Thursday, 14 September 2017

வாழ்க்கை

மனிதனுடைய வாழ்க்கை
எப்போதும் ...

வெளி வட்டத்தின் மேல் மட்டுமே
உள்ளது ...

அவனால் ஒருபோதும் உள்ளே
வாழ முடிவதில்லை ...

அவனால் அவனது உள் மையத்தைக்
கண்டு கொள்ள முடிவதில்லை ...

நீ தனியாக இருக்கும் போது கூட
உன்னுடை மனதில் ...

ஒரு பெரிய கூட்டத்தோடு தான்
இருக்கிறாய் ...

நீ எப்பொழுதும் மற்றவர்களைப்
பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறாய் ...

நீ உறங்கும்போது கூட மற்றவர்களைப்
பற்றியே கனவு கொண்டிருக்கிறாய் ...

நீ உன்னுடைய உள் உணர்வோடு
ஒருபோதும் இருந்ததில்லை ...

உன்னுடைய மனம் இடைவிடாமல்
வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது ...

வாழ்க்கையை ஒருபோதும் வெளி வட்டத்தில்
இருந்து அறிந்து கொள்ள முடியாது ...

வாழ்க்கையை உன்னுடைய மையத்தில்
மட்டுமே அறிந்து கொள்ள முடியும் ....

உண்மையாக வாழ்ந்து முடிக்காத
ஒருவனால் ...

உண்மையாக இறக்கவும்
முடியாது ...

நீ வெறும் நம்பிக்கையில் என்றாவது
ஒருநாள் எங்கேயாவது ....

ஏதாவது அற்புதம் நடக்குமா என்று
காத்துக் கிடக்கிறாய் ...

ஒவ்வொரு கணத்தையும் வீணாக்கிக்
கொண்டிருக்கிறாய் ....

எது நடந்தாலும் அது இந்தக் கணத்தில்
மட்டுமே நடக்க முடியும் ....

நீ உன்னுடைய கண நேரத்தைக் கண்டு
கொள்ள வேண்டும் ...

அதற்கு நீ நிகழ் காலத்தில் வாழ
வேண்டும் ...

ஓசோ ...
தந்த்ரா ரகசியங்கள் 1 ....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.