Monday, 30 May 2016

பக்தி

கணவர் இறந்த பின் தலை முடியை மழித்துக்கொள்ளும் பழக்கம் பிராமண சமூகத்தில் இருந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சாரதாதேவி தன கணவர் இராமகிருஷ்ண பரஹம்சர் இறந்த பிறகு முடியை மழிக்கவோ கைவளையல்களை கழற்றவோ மறுத்துவிட்டார். அவர் எங்கே இறந்தார் ? இப்போதும் என்னுடனேயே  இருக்கின்றார். நாங்கள் உடல் அளவில் கணவன் மனைவியாக வாழவில்லை . இருப்பினும் அவரின் இருப்பை ...அவரின் வாசம் உட்பட ..நான் உணர்கிறேன் என்றார் .பரஹம்சரின் உடலை எரியூட்ட சிதைக்கு கொண்டு செல்லும்போது கூட வெளியே வந்து அவரின் உடலை கடைசியாக தரிசிக்க மறுத்துவிட்டார். அவர் என்னுடன் இருக்கிறார் ..இதைத்தான் சாரதாதேவி சொல்லிக்கொண்டிருந்தார் . மக்கள் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக கருதினர். ஆனாலும் வாழ்க்கைக்குத்தேவையான அனைத்துசெயல்களையும் மற்றவர்களைப்போலவே இயல்பாக அவர் செய்துகொண்டிருந்தார். மக்களுடன் தெளிவாக உரையாடினார் .தெளிவான மனநிலையிலேயே அவர் இருந்தார். அதிகாலையில் பரஹம்சரே எழுந்திருங்கள் ..பக்தர்கள் உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுப்பிவிடுவார் .உணவு நேரத்தில் ஒரு மனைவி கணவனுக்கு உணவு பரிமாறுவதுபோல ராமகிருஷ்ணர் அமரும் ஆசனத்திற்கு முன் உணவை வைத்து ஒரு விசிறி எடுத்து விசிறிக்கொண்டிருப்பார். இரவு இராமகிருஷ்ணர் உபயோகித்த கட்டிலு க்கு கொசுவலை கட்டுவார். கொஞ்சம் இடம் கிடைத்தாலும் கொசுக்கள் வலைக்குள் சென்றுவிடும் ...பிறகு நீங்கள் உறங்கமுடியாது என்று நேரில் உள்ள நபரிடம் உரையாடுவதுபோலபேசிக்கொண்டே பாதங்களுக்கு இடையில் கொசுவலையை இடைவெளியின்றி செருகி வைப்பார்.அனைத்தும் பாவனையே ..பக்தியின் உச்சத்தில் சாரதாதேவி வாழ்ந்துகொண்டிருந்தார் .பரஹம்சரின் இருப்பை முழுமையாக உணர்ந்திருந்தார். அவர் இறக்கும் தருவாயில் பரஹம்சரை எண்ணி கண்ணீர்விட்டு அழுதார். என்ன இது ? உன் கணவர் இறந்தபோதுகூட நீ அழவில்லை..இப்போது அவருக்காக அழுகின்றாயே ? என்று கேட்டவர்களுக்கு அவர் சொன்னார் “அவர் எப்போதும்  இங்கே இருப்பது உங்களுக்குத்தெரியாது . எனக்குத்தெரியும் ...அவரின் தேவைகளை நான் கவனித்துக்கொண்டேன் .எனக்குப்பிறகு அவரை யார் கவனித்துக்கொள்வார்கள் ? யார் அவருக்கு உணவிடுவார்கள் ? கொசுக்கள் உள்ளே போகாமல் யார் அவருக்கு கொசுவலை கட்டுவார்கள் ? நான் இறந்தபிறகு  அவரை நான் காண முடியாது . அந்த துக்கத்தில் நான் அழுகின்றேன் “ என்று சொன்னார்.


