Tuesday, 2 August 2016

தந்திர தமிழ்

🌹தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம் - 5🌹

👉�நெடில் எழுத்துகள் - ஓர் ஆய்வு

🌻நெடில் எழுத்துக்கள்  நாம் ஏற்கனவே பார்த்ததுதான்

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

🌻இந்த ஏழு எழுத்துகளும் சித்துகள் என நாம் சொல்லும் வேலையை செய்யவல்லது.

👉�சித்து வேலைகள் இப்போது நமக்கு தேவையில்லை அதனால் இதை கருத்தில் கொள்ளவேண்டாம்.

👉�குறிப்பிட்ட ஓசையுடன் இந்த எழுத்துகள் இசைதமிழில்  பயன்படுத்தபடுகிறது.

🌻ஏழிசை எழுத்துகள் இவைதான் இதை கர்நாடிக் சங்கீதத்தில் ச ரி க ம ப த நி என்பார்களே அது போல தான் இதுவும்.

👉�👉�இந்த நெடில் எழுத்துகளை பயன் படுத்துவதில் ஒரு சிக்கல் பிராணா சக்தி அதிகமாக வெளியே செல்லும் அதை சித்துவேலை செய்வதற்கு ஒரு சிலர் பயன்படுத்துகிறார்கள்

🌻அதாவது குறில் எழுத்து சொன்னால் ஒரு மாத்திரை வீதம் செலவு நெடிலாகில் இரண்டு மாத்திரை வீதம் செலவு.

👉�இது அதிகபட்சமாக 4 மாத்திரை வரை நீளும் அது எழுப்புகிற ஒலியை பற்றியது.

🌻ஆண் என்பவன் அதிகபடியான பிராணணை இழக்கிறான் அவன் நெடிலில் வருகிறான்

👉�👉�👉�ஆண் - நெடில்

🌻பெண் என்பவள் தன் பால் அனைத்து சக்தியும் சேகரிக்க தெரிந்தவள் அவள் பிராணனை அதிகம் இழப்பதில்லை,அவள் குறில் சொல்லில் அடக்கம்

👉�👉�👉�பெண் - குறில்

🌻�👉�அதிகபடியான நெடில் எழுத்துகள் இலக்கணமும் இசைதமிழும் பயன்படும் போது பிறர் மீது பிராணனை செலுத்தி எதிராளியை செயலிழக்கச் செய்ய முடியம்.

🌻குறில் எழுத்தை பயன்படுத்தி பிராணை வழுபடுத்தி பிராணதேகத்தை வெளிபடுத்தலாம். இதற்கு மெய் எழுத்துக்கள் துணைபுரியும்.

🌻இந்த ஏழு எழுத்துகளும் இசையாக நான்கு மாத்திரை நீட்ட குறிப்பிட்ட விலங்கின் ஒலியில் இருந்து எடுக்கபட்டது

🌹மயில்,மாடு,ஆடு,கிரவுஞ்சபறவை,பஞ்சமம், குதிரை, யானை இந்த ஒலிகள் நெடிலுடன் ஒத்துபோவதால் இசைதமிழில் இது கொடுக்கபட்டது.

🌻இசை தமிழில் இலக்கணம் மிக முக்கியம் இதை தவறாக ஒரு காலத்தில் பயன்படுத்தியதால் அந்த இலக்கணநூல் அழிக்கபட்டது.( இது பற்றி இசை தமிழில் விரிவாக காண்போம்)

🌻தமிழ் எழுத்துகளில் உயிர் எழுத்துகள் பத்தில் ஐந்து எழுத்து பிராணை அதிகம் கொடுக்கவும் ஐந்து எழுத்துகள் பிராணனை நாம் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவருக்கு கொடுக்க தந்திரத்தில் பயன்பட்டது

🌻அந்த மீதி இரண்டு எழுத்துகள் ஆய்வில் உள்ளது அதை குருவருள் இருந்தால் மற்ற பதிவில் பார்ப்போம்.

🌻இப்படி உயிர்கொடுக்கும் வேலை செய்வதால் உயிர் எழுத்து என வகைபடுத்தினர் இது எழுத்துக்கும்,மனிதனும் உயிர் கொடுக்கும் மொழி என்பதை நினைவில் நிறுத்தவும்.

