Friday, 1 September 2017

வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடலாமா?*
********************************

நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ படங்களை வைத்து வழிபடுவது மட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைய இருக்கும் தீய அதிர்வுகளை கட்டுப்படுத்த சில தெய்வீகமான பொருட்களையும் வைத்து வணங்குகின்றனர். அதேபோல் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபடலாமா என்று பார்ப்போம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும். வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹாலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. நம் வீட்டில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

வலம்புரிச் சங்கினை வியாபார ஸ்தலங்களில் வைத்து வழிபட்டால் தொழிலில் வெற்றியும், மேன்மையும் உண்டாகும். இச்சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

தெய்வத்திற்கு வலம்புரிச்சங்கினால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

நம் வீட்டில் வலம்புரி சங்கில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும். வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

செவ்வாய்தோஷத்தால் அவதிப்படும் பெண்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும்.

*வீட்டில் வலம்புரி சங்கை எப்படி வைப்பது ?*

சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும். அதன் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.

சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

சங்கில் தண்ணிர் வைத்து துளசி அல்லது பூக்கள் வைக்கலாம். பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.