நவகிரக பரிகாரங்கள்
நம் வாழ்க்கை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரகங்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளனர். நவகிரக தோஷம் போக்க பொதுவான வழிமுறைகள் உள்ளன.
🌟 நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தால் சனி, புதன் பாதிப்பிலிருந்து விலகலாம்.
🌟 தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால் குரு அருள் கிடைக்கும்.
🌟 கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடுவதால் சந்திரனின் பலத்தை கூட்டலாம்.
🌟 சு+ரிய பலத்தை அதிகரிக்க வீட்டில் சு+ரியனுக்குரிய யாகங்கள் செய்யலாம். தினமும் சு+ரியனுக்கு நீர் படைக்கலாம்.
🌟 வியாழக்கிழமைகளில் கோவில்களில் லட்டு வழங்கினால் குரு பலன் அதிகரிக்கும்.
🌟 அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியினால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும்.
🌟 சர்க்கரை, கடலைப் பருப்பு, நெய், அரிசி ஆகியவற்றை மாதப்பிறப்பன்று தானமளித்தால், வீட்டில் அன்னபு+ரணியின் அருள் கிட்டும்.
🌟 இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப் பயிறை நீரிலிட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
🌟 வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்கிரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.