ஆன்மா
................................................
ஆன்மா பற்றி எனக்கு புரிந்ததை என் பார்வையை விவரிக்கிறேன் தவறு இருந்தால் திருத்தவும்
ஆன்மா என்பது முழுமையின் வெறுமையே ஆன்மா என்பதற்குள் எல்லாவும்
இருக்கிறது அதே சமயம் எல்லாவற்றுக்குள்ளும் ஆன்மா இருக்கிறது உதாரணத்திற்கு
ஆன்மா நம் மனதின் மையமான புருவமத்தியில் இருப்பதாக வைத்துகொண்டால் ஆன்மா
நமக்குள் இருக்கிறதல்லவா இப்போது ஆன்மாவிற்குள் நாம் சென்றுபார்த்தால்
வெறுமையே இருக்கும் அந்த வெறுமையில் தான் நாம் வாழும் பிரபஞ்சமும் அடக்கம்...இன்னும்
விளக்கமாக சொல்கிறேன் ஒரு அணு வெடித்து உருவான அணு கூட்டத்தில் உள்ள
அனைத்து அணுக்களும் ஆதி அணுவை தன்னுள் பொண்டிருப்பதை போல..கடவுள் என்ற
வார்த்தையும் கூட ஆன்மாவையே குறிக்கும் கட+உள் அதவாது மாயையான உடலை கடந்து
மனதை கடந்து ஆன்மாவை சென்றடைந்தால் மட்டுமே அந்த வெறுமை அல்லது முழுமையை
அடைய முடியும் என்பதையும் கடந்தும் உள்ளும் உள்ளதையும் நம் முன்னோர்கள்
கடவுள் என்று ஒரே சொல்லில் புரியவைத்துவிட்டார்கள்..கடவுள் என்பது
வேறுயாரும் இல்லை சாட்சாத் நாமே தான்..மனதை கடந்து ஆன்மாவை அதாவது நம்மின்
உண்மை இருப்பை அடைய தியானம் செய்யுங்கள் நன்றி...புரியாதவர்கள் இரண்டு
மூன்று முறை படியுங்கள் நன்றி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.