🙏�உயிர் எழுத்து ஆய்வு இத்துடன் முடித்து கொள்வோம்.

🙏�இது ஒரு தகவல் பகிர்வாக எடுத்துகொள்ளவும்.

🙏�நன்றி🙏�
🌲வாழ்க வளமுடன்🌲

காரிய குரு காரண குரு

இரண்டு குரு (காரிய குரு காரண குரு)- கண்மணி மாலை நூலிருந்து எடுக்கப்பட்டது :-

எல்லாம் வல்ல ஆண்டவர்ஒருவரே என்று யார் நமக்கு உணரச் செய்கிறாரோ-கிடைத்தற்கு அரிதான இம் மானிடப் பிறவியிலேயே அடைதற்கு அரிதான மேலான பேரின்ப பெருநிலைக்கு செல்ல யார் வழி காட்டுகிறாரோ-இவ்வுலக வாழ்க்கையை நமக்கு அறிவித்து வாழ்வாங்கு வாழ வாழ்க்கை நெறியை யார் உபதேசிக்கிறார்களோ-இறைவன் இத்தன்மையன்,நீ இத்தன்மையன்-நீ எப்படி அதுவாக வேண்டும் என உரைக்கிறாரோ அவர்தான் குரு.

குருவாக ஒருவா் வந்துதான் சொல்ல வேண்டும் என்பதல்ல. பல ஞானிகளின் நூற்களை படிக்கும்போது அந்நூலே குருவாகி விடலாம் .அந்நூலாசிரியரே மானசீக குரு ஆகலாம்.ஏதாவதொரு இயற்கை தூண்டுதல் நமக்கு குருவாகலாம்.நூற்களோ,இயற்கையோ,மனிதனோ எப்படியாயினும் சுட்டிக் காட்டிவிட ஒரு குரு தேவை.அவரவா் நிலைக்குத் தக்கபடி அமையும்மெய்ப்பொருள் உணாந்த ஒருவரை குருவாக ஏற்றுக் கொள்வதே சாலச்சிறந்தது.”குருவில்லா வித்தைபாழ்’’ என்ற முதுமொழியை கவனத்தில் கொள்க. நாம் பிறந்ததிலிருந்து நமக்கு ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு குரு உண்டு. முதலில் தாய்,இதுதான் தந்தை எனச் சுட்டிக் காட்டுகிறார்.தந்தை நாம் கல்விகற்க பள்ளியைச் சுட்டிக் காட்டுகிறார்.அரிச்சுவடியை சுட்டிக் காட்டுகிறார் ஒருவா்.படிப்படியாக பல பாடங்களை சுட்டிக் காட்டுகிறார்கள் பலா். நம் நண்பா்கள், வாகனங்கள் ஓட்ட ஒருவா் பயிற்றுவிக்கிறார். இப்படி பலபலவும் பற்பலராலும் சுட்டிக் காட்டப்பட்டு உணர்ந்து வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு வழி காட்டுபவை.

தீயபழக்க வழக்கமுடையவனோடு சோ்ந்தால் அவன் சுட்டிக்காட்டும் தீயவாழ்க்கையில் தன்னை இழப்போர் நல்ல மனிதனாக முடியாது.இவா்களெல்லாம் குரு அல்ல.மனிதன்-மனிதனாக வாழ வழி காட்டுபவரே உண்மையான குரு.இறைவனோடு ஐக்கியமாக விழியாகிய வழியை சுட்டிக் காட்டுபவரே உண்மை குரு.அந்த உண்மை குருவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும்.

