குலதெய்வம் அர்ச்சனை வழிபாடு !
மனிதர்களுக்கு ஏற்பட்டு இருக்கும்
கர்மாவிற்க்கு உடனே நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறான
ஒன்று. கூடிய விரைவில் நல்லத நடக்கும் என்று நினைத்துக்கொண்டு குலதெய்வமே
சரணாகதி என்று அடைந்துவிட்டால் உங்களை காக்க உங்களின் குலதெய்வம் ஓடி
வரும்.
நீங்கள் பத்து ரூபாய்க்கு உதிரிபூவை வாங்கி உங்களின் வீட்டிலேயே
உங்களின் குலதெய்வத்தை நினைத்து ஒவ்வொன்றாக அர்ச்சனை செய்து அதன்
காலடியில் போடுவது போல் போடுங்கள். உங்களின் குலதெய்வம் உங்களிடம் ஒடி வரும்.
எத்தனையோ பூ மாலைகளை நீங்கள் போடலாம் ஆனால் அந்த பூ மாலைகளை விட
உதிரிபூவிற்க்கு என்று தனிசக்தி இருக்கிறது. அது என்றால் இயற்கை தன்மையோடு
இருப்பதால் அப்படியோரு சக்தி வெளிப்படும். உதிரிபூக்களை கொண்டு அர்ச்சனை
செய்யும்பொழுது உங்களின் குலதெய்வம் உங்களிடம் வரும். பூஜையறையில்
விளக்கை ஏற்றி அமர்ந்துக்கொண்டு இப்படி அர்ச்சனை செய்யுங்கள். உங்களின்
மனதில் அந்த பூ உங்களின் குலதெய்வத்தின் காலடியில் போய் விழுவதுபோல்
நீங்கள் மனதில் நினைத்தால் போதும்.
ஒவ்வொரு நாளும் இதனை
செய்துக்கொண்டு வரும்பொழுது உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நிச்சயம்
அருள்பாலிக்கும். குலதெய்வத்தின் பாதத்தில் நமது பூக்கள் சென்று விழுவதால்
குலதெய்வத்தின் முழுமையான அருள் கிடைக்கும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.