யை பார்த்தால் சண்டை, சச்சரவு உண்டு.
5ம் பாவம் :
மூல மந்திரங்கள் – சிலை – தேவதைகளைக் குறிக்கும்.
வெற்றிலை நிலை :
பல விக்கரகங்கள் பின்னப்பட்டுள்ளன – விரிசல்கள் உண்டு. மந்திரங்களை பூசாரி தெரியாமல் கூறுகிறார். பூசாரிகளுக்குள் கலகம். வேலைக்காரர்கள் இடையே கலகம்.
6ம் பாவம் : உண்டியல், கோவில் சொத்தை திருடுபவர் – சிலைகளுக்கு தீங்குவிளைப்போர் – கோவிலில் ஏற்பட்டுள்ள அசுத்தம்
வெற்றிலை நிலை:
அங்கங்கு துவாரங்கள் தேவதைக்குரிய நிலங்கள் அபகரிப்பு. திருட்டு ஏற்பட்டுள்ளது.
கிரக நிலை :
குரு பார்வை உள்ளதால் இன்னும் கோவிலுக்கு சொத்து உண்டு.
7ம் பாவம் :
கோவிலுக்கு வாங்கும் நகைகள் – துணிகள் – திருவிழாக்கள் – மக்கள் காணிக்கைகள்.
வெற்றிலை நிலை :
துவாரங்கள். எனவே, திருவிழாக்கள் இல்லை. மக்கள் காணிக்கைகள் இல்லை – வரவு இல்லை
8ம் பாவம் :
நைவேத்தியம் – வாத்தியம் வாசிப்பவர் – கோவில் மேற்பார்வையாளர் செய்யும் செயல்கள் – கோவிலுக்கு வருபவர் மனப்பான்மை.
வெற்றிலை நிலை :
2 துவாரங்கள் உண்டு. 8ம் இடம் கும்பம். அதிபதி சனி லக்னத்திற்கு 12ல். ராசிக்கு 6ம் அதிபதி புதன் தன் ராசிக்கு 12ல்.
ஒரு சித்தர் உபாசனை செய்த வன துர்க்கா தேவி உள்ளது
9ம் பாவம் :
கோவில் அமைப்பு – கோவிலுள்ள கோபுரங்கள் – கோவில் நிலங்கள் – மரம் – வருமானத்தைக் குறிக்கும் – கோவில் வரலாறு.
கிரக நிலை :
9ம் அதிபதி குரு 2ல் மாந்தியுடன். எனவே ஒரு காலத்தில் இந்த கோவிலில் பிராமணர் பூஜை செய்து இருந்தார்கள். குரு, சூரியன் வீட்டில் இருப்பதால் பின்பு அரசாங்கத்திற்கு இக்கோவில் சொந்தமானது. பிராமணரைக் குறிக்கும். குரு மாந்தியுடன் உள்ளதால் பிராமணரிடையே சண்டை ஏற்பட்டு வடக்கு போனார்கள்.
பின்பு செவ்வாய் லக்னத்தில் உள்ளாதால் படைத்தலைவர்கள், க்ஷத்திரியர்கள் ஆதிக்கத்தில் கோவில் வந்தது. பின்பு நம்பூதிரிகள் வந்து அரசர் அனுமதியுடன் பூஜை செய்தார்கள் ஏன்? லக்னத்தில் குரு உச்ச இடம் ஆவதால்.
10ம் பாவம் :
இது நித்திய பூஜை, உற்சவம், விழாக்களைக் குறிக்கும்.
10ம் வீட்டில் ராகு. 10ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம். எனவே பூஜை செய்ய தெரியாதவர் பூஜை செய்கிறார். திருவிழாக்கள் நடைபெறவில்லை.
வெற்றிலை நிலை : ஒட்டை
11ம் பாவம் :
கோவில் பண வரவு – பூசாரி செய்யும் பூஜை கோளாறு வெற்றிலை இல்லை
11ம் இடம் பாதக இடம் சந்திரன் ஆட்சி. எனவே, ஆரம்பத்தில் பண வரவு இருந்தது.
12ம் பாவம் :
பூஜை செய்பவன் மனநிலை – பண விரயம் – நஷ்டம் – கோவிலுக்கு ஏற்படும் குற்றம் குறைகள்.
12ம் இடம் மிதுனம். அதன் அதிபதி புதன் மாந்தியுடன் உள்ளார்.
12ல் சனி. எனவே, கோவில் சொத்து கோவிலுக்கு வரவில்லை.
தாம்பூல லக்னப்படி பலன்கள்
சூரியன் - அரச உதவி
சந்திரன் - தெய்வம்
செவ்வாய் - வழக்கு, வம்பு
புதன் - காரிய வெற்றி
குரு - தடங்கல், கடவுள் உதவி
சந்திரன் - வெற்றி
சனி - விபத்து
பிரச்சனைகள் தீர்க்க :
1, 5, 9ல் சுபர் ; 4ல் சுக்கிரன் ; 10ல் உள்ள அதிபதி நிலை குரு ஆருட லக்னத்திற்கு வரும்பொழுது பிரச்சனை தீரும்.
வேலை வாய்ப்பு :
10 – தொழில் ; 11 – வழக்கு வெற்றி ; 6 – ஐ.ஏ.எஸ்.அரசு பணி
எப்பொழுது முடியும்
சூரியன் - 30 நாட்கள்
சந்திரன் - 1 வாரம்
செவ்வாய் - 44 நாட்கள்
குரு - 1 மாதம்
சுக்ரன் - 27 நாட்கள்
சனி - 72 நாட்கள்
விதிகள் :
4,10 - சூரியன்
5,9 - குரு
1,4 - சுக்கிரன்
லக்னம் - புதன், சந்திரன்
சனி, செவ்வாய் - சிபாரிசு நிலை
ராகு, கேது - இல்லை
திருமணம் :
7ம் இடம் - விரும்பும் பெண்
4ம் இடம் - வெற்றி
10ம் இடம் - பெண் மணப்பாள்
சுபர் பார்வை - தேர்வு பெறும்
இழந்த பொருள் கிடைக்குமா?
தாம்பூல லக்னம் – அதிபர் உள்ள நிலைப்படி பலன்
வியாதி :
12ம் இடம் - வியாதி
வியாதி - 6
குணமாவாரா? - 10
பரிகாரம் - 5, 9
குழந்தை உண்டா?
யமகண்டன் + குளிகன் = அனுஷம் நட்சத்திரம்
கருக்கலைப்பு
5ம் அதிபதி குருவால் பார்க்கப்பட யமகண்டன் எனில் குழந்தை இல்லை.
யோக ஸ்புடம்
லக்னம் + எமகண்டம்
இது மனித ராசி = குழந்தை
இது ஆண் ராசி = ஆண்
இது பெண் ராசி = பெண்
இது அலி ஆனால் = கரு கலைப்பு (if see அலி)
யோக ஸ்புடம்
12ல் சூரியன்
4ல் சனி
6ல் குரு = குழந்தை
8ல் செவ்வாய்
9ல் கேது
நன்றி: ஜோதிடஅரசு பிப் 2006 இதழின் இனைப்பு:
The End

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.