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசைபடுத்தபட்டுள்ளது.மாதா பிதாவை எல்லோரும் அடைந்திருக்கிறோம் குரு என்று ஒருவரை பற்றினால்தான் அவா் இறைவனை சுட்டிக்காட்ட நாமும் உணா்ந்து தெய்வமாகலாம். இன்றைய மனிதன் மனிதனாகவா வாழ்கிறான்!அன்றைக்கே சித்தா்கள் பாடிச் சென்றுள்ளனா். எப்படி என்றால் மனிதரில் பறவையுண்டு, மிருகம் உண்டு,நீர் வாமும் பிராணி உண்டு,நாய்,பேய் உண்டு,மனிதரிலும் மனிதனுண்டு,தேவனுண்டு,தெய்வமுண்டு என பலவாறாக கொண்டுள்ள குணத்திற்குத் தக்கவாறு மனிதன் இருக்கிறான் என்கின்றனா் அவனுக்கு குரங்கு புத்தி-ஏண்டா நாய் மாதிரி அலையுறே-அவனுக்கு பேய்க்குணம் அவனைப்பாரு பண்ணி மாதிரி- இப்படி பலா் பலவாறாக பேசுவதைநாம் அன்றாடம் கேட்கத்தானே செய்கிறோம். என்ன இருந்தாலும் இவ்வளவு துன்பத்திலும் அவன் நம்மை கஷ்டப்படுத்தவில்லையே அவன்தான்யா மனுஷன் இப்படியும் நம்மில் பலரும் பேசுவதையும் கேட்கிறோமல்லவா?

மனிதன் மனிதனாக வாழ வேண்டும்.அதற்கு நம் முன்னோர் அறிவுறுத்திய அறவழி நடக்க வேண்டும் . கீழான எண்ணங்கொண்டு செயல்படும்போது மக்களால் தூற்றப்படும் மனிதன் தன் குண மேம்பாட்டால் தேவனாகவும், முடிவில் தெய்வமாகவும் தன்னை வளா்த்துக் கொள்ள வேண்டும்.மாந்தருள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் நம் தாய்க்கு நம்மை பெற்ற பொழுதைவிட ஊரெல்லாம் நம்மை சான்றோர் என போற்றி வணங்கும் நிலையே பெரும் ஆனந்தம் தருவதாகும். கண்கண்ட தெய்வம் தாய் தந்தையா் மகிழ உத்தமனாக வாழ்ந்து வெளியிலே கண்ட தெய்வத்தை-அல்ல தன் அகத்திலே கண்ட தெய்வத்தை ,கண்மூலமாக கண்ட பரம்பொருளை அடைவதே நாம்பெறும் பேறுகளில் மிகமிகச் சிறந்தது ,தலையானது.

தவம் செய்வது எப்படி?

தவம் செய்வது எப்படி?

தவம் என்றால் மந்திர ஜபம் அல்ல. தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்பதோ அல்ல. தவம் என்றால் பிரணாயாமமோ அல்ல. தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல.

கண்மூடி செய்யும் எந்த செயலும் தவம் ஆகாது. கண்களை திறந்து தான் “விழி திறந்து” தான் தவம் செய்ய வேண்டும்.

இறைவன் திருவடியில்(நம் கண்ணில்- கண் மணியில் – கண்மணி ஒளியில்) மனதினை நிறுத்துவதே தவமாகும். சும்மா இரு என்பதன் அர்த்தம் இதுவே. அதாவது நம் மனதை திருவடியில் வைத்து இருப்பதே. குரு தீட்சை பெற்று நம் கண்ணில் உணர்வு பெற்று அதை நினைத்து நினைத்து உணர்ந்து உணர்ந்து அதனால் ஏற்படும் நெகிழ்ச்சியில் திழைத்து திழைத்து சும்மா இருக்க இருக்க நம் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து கொட்டும்.

இங்ஙனம் தவம் தொடர்ந்தால் பலவித அனுபவங்கள் நாம் பெறலாம். நமது வள்ளல் பெருமான் ஞான சரியையில் கூறியபடி நாம் இவ்வாறு தவம் செய்தால் பெறலாம் நல்ல வரமே. நம் வினைகள் எல்லாம் எரிந்து விடும். பெறலாம் மரணமிலா பெருவாழ்வே. பிறவாப்பெருநிலை. அருட்பெரும் ஜோதி இறைவனோடு அந்த பரமாத்மாவோடு பேரொளியோடு நாமும் ஒளியாகி இணையலாம். பேரின்பம் பெறலாம்.

Monday, 1 August 2016

பற்று

பற்றற்ற பற்று

மயானத்தில் முனிவர் ஒருவர் தவம் புரிந்தார்.

அவருடன் சீடன் ஒருவனும் தவத்தில் ஈடுபட்டான்.

