Sunday, 18 September 2016

எதுவும் சுமையாக மாறாது.

உள்ளுணர்வு தரும் செய்தியை கவனித்தல்;

ஓஷோவின் வார்த்தைகள் :

மனப்பதிவை திரும்பி பார்த்தல்

எப்போதும் – உறங்கப் போகுமுன்

முதல் படி – திரும்பிப்பார் – அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார்.

காலையில் இருந்து ஆரம்பிக்காதே.

எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி.

கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார்.

அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.

உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு.

அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே.

கோபப்பட்டு விடாதே.

அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய்.

தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய்.

அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை.

ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான்.

ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை.

நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய்.

வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை.

அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.

காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய்.

பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.

இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல்.

இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம்.

இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள்.

அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள்.

எதுவும் விடுபட்டுவிடாது.

கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.