Monday, 5 September 2016

தெரேசாவின் வரிகள்

அன்னை தெரேசாவின் வரிகள்
 
1)   இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்.

2)   அன்பு சொற்களில் அல்ல; வாழ்க்கையில் வடிவம் பெறுகின்றது.

3)   குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.

4)   வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்.

5)   வாழ்க்கை என்பது நீ சாகும்வரை அல்ல; பிறர் மனதில் வாழும் வரை.

6)   அன்புதான் உன் பலவீனம் என்றால் அதுவே உன் ஆற்றல்.

7)   மனம்விட்டுப் பேசுங்கள், அன்பு பெருகும்.

8)   தண்டனைத் தர தாமதி; மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.

9)   உனக்கு உதவியோரை மறக்காதே.

10) உன்னை நேசிப்பவரை வெறுக்காதே.

11) உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.

12) சிறியவற்றில் நம்பிகைக்கு உரியவராய் இருப்பதே உன் பேராற்றல்.

13) ஆனந்தம் ஆற்றல் மிக்கது.

14) புன்முறுவலோடு உதவி செய்வோரை ஆண்டவர் அன்பு செய்கின்றார்.

15) நோய்களிலே மிகக் கொடிய நோய் அடுத்தவர்மீது அக்கறையற்று இருப்பதே.

16) உண்மையான அன்பு வலிக்கும், வதைக்கும், வெறுமையாக்கும்.

17) பிறர்  நலனுக்காக வாழாத வாழ்வு வாழ்வல்ல.

18) செபமே நம் இல்லங்களை இணைக்கும் காரை.

19) தீர்ப்பிடத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் கிடைக்காது.

20) தனிமையே நவீனத் தொழுநோய்.

21) அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக் கொள்கின்றோம்.

22) உதவும் கரங்கள், செபிக்கும் உதடுகளைவிட மேலாவை.

23) எவ்வளவு கொடுக்கின்றோம் என்பதல்ல; எந்த மனநிலையில் கொடுக்கின்றோம் என்பதே முக்கியம்.

24) குற்றமற்றவரைப் பிறரின் அபிப்பிராயங்கள் பாதிக்காது.

25) ஒரு சிறு புன்முறுவலின் ஆற்றலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது.

26) புன்னகையே அன்பின் ஆரம்பம். 

27) உன் உதவியால் உலகை நீ குணமாக்குகின்றாய்.

28) நீ வாழ, பிறரை அழிப்பதே மிகப் பெரிய வறுமை.

29) உதவி செய்; அஃது உன்னை வருத்தும்வரை உதவி செய்.

30) வாழ்க்கையால் நற்செய்தியை அறிவி; வார்த்தையால் அல்ல.

31) வெற்றிக்காகச் செபிக்காதே; பற்றுறுதிக்காகச் செபி.

32) உலகின் பிளவு, குடும்பத்தில் ஆரம்பிக்கின்றது.

33) புன்னகையே அமைதியின் ஆரம்பம்.

34) உன் வெற்றி அல்ல, முயற்சியே கடவுளுக்குத் தேவை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.