ஒரு நாள் நள்ளிரவில் சீடனைத் தனியாகத் தவத்தில் இருக்கச் செய்து, முனிவர் தனது குடிலுக்குள் ஓய்வு எடுத்தார்.

சிறது நேரத்தில் சீடன் முனிவர் முன் வந்து நின்றான்.

“ஏன் இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டாய்.....???” என்ற முனிவரிடம், “மயானத்தில் தனியே இருக்க பயமாக இருக்கிறது” என்று தயங்கியபடி சொன்னான் சீடன்.

“வேதம் படித்த நீ பயப்படலாமா....??? என் சரீரத்தில் நீ வைத்திருக்கும் பற்றுதான் உன்னுள் பயத்தை வரவழைத்தது.

அழியக்கூடிய நிலையற்ற பொருட்களின் மீது பற்று வைத்தவன், அழியாத சத்தியத்தை அடைய முடியாது என்று கடோபநிஷதம் கூறுவதை அறியவில்லையா நீ” என்றார் முனிவர்.

சரீர சுகத்தில் நாம் வைக்கும் எல்லையற்ற பற்றுதான் எல்லாவித துன்பங்களுக்கும் மூலக்காரணம்......!!!

‘இளமை கழிந்து வயோதிகம் வளர்ந்ததும் காம விகாரம் மனதில் இருந்து கழன்று விடுகிறது.

நீர் முழுவதும் வற்றிய ஏரியில் எந்த பிம்பமும் தெரியாமல் போகிறது.

செல்வம் அனைத்தையும் இழந்தவனது வீட்டை சுற்றம், முற்றும் மறந்து விடுகிறது.

பற்றற்ற வாழ்மை மேற்கொள்ளும் போதுதான் துயரங்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது’

என்ற ஆதிசங்கரரின் ஞானமும், கீதையின் சாரமும் ஒரே மையப் புள்ளியில் ஒன்றாக இணைகின்றன.

விரும்பாதது வந்தாலும் துன்பம்;

விரும்பியது விலகினாலும் துன்பம்;

விரும்பியதை அடைந்து அதை இழந்தாலும் துன்பம்.

ஒவ்வொன்றாக மறைந்து போகும் உலக வாழ்வில்….....

ஒரு பொருளின் இருப்பில் கிடைக்கும் இன்பத்தைவிட,

அதை இழந்துவிடுவோமோ என்ற நினைப்பில் எழும் அச்சமும் துன்பமுமே அதிகம் எனும் அறிவு, கண் விழிக்கும் வரை மனிதனுக்குப் பற்றிலிருந்து விடுதலை கிடையாது......!!!

பகவான்ஸ்ரீ ரமணமகரிஷியின் குழந்தைகள்.

★பகவான்ஸ்ரீ ரமணமகரிஷியின் குழந்தைகள்..!★

ஆச்ரமத்தின் கூடத்தில் இருக்கும் கட்டிலிலபபகவான்் ஸ்ரீரமணமகரிஷி  சாய்ந்து அமர்ந்திருந்தார்.

வழக்கமாக அந்த நேரத்தில் வருகின்ற அணிற்பிள்ளைகள் வந்தன.

சிறிதும் பயமின்றி ஸ்ரீ ரமணரின் மேனியில் ஏறியும் இறங்கியும் விளையாடின.

ஸ்ரீ ரமணர் தமது அருகிலிருந்த டப்பாவைத் திறந்து பார்த்தபோது, அன்று முந்திரிப் பருப்புக்குப் பதிலாக அதில் வேர்க்கடலை இருந்தது.

தினந்தோறும் அணில்கள் ஸ்ரீ ரமணரின் கையிலிருந்து முந்திரிப் பருப்பை வாங்கி உண்ணும். அவரே ஊட்டவும் செய்வதுண்டு.

இன்று வேர்க்கடலையை அவர் ஊட்டியதும் அணிற்பிள்ளைகள் அதை ஏற்க மறுத்தன.

அது மட்டுமில்லாமல் முந்திரி கிடைக்காத கோபத்துடன் ‘கீச் கீச்’சென்று கத்திக் கொண்டே தாவித் தாவி அவருடைய உடம்பில் ஏறின.

“வேர்க்கடலையைச் சாப்பிடுங்கள்” என்று குழந்தையைக் கெஞ்சுவதுபோல ஸ்ரீ ரமணர் அணிற் பிள்ளைகளைக் கொஞ்சினார்.