   பக்தியின் உச்சநிலையாக இதை நான் உணர்கிறேன் . பக்தியை அறிவின் அளவுகளால் அளந்து புரிந்து  காணமுடியாது. ஆன்மிகம், வழிபாடு, யாத்திரை, பூஜை ,புனஸ்காரம் ,வேதம் , வேதாந்தம் என ஆயிரம் சொல்லிக்கொண்டுபோகலாம் . இதுபோன்ற நிலையெய்த பைத்தியம் பிடிக்கவேண்டும். புறத்தே தெளிவாகவும் அகத்தே இறைஉணரும்  பைத்தியமாகவும் வாழத் தெரியவேண்டும். ஆண்டாள் போல ...மீரா போல ...சாரதாதேவி போல.

வாழ்க்கை மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது

கேள்வி  :  ஓஷோ ,

வாழ்க்கை மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது என்று நீங்கள் அடிக்கடி கூறுகிறீர்கள் . இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா ?

     பதில்  : " ஆமாம் வாழ்வு மாறுபட்ட தன்மையில்தான் இயங்குகிறது .

   அது நம்மிடம் , ' புதுமைகளை உண்டாக்கு ' என்று கூறுகிறது .பிறகு அது , ' அவற்றை அழி ! ' என்று கட்டளையிடுகிறது !

    அது , ' இந்த உலகத்தில் பிறந்து , வாழ் ' என்று கூறுகிறது . பிறகு அது , ' இறந்துவிடு ! ' என்று கூறுகிறது .

    முதலில் அது , ' இந்த உலகத்தில் உள்ளதை அடை ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' அவற்றையெல்லாம் இழ ' என்று கூறுகிறது .

   முதலில் அது , ' பணக்காரன் ஆகு ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' ஏழையாக மாறு ! ' என்று கூறுகிறது .

    முதலில் அது , ' அகங்காரத்தில் இமயமலை உச்சிக்குப் போ ! ' என்று கூறுகிறது . பிறகு அது , ' அகங்காரமற்ற பள்ளத்தாக்கில் விழு ! ' என்று கட்டளையிடுகிறது .

    பிறகு அது , ' இப்பொழுது உனக்கு இரண்டு நிலைகளும் தெரிந்தது இல்லையா ? அதாவது , ' நிழலும் நிஜமும் ! பொய்யும் , உண்மையும் . அதற்காகத்தான் நீ இந்த உலகத்திற்கு வந்திருக்கிறாய் . இப்பொழுது நீ இந்த இரண்டையும் கடந்து செல் ! ' என்று கூறுகிறது . "

கேள்வி  : ஓஷோ , நான் ஏகப்பட்ட தவறுகள் செய்கிறேன் இது எனக்குக் கவலையை அளிக்கிறது . இதை நான் எப்படி போக்குவது ?

பதில்   : " உண்மையை அறியும் புதுமைத் தேடுதலில் ஒருவன் ஏகப்பட்ட தவறுகளையும் , தடுக்கி விழுதல்களையும் எதிர்பார்த்தே நடக்க வேண்டும் . ஏகப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டிவரும் . அவன் வழி தவறிகூட போகக்கூடும் .

ஆனால் அவன் அப்படித்தான் சென்று அதை அடைய வேண்டும் . இப்படி வழி தவறிச் செல்லுவதால் , பின்பு எப்படி , அப்படி வழி தவறிச் செல்லக்கூடாது என்பது அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது . அதனால் அவன் மெல்ல மெல்ல உண்மையை நெருங்கிவருகிறான் . இது ஒரு தனி நபர் முயற்சி , தனி யாத்திரை .

இதில் நீங்கள் அடுத்தவர்களது முடிவில் , முடிவு எடுக்கக் கூடாது . ,......... ★

வாழ்க்கை வாழ்வதற்க்கே :

வாழ்க்கை வாழ்வதற்க்கே :
( மகிழ்ச்சி + ஒழுக்கம் = வாழ்க்கை )

[ ஒரு கிராமத்தில் வசித்து வந்த
ஒரு மனிதன்
திடீரென இறந்து போனான்.,
அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன்
கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]

‪#‎கடவுள்‬ :
"வா மகனே....
நாம் கிளம்புவதற்கான
நேரம் வந்து விட்டது.."

‪#‎மனிதன்‬ :
"இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள்
என்ன ஆவது?"

#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு
செல்வதற்கான நேரம் இது.."

#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."

