Friday, 1 September 2017

சோகம்

🌷 சோகத்தை ஏற்றுக்கொண்டால்

சோகம், சோகமானதாக இருக்கக் காரணம்

நீ அதை விரும்பவில்லை.

நீ அதை தவிர்க்கின்றாய்...

சோகம்கூட அழகானதாகவும், அமைதியாகவும் மலரும்

நீ அதை ஏற்றுக்கொண்டால்

மகிழ்ச்சியால் தரமுடியாத ஆழமான அமைதியை சோகம் தரும்

மகிழ்ச்சி மேலோட்டமானது

சோகம் மிக ஆழமானது

மகிழ்ச்சி ஆரவாரமானது

சோகம் அமைதியானது

மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும் அலை

சோகம் ஆழ்கடல் அமைதி

மகிழ்ச்சி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது

ஆனால்....

சோகம் உனக்கு மட்டுமே

மகிழ்ச்சியுடன் மட்டுமே ஐக்கியமாகிவிடாதே

சோக அனுபவமில்லாதவன் ஏழை

சோகத்தில் ஆழத்தை அனுபவிக்காதவன்
வாழ்க்கையைத் தவறவிட்டவன்

மகிழ்ச்சியும் சோகமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்

சோகத்தில் மகிழ்ச்சியும்

மகிழ்ச்சியில் சோகத்தையும்

காண்பவனின் வாழ்க்கை முழுமையடைகிறது 🌷

🌸 *_ஓஷோ_* 🌸

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.