ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். {தமிழ் விளக்கத்துடன்}
அனைவரும் பொருள் உணர்ந்து படிக்கவே பொருளுடன்.
1. ஓம் ஸ்கந்தாய நம: - {மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.
2. ஓம் குஹாய நம: - பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.
3. ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.
4. ஓம் பாலநேத்ரஸுதாய நம: - சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.
5. ஓம் பிரபவே நம: - அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.
6. ஓம் பிங்களாய நம: - பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.
7. ஓம் க்ருத்திகாஸூநவே நம: - கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.
8. ஓம் சிகி வாஹநாய நம: - மயிலை வாகனமாக உடையவர்.
9. ஓம் த்விஷட்புஜாய நம: - பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.
10. ஓம் த்விஷண்ணேத்ராய நம: - பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.
11. ஓம் சக்திதராய நம :- பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.
12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: - பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.
13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: - தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.
14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: - ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.
15. ஓம் மத்தாய நமஹ: - மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.
16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: - மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.{தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.
17. ஓம் உன்மத்தாய நமஹ: - தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.}
18. ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: - தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.
19. ஓம் தேவசேனாபதயே நமஹ: - தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.
20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: - ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.
21. ஓம் கிருபானவே நமஹ: - பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.
22. ஓம் பக்தவத்ஸலாய நமஹ: - பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.
23. ஓம் உமாஸுதாய நமஹ: - உமாதேவியின் புதல்வர்.
24. ஓம் சக்திதராய நமஹ: - சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.
25. ஓம் குமாராய நமஹ: - சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: - க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.
27. ஓம் ஸேனான்யே நமஹ: - தேவர்களின் படைத் தலைவர்.
28. ஓம் அக்னி ஜன்மனே நமஹ: - அக்கினிச் சுடராக பிறந்தவர்.
29. ஓம் விசாகாய நமஹ: - விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ: - எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.
31. ஓம் சிவஸ்வாமிநே நமஹ: - தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.
32. ஓம் கணஸ்வாமிநே நமஹ: - சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.
33. ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: - ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர். ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.
34. ஓம் ஸநாதனாய நமஹ: - மிகவும் பழமையானவர்.
35. ஓம் அனந்த சக்தயே நமஹ: - அளவற்ற ஆற்றல் படைத்தவர்.
36. ஓம் அக்ஷோப்பியாய நமஹ – விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.}
37. ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ: - பார்வதியின் அன்புக்குரிய செல்லக் குழந்தை.
38. ஓம் கங்காஸுதாய நமஹ: - சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.
39. ஓம் சரோத்பூதாய நமஹ: - சரவணப் பொய்கையில் பிறந்தவர்.
40. ஓம் ஆஹுதாய நமஹ: - யாகங்களால் போற்றப்படுபவர்.
41. ஓம் பாவகாத்மஜாய நமஹ: - அக்கினியின் புத்திரர்.
42. ஓம் ஜ்ரும்பாய நமஹ: - எங்கும் நிறைந்திருப்பவர்.
43. ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.
44. ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: - பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.
45. ஓம் கமலாஸன-ஸம்ஸ்துதாய நமஹ: - தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மாவாலும் துதிக்கப்படுபவர்.
46. ஓம் ஏக வர்ணாய நமஹ: - ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.
47. ஓம் த்விவர்ணாய நமஹ: - சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.
48. ஓம் த்ரிவர்ணாய நமஹ: - சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.
49. ஓம் ஸுமனோஹராய நமஹ: - அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.
50. ஓம் சதுர் வர்ணாய நமஹ: - மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.
51. ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: - பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ: - உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.
53. ஓம் அஹஸ்பதயே நமஹ: - பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.
54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: - அக்னியில் பிறந்தவர்.
55. ஓம் சமீ கர்ப்பாய நமஹ: - எரியும் கட்டையிலிருந்து நெருப்புப் பொறிகள் கிளம்புவது போல் சிவனின் கண்களிலிருந்து கிளம்பிய பொறிகளிலிருந்து தோன்றியவர்.
56. ஓம் விஸ்வ ரேதஸே நமஹ: - உலகத்திற்கு வித்தாகிய பரம்பொருள்.