அவையோ தொட மறுத்தன. முந்திரிப்பருப்பு வேண்டும் என்பதுபோல அடம் பிடித்தன.

ஸ்ரீ ரமணர் சமையலறையிலிருந்து முந்திரி இருந்தால் கொண்டு வருமாறு தொண்டர் கிருஷ்ணசாமியிடம் கூறினார்.

தொண்டர் சிறிதளவு முந்திரியைக் கொண்டுவந்து கொடுத்தார். “இவ்வளவுதான் இருக்கிறதா ?” என்றார் ஸ்ரீ ரமணர். தொண்டர், “பாயசத்திற்குப் போடணும்னு கொஞ்சம் வைத்திருக்கிறது” என்றார்.

“இந்தக் குழந்தைகள் எப்படி தவிக்கின்றன. போ போ. பாயசத்திற்கு முந்திரி போடணும்னு கட்டாயமில்லை” என்று ஸ்ரீ ரமணர் கோபமாகக் கூறியதும் தொண்டர் சமையலறையிலிருந்த முந்திரி முழுவதையும் கொண்டு வந்து கொடுத்தார்.

ஸ்ரீ ரமணர் ஆசையுடன் ஊட்ட, அணிற்பிள்ளைகள் சந்தோஷக்குரல்களுடன் உண்டபோது, ஸ்ரீ ரமணரின் வதனத்தில் கருணையொளி வீசியது.

மறுநாளே சென்னையிலிருந்து வந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ ரமணரிடம் இரண்டு பெரிய பொட்டலங்களில் முந்திரிப்பருப்பு கொண்டுவந்து, “அணிற்பிள்ளைகளுக்கு அளிப்பதற்காகவே கொண்டு வந்தேன்” என்றார்.

ஸ்ரீ ரமணர் அணிற்பிள்ளைகளுக்குத் தேவையானது கிடைத்ததில் ஆனந்தம் அடைந்தார்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
நன்றி :இந்து  மத வரலாறு

துரியதவம்

🌹துரிய தவம் 🌹

ஆக்கிணை - சாந்தி இந்த இரு தவம் பயின்ற பின்னர் அதில் கொஞ்சம் உணர்ந்த பின்னர்  செய்ய கூடிய தவம் தான் துரியதவம்

சாதாரணமாக அமர்ந்து கொண்டு கண்களை மூடி
தலை உச்சியில் நினைவை செலுத்தி செய்ய கூடிய தவம்

முறையாக கற்றுக்கொண்டு தனக்குள் ஆழ்ந்த அனுபவம் பெற்ற ஆசிரியர் மூலம் தீட்சை பெற்று செய்ய வேண்டிய தவம்

இதை மேல் நோக்கு தவம் என்று ஞானிகள் சொல்கின்றனர் - காரணம் மூலாதாரம் என்பது கீழ் மையத்தில் உள்ளது அந்த மையத்தில் இருந்து ஆன்மீக உணர்வை மேல் நோக்கி தலை உச்சிக்கு கொண்டும் செல்வதால் இதை மேல் நோக்கிய தவம் என்கின்றனர்

நமது மூளை  பகுதியில் 1000 regional valves இதை சராஸ்காரம் என்று அழைக்கிறார்கள் -  மற்றும் அங்ககே கோடிக் கணக்கான சிற்றரைகள் உள்ளன

நமது ஒவ்வொரு எண்ணமும் மூலத்தில் இருந்து ஓரு அலை இயக்கம் போல இயங்கி இந்த தலை  உச்சியில் உள்ள மூளை செல்கள் மூலம் எண்ணங்களை காண்பித்து கொண்டிருக்கிறது- உணர்ந்து கொண்டிருக்கிறது

ஏற்கனவே காலம் காலமாக பிறவி வழி தொடராக வந்த பொருத்தம் இல்லா எண்ணம் சொல் செயல்கள் மூலம் சுருங்கி இருக்க கூடிய மூளை சிற்றரைகள் இந்த தவத்தில் அது சின்ன சின்ன அறைக்கு உள்ளே சென்று விரிவு படுத்துகிறது

