மூன்று முறை கவனியுங்கள்.
புத்த மதத்தில் மூன்று முறை கவனிப்பது என்ற ஒரு குறிப்பிட்ட முறை உண்டு. ஒரு பிரச்னை எழுந்தால் – உதாரணமாக, ஒருவருக்கு திடீரென்று காமஉணர்ச்சி ஏற்பட்டால், அல்லது பேராசை, அல்லது கோபம் வந்தால் – அந்த நபர் மூன்று முறை அது அங்கே இருப்பதை குறித்து கொள்ள வேண்டும். கோபம் அங்கே இருந்தால், சிஷ்யர் உள்ளுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும், ``கோபம்….. கோபம்…. கோபம்’’ – நீங்கள் அதை குறித்துக் கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் உள்ளுணர்வை இழக்காமல் இருப்பீர்கள். அவ்வளவுதான் – பிறகு அவர் என்ன செய்கிறாரோ அதை தொடர்ந்து செய்துகொண்டேயிருப்பார். அவர் எதையும் கோபத்தோடு செய்யவில்லை. ஆனால் அதை மூன்றுமுறை குறித்துக் கொள்கிறார்.
அது அசாத்தியமான அழகு. நீங்கள் அதை தெரிந்துகொண்ட தருணம், அதை கவனித்து விட்ட தருணத்தில் அது போய்விட்டது. அதனால் உங்களை பிடித்துக் கொள்ள முடியாது. காரணம் அது நீங்கள் மயக்கத்திலிருக்கும் போதுதான் நடக்கும். மூன்றுமுறை கவனிக்கும்போது நீங்கள் அந்த கோபத்திலிருந்து வேறுபட்டவர் என்பது உங்களுக்கு உள்ளே தெரியவரும். நீங்கள் அதை ஒரு பொருளாக்கலாம், காரணம் அது அங்கே இருக்கிறது, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இதை எல்லாவற்றினுடனும் செய்ய வேண்டுமென்று புத்தர் தனது சீடர்களுக்கு கூறினார்.
சாதாரணமாக, எல்லா கலாச்சாரங்களும் நாகரீகங்களும், பிரச்னைகளை அழுத்தி வைக்கவே கற்றுக்கொடுக்கின்றன. அதனால் நீங்கள் மெல்ல மெல்ல அதை மறந்தே போகிறீர்கள் – நீங்கள் அது அங்கே இல்லவேஇல்லை என்னும் அளவுக்கு நீங்கள் அதை மறந்து போகிறீர்கள்.
அதற்கு நேர் எதிரானதுதான் சரியான வழி. அதை முற்றிலுமாக தெரிந்து கொள்ளுங்கள், அதை தெரிந்துகொண்டால் அதன் மீது கவனம் செலுத்தினால், அது உருகும்.
ஓஷோ
Saturday, 17 March 2018
மூன்று முறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.