57. ஓம் ஸுராரிக்னே நமஹ: - தேவர்களின் பகைவர்களை அழிப்பவர்.
58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ: - மஞ்சள் நிறமாகவும் பொன்னிறமாகவும் காணப்படுபவர்.
59. ஓம் சுபகராய நமஹ: - பக்தர்களுக்கு நன்மையே செய்பவர்.
60. ஓம் வடவே நமஹ: - பிரம்மசாரி விரதம் பூண்டு ஆண்டியானவர்.
61. ஓம் படுவேஷப்ருதே நமஹ: - எதிரிகளிடம் மிகவும் கொடுமையானவர் போல் நடிப்பவர்.
62. ஓம் பூஷ்ணே நமஹ: - எல்லோரையும் பாதுகாப்பவர்.
63. ஓம் கபஸ்தயே நமஹ: - ஒளி வீசும் சூரியன் போல் பிரகாசிப்பவர்.
64. ஓம் கஹானாய நமஹ: - மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.
65. ஓம் சந்திர வர்ணாய நமஹ: - பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.
66. ஓம் கலாதராய நமஹ: - சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.
67. ஓம் மாயாதராய நமஹ: - மாயையை அடக்கியாள்பவர்.
68. ஓம் மஹாமாயினே நமஹ: - பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.
69. ஓம் கைவல்யாய நமஹ: - ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: - பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.
71. ஓம் விஸ்வ யோனயே நமஹ: உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.
72. ஓம் அமேயாத்மனே நமஹ: - அளவிட இயலாத மகிமையுள்ளவர்.
73. ஓம் தேஜோ நிதயே நமஹ; - ஒளியின் பொக்கிஷம் என்று சொல்லும் வகையில் ஒளி பொருந்தியவர்.
74. ஓம் அனாமயாய நமஹ: - வினைப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் நோய்களால் பீடிக்கப் படாதவர் பிறவிப்பிணி இல்லாதவர்.
75. ஓம் பரமேஷ்டினே நமஹ: - தந்தைக்குப் பிரணவ உபதேசம் செய்த ஆச்சாரியனாக இருந்தவர்.
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ: - பரம்பொருளாக இருப்பவர்.
77. ஓம் வேத கர்ப்பாய நமஹ: - வேதங்களின் தலைவர்.
78. ஓம் விராட்ஸுதாய நமஹ: - விராட் சொரூபமான பரமேஸ்வரினனின் புதல்வன்.
79. ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ: - வேடன் மகளான வள்ளி தேவியின் கணவர்.
80. ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: - அழகாகவும்,இனிமையாகவும் பேசுவதயே விரதமாக இருப்பவர்.
81. ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ: - தன்னைச் சரணைந்தடைவர்களுக்கு எல்லா நலங்களையும் வழங்குபவர்.
82. ஓம் சோரக்னாய நமஹ: - பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.
83. ஓம் ரோக நாசனாய நமஹ: - விலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெறிய வியாதிகளையும் நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.
84. ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: - இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.
85. ஓம் ஆனந்தாய நமஹ: - ஆனந்தமே வடிவானவர்
.86. ஓம் சிகண்டினே நமஹ: - சேவற்கொடி உடையவர்
.
87. ஓம் டம்பாய நமஹ: - {குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.
88. ஓம் பரம டம்பாய நமஹ: - எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.
89. ஓம் மஹா டம்பாய நமஹ: - மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறமையும் கொண்டு போர் செய்பவர்.
90. ஓம் விருஷாகபயே நமஹ: - எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.
91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: - மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: - காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.
93. ஓம் அநீஸ்வராய நமஹ: - தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.
94. ஓம் அம்ருதாய நமஹ: - அழிவற்றவர்.
95. ஓம் ப்ராயணாய நமஹ: - எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.
96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: - ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.
97. ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: - விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.
98. ஓம் வீரக்னாய நமஹ: - சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.
99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: - கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.
100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: - சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.
101. ஓம் குஹாய நமஹ: - மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.
102. ஓம் ப்ரீதாய நமஹ: - பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவர்
103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: - தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: - ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.
105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: - பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.
106. ஓம் வேத வேத்யாய நமஹ: - எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.
107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: - பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.
108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: - வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.
சுபம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.