#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான்
இருக்கின்றனவா?"

#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும்
உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில்
நீ வாழ்வதற்கு தேவையானது.."

#மனிதன் :
அப்படியானால்,
"என்னுடைய நினைவுகளா?"

#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."

#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"

#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன்
சம்பந்தப்பட்டது...."

#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய
குடும்பமும் நண்பர்களுமா?"

#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்...."

#மனிதன் :
"அப்படி என்றால்
என் மனைவி மற்றும் மக்களா?"

#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும்
உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,
அவர்கள் உன் இதயத்துடன்
சம்பந்தப்பட்டவர்கள்...."

#மனிதன் :
"என் உடலா?"

#கடவுள் :
"அதுவும் உனக்கு
சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."

#மனிதன் :
"என் ஆன்மா?"

#கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல...,
அது என்னுடையது......."

●மிகுந்த பயத்துடன்
கடவுளிடமிருந்து
அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன்,
காலி பெட்டியைக் கண்டு
அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய
கடவுளிடம்,
"என்னுடையது என்று
எதுவும் இல்லையா?"
எனக் கேட்க,

#கடவுள் சொல்கிறார்,

"அதுதான் உண்மை..
நீ வாழும்
ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..

வாழ்க்கை என்பது
நீ கடக்கும் ஒரு நொடிதான்..

ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வதுடன்
நல்ல செயல்களை மட்டும் செய்..

எல்லாமே உன்னுடையது என்று
நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ்

அது மட்டுமே நிரந்தரம்..

-- உன் இறுதிக் காலத்தில்
நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது●

♡வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வோம்.,
அதே நேரம்
ஒழுக்கத்துடன் வாழ்வோம்..

Sunday, 29 May 2016

போராட்டக் களத்திலே

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளரும் போது முதலாளி அதனைக் கண்டார். ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.
இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான். இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.
திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.
இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்
.
வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். உடனே முதலாளியம்மா கேட்டார்; எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், முதலாளியம்மா 'ஓ' என அழத்தொடங்கினார். இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..
அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை. என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந
்தேன். ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.
நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.
அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.
ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.
பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் "எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது" என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.
நாமும் இவ்வாறு தான் அடுத்தவரது நிலைமைகள் புரியாது பார்த்த மாத்திரத்திலே அவர்களை தவறாக முடிவெடுத்துவிடுகிறோம். அடுத்தவரது
நடவடிகைகளுக்கு பின்னால் ஒளிந்துள்ள உண்மைத்தன்மையை அறியாமல்.
இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;
01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.
02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
<><><><><><>><><><><>><>><
படித்ததில் பிடித்தது

கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள

என்ன பொருத்தம்..நமக்குள் இந்தப் பொருத்தம்
கன்னி
கன்னியில் பிறந்தவர்கள் அதிபுத்திசாலிகள். தன் துணையைத் தேடிக்கொள் வதில், மிகவும் கஷ்டப்படுவார்கள். ஏனெனில், இவர்கள் மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதைவிட, அறிவு பூர்வமான துணையை எதிர்நோக்குவதேயாகும். இவர்கள் சந்தோஷத்தையும், காமத்தையும் விட அறிவுக்கு முக்கியத்துவமளிக்கும் அறிவு ஜீவிகள் ஆவர். சில நேரங் களில், இவர்களது எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். மிகவும் கூச்சசு பாவ முள்ள இவர்கள், காதலைக் கையாள்வதில் வல்லவர்கள் அல்ல. பொறுமையுள்ள இவர்க ளுக்கு தங்கள் துணைமீது குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.எனவெ,பிறரோடு சம்பாஷிக்கும் போது அவர்களை சாந்தப்படுத்தும் விதத்தில், தாஜா செய்ய முற்படக்கூடாது. மென்மையான உணர்ச்சிகளோடும் இவரகள் இருக்கக்கூ டாது. இவர்களால் காதலிக்கப்படுபவர்கள், அழகில்லாதவர்களாக இருந்தாலும், அறிவில் லாதவர்களாக இருந்தாலும், எல்லாம் இருப்பதாக பாராட்டப்பட வேணடும், மெச்சப்பட வேண்டும்.அப்படி செய்தாலே, இவர்களும் பாராட்டப்படுவர் என்பதை தங்கள் மனதிற் கொள்ளவேண்டும்.
கணவர்கள் :- கன்னி இராசிக்காரர்கள், திருமண பந்தத்தை, ஒரு சமூகத் திட்ட மாகவும், பார்ட்னர் ஷிப் ஒப்பந்தமாகவும் கருதுவதால், வெகு காலத்திற்கு பிரம்மச்சாரிகளாக காலம் தள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும், இவர்களின் துணையின் உதவியோடு இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைந்து விடுகிறது. மிகவும் சிக்கனத்தை கடைப்பிடிப்பதால், இவர்களின் குடும்பவாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே, சிக்கனப் பழக்கத்தை இவர்கள் கைவிட்டால் நல்லது.
மனைவிகள் :- 2, 7 மற்றும் 11 ஆம் அதிபதிகள், முறையே சுக்கிரன், குரு, சந்திரன் ஆகியோர் சுபர்கள் ஆவர். இவர்கள் குறிகாட்டுவது, புத்திகூர்மை, மேதாவித்தன ம் உடைய அனுசரித்துச் செல்லும், காரியத்தில் கை கொடுக்கும் அன்புக் கணவன் இவர்களுக்கு அமையும் என்பதையே ஆகும். இவர்களை நன்கு புரிந்து கொண்டு வாழும் துணையே அமையும். எனவே, இனபகரமான, இனிய வாழ்க்கை இவர்களுக்கு அமைவது உறுதி. இவர்கள் சிக்கனம் பார்ப்பவராக இருக்கலாம், ஆனால் கஞ்சத்தனம் செய்பவர்களாக இருக்கக்கூடாது. இவர்கள் தன் கணவனுக்கு பக்தி மார்க்கத்தில் ஒத்துழைக்கவோ, அவ னுக்கு இனிய துணையாகவோ இருக்கமாட்டார்கள். ஆயினும், இவர்களது வாழ்க்கைச் சக்கரம் சீராகவே ஓடும். இப் பெண்கள் காமத்தைப் பொருத்தவரை, மிகவும் தொல்லை தரக்கூடிய நிகழ்வாகவும், மோசமான நடவடிக்கையாகவும் கருதுவர். இந்த விஷயத்தில், இவர்களை, இவர்களாகவே மாற்றிக் கொண்டால்தான் உண்டு. இதன் காரணமாக, இவர்களுக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும். இவர்களின் குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளை எந்த விதத்திலாவது, கட்டாயம் செய்து கொடுத்துவிடுவார்கள். எனவே, இவர்களின் குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியமான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர் எனலாம். ஆனால் இவர்கள் குழந்தை களிடம் தங்கள் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.
சீர்மிகு பொருத்தம் :- ரிஷபம்,மகரம் ஆகிய பூமி ராசிகளும், நீர் இராசிகளான கடகம், விருச்சிகம் ஆகியவையும் மிகமிக பொருத்தம் உள்ளவையாகும். திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களையும், சந்திரனின் நட்சந்திரங்களான ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்களையும் மணந்து கொண்டால் முன்னேற்றகர மான, சந்தோஷகரமான வாழ்க்கை இந்த இராசிக்காரர்களுக்கு அமையும்.

வாஸ்து விரைவில் நிவர்த்தி ஆக

உங்கள் வீடு வாஸ்து கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தால் கூடிய விரைவில் நிவர்த்தி ஆக மதுரையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களை சித்திரை நட்சத்திரம் அன்று ஒரே நாளில் வழிபட வேண்டும்.
1. மீனாட்சி சுந்தரேஸ்வரர் - ஆகாயம்
2. தென் திருவாலவாய் - அக்னி
3. முக்தீஸ்வரர் - வாயு
4. திருவாப்புடையார் - நீர்
5. இம்மையிலும் நன்மை தருவார் - நிலம்

எதிர்பார்த்தல்

"நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு
வர வேண்டியது நின்றுவிடாது........