மூளை செல்கள் புத்துணர்வு பெறுகின்றது - சொர்க்க வாசல் திறக்கின்றது என்று வெளியே கோயில்களில் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
ஆனால் உண்மையான சொர்க்க வாசல் திறப்பு என்பது இங்கே தான் திறக்க செய்கிறது

ஆன்மீக பாதையில் தனது ஆன்மாவை இந்த பிரபஞ்சத்துடன் விரித்து இணைத்துக் கொள்ள கூடிய நூலைவாயில்

1000 தாமரை மலர்கின்றது என்று சொல்வது -1000 regional valves  விரிவு பெறுவதையே மறைமுகமாக சொல்லி உள்ளனர்

நாம் பெருமாள் கோவில் சென்றால் இறுதியில் தலை கவசம் ஒன்றை வைத்து எடுப்பார்கள் ஐயர் மார்கள் அதன் பொருள் இது தான் மூளை தலை உச்சியில் உள்ள சொர்க்க வாசல் திறக்கவே செய்கின்றனர் - ஆனால் அது வெறும் கருவி மூலம் திறக்காது - உண்மையான ஆன்மீக உணர்வில் உள்ள ஆன்மாக்கள் தனது சக்தியை கொண்டு இணைத்து அதை திறக்க செய்வது மூலம் தான் அது நடக்கிறது
நமக்கு உள்ளே இருக்க கூடிய ஆறு வேண்டாத குணங்கள் ஆகிய

பேராசை
சீனம்
கடும்பற்று
வஞ்சம்
முறை தவரிய பால் கவர்ச்சி
உயர்வு தாழ்வு மனப்பான்மை

என்ற அடிப்படையில் இயங்கும் தன்முனைப்பு

தான் - தனது-

நான் நான் என்று சொல்ல கூடிய ஆணவத்தன்மை இதில் தான் பிறக்கின்றன என்று மகரிஷி அவர்கள் கூறுகிறது - அனுபவத்தில் அது உண்மையும் கூட என உணர்ந்தேன்

இந்த  குணங்களை ஆய்வு செய்து நற்குணங்களாக தனக்கு உள்ளே உணர்ந்து  மாற்றி அமைக்கும் தன்மையை தவம் கொடுக்கின்றது

நிறைமனம்
ஈகை
மன்னிப்பு
சமநோக்கு தன்மை
கற்புநெறி
பொறுமை

என்ற நட்பண்புகள் உணர்ந்து வாழ கூடிய தளத்தை கொடுக்கின்றது

இந்த தவம் முடித்து உயிர்ப்புள்ள  வாழ்த்து சொல்லும் பொழுது தன்னை சார்ந்த negative விஷயங்கள் மாறி நல்ல நட்புறவு தன்மை நமக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கிறது

மனம் விரிந்து பிரபஞ்ச கலத்துடன் விரிவதை உணர முடியும்

Peneal gland pitutory gland நன்கு சுரக்கும் - எண்ணங்களை சற்று நுனிகி பார்த்து எண்ணங்கள் தெளிவு பெறுவதையும்

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஆழமாக செல்லும் பொழுது எண்ணங்கள் கரைந்த நிலையில் தன்னை இன்னும் ஆழமாக உணர முடியும்

நமது செயல்களில் தெளிவு துல்லியமான முடிவு எடுக்கும் திறன் - எந்த ஒன்றிலும் உண்மையை நோக்கி உணரும் தன்மை வளரும்

தனக்கு உள்ளே ஓரு இனிப்புதன்மை - உடலில் காந்த திணிவு இந்த தவத்தின் மூலம் பெறலாம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் மகரிஷி அவர்கள் உணர்ந்த ஒன்றோடு என்னுடைய அனுபவம் உள்ளது

இது முறையாக கற்றுக்கொண்ட பின் நீங்கள் உங்களுக்கு உள்ளே உணரும் பொழுதே அது உண்மை ஆகும்

ஆன்மீக பாதையில் தனக்கு உள்ளே i இருந்து விரிந்து செல்ல கூடிய பாதை துரியதவம் என்று சொல்ல கூடிய  தலை உச்சி ஆகும்

முறையாக கற்று பயன் பெறலாம்

🌹துரியதவம் செய்முறை 🌹

சாதாரனமாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு-

அதன் பின்

இந்த தவத்தை ஆக்கிணை என்று சொல்ல கூடிய இரு  புருவத்தின் நடுவில் பகுதி நேரமும் தொடங்கி அதன் பின்  - மீதி பகுதி நேரம் தலை உச்சியில் உள்ள துரியத்தில் செய்ய வேண்டும்

நேரம் காலம் பார்த்து எந்த தவத்தையும்  செய்ய வேண்டியது இல்லை- அப்படி நேரம் காலம் பார்த்து செய்வதுக்கு பெயர் சடங்கு

விரும்பி நல்ல உட்சாகத்துடன் செய்ய கூடியவை தான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்

பிரதோஷ_வேலையில்_பஞ்சபுராணம்_பாடுவோம்

#பிரதோஷ_வேலையில்_பஞ்சபுராணம்_பாடுவோம்
-
பஞ்சபுராணம் பாடுதல் என்ற வழக்கம் முற்காலத்தில் நன்றாக இருந்து வந்துள்ளது. தற்காலத்தில் அவ்வழக்கம் சில கோயில்களில் மட்டுமே உள்ளது. சமயக் குரவர்கள், திருமூலர், சேக்கிழார், திருமாளிகைத் தேவர் ஆகியோர் பாடியவை திருமுறைகள் எனப்படுகின்றன. அவற்றில் #தேவாரம் (7 திருமுறைகள்), #திருவாசகம் (திருக்கோவையார்), #திருவிசைப்பா, #திருப்பல்லாண்டு, #திருத்தொண்டர்_புராணம் (பெரிய புராணம்) ஆகிய ஐந்தில் ஒவ்வொரு பாடல் பாடுவது இன்று வழக்காற்றில் உள்ளது. இதுவே பஞ்சபுராணம் பாடுதல் எனப்படுகிறது.
-
சமய நிகழ்வுகளில் விநாயகர் துதியுடன் ஆரம்பிப்பது வழமை. பஞ்சபுராணம் பாடத் துவங்கும் போதும் முடிக்கும் போதும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்ல வேண்டும். பஞ்சபுராணம் ஓதியபின் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் பாடல் ஒன்று ஓதி, “வான்முகில் வழாது பெய்க” என்ற கந்தபுராண வாழ்த்து பாடி நிறைவு செய்வது வழமை.
-
சைவ நெறி பிறழா திருக்கோயில்களில் நாம் சென்று வழிபடுகின்ற நேரங்களில் அங்கே சில காட்சிகளைக் காண்பதுண்டு. பெரிய கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள்.
-
அவர்கள் முடித்த பிறகு தமிழ் வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்சபுராணம் பாடுங்கள் என்றும் கூறுவர். ஓதுவாரும் அவருக்கு தெரிந்த தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசைப்பார். அதன் பிறகு வேதியர்கள் தீபாராதனை நிறைவு செய்து விபூதி பிரசாதம் வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
-
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் ஐந்து பாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் காலையில் சிவ ஸ்தலத்திற்கு சென்று அபிஷேகம் முடிந்த பின் இதனை பாடுவது சிறப்பு. இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே இந்த சுலப பஞ்சபுராணத்தை நீங்கள் பாரயணம் செய்யலாம்.
-
#விநாயகர்_வணக்கம்

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே."
-

#திருஞானசம்பந்தர்_அருளிய_தேவாரம்

"தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே."
-

#மாணிக்கவாசகர்_அருளிய_திருவாசகம்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கு எழுந்தருளுவது இனியே."
-

#சேந்தனார்_அருளிய_திருவிசைப்பா

"கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழிமிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரஎன் கண் குளிர்ந்தனவே."
-

#சேந்தனார்_அருளிய_திருப்பல்லாண்டு

"பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கர அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே."
-

#சேக்கிழார்_அருளிய_பெரியபுராணம்

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்."
-

#அருணகிரிநாதர்_அருளிய_திருப்புகழ்

"ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே."
-

#கச்சியப்ப_சிவாச்சாரியார்_அருளிய_கந்தபுராணம்

"வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்."
-

#திருஞானசம்பந்தர்_அருளியது

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே."
-
"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
-

-
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
-
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||