எதிர்பார்த்தாலும்,
எதிர்பாராவிட்டாலும்,
வந்து சேர வேண்டியது
சரியாக வந்தே தீரும். "

'கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும்,
தாயாக இருந்தாலும்...
அவர்களிடம் நான் எதிர்பார்க்க வேண்டியதே இல்லை.

அவரவர்கள் செய்வதைச் செய்யட்டும்.

ஆனால்......
மனைவி என்ற முறையில், கணவன் என்ற முறையில்,
மகன் என்ற முறையில்,
தாய் என்ற முறையில் வயதில், பொருளில்,
ஆற்றலில்,
அதிகாரத்தில் எந்த இடத்தில் இருக்கிறேன்........???

இதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்........???

என்ன செய்ய வேண்டும்.......???
என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு வீட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

சிந்தனை செய்து 'அவரவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று உதவி செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டுமே தவிர..........

'அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்பதற்காக நான் இன்னதை செய்ய வேண்டும்' என்பது இல்லை.

அப்படி நீங்கள் எதிர்பாராது இருப்பதனால், உங்களுக்கு வர வேண்டியது நிற்காது; வர வேண்டியது சரியாக வரும்.

அப்படி வரும்போது, எதிர்பார்ப்பதில் ஒரு கற்பனை மூட்டையைக் கட்டி வைத்திருந்தோமே, அதுவும் இதுவும் இடிபடாது.

என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு அந்நேரத்தில் மனம் தயாராக இருக்கும்.

எந்நேரமும் கற்பனையான எதிர்பார்ப்பு என்ற ஒரே ஓர் வியாதியால் தான் இன்று மனித குலத்தில் துக்கம், சோர்வு, துன்பம், பகை, பிணக்கு எல்லாம் வருகின்றன.

'நான் என்ன செய்ய வேண்டும்......???' என்று கடமையை உணராது அதில் ஓர் உரிமை கோரும் போது துன்பங்கள் தான் வரும்.

மனிதனிடம் இருக்கும் அறிவைக் கொஞ்சம் சிந்தனையில் திருப்பிக் கொண்டு, எதிர்பார்ப்பதை விட்டு விட்டு, கடமை செய்வதில் முனைந்து நிற்போம்.

முயன்றால், ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் முழுமையான ஓர் மாற்றம் கிடைக்கும்; அமைதி கிடைக்கும். அதாவது செல்வந்தனாக இருக்கக்கூடிய உணர்வு வந்துவிடும்.

எதிர்பார்ப்பவன் எப்போதும் பிச்சைக்காரனாகத்தான் இருப்பான்.

எந்த நேரமும் யார் என்ன கொடுப்பார்களோ........???!!!??? என்றுதான் இருப்பான்.

எதிர்பார்ப்பவனாக இயற்கை நம்மைப் படைக்கவில்லை........!!!

அத்தகைய முழுமையோடு இயற்கை நம்மை உண்டாக்கி வைத்திருக்கிறது.........!!!

நம்மிடம் எல்லாம் இருக்கிறது. கற்பனையான எதிர்பார்ப்பு சிறுமையைச் செய்து விடுகிறது. வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

முதலாவது - எதிர்பார்த்தல் தவிர்ப்பது.

இரண்டாவது - பிறருக்கு என்ன செய்ய முடியும்? என்பது.

மூன்றாவது - எந்தச் செயல் செய்தாலும் அந்தச் செயலின் விளைவு பிறருக்குத் துன்பம் இல்லாது நட்டம் இல்லாது இருக்கும் அளவுக்கு பார்த்துக் கொள்வது.

இம்மூன்று கொள்கைகளைக் கடைபிடித்து மனதை வளப்படுத்தி, குடும்பநலம் பெறலாம்.

அப்போது உலகமே நம்முடையதுதான்.

பக்கத்தில் இருப்பவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்கள், எல்லோருமே நண்பர்களாகத்தான் இருப்பார்களே தவிர, எதிர்ப்பு என்பது இருக்கவே இருக்காது.

.* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.

.
"குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில

குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;

கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்

கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;

உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு

உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்........

மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.......!!!

மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்."

💗 மகரிஷி