Sunday 27 August 2017

நிகழ்கால வினை

*நிகழ்கால வினை*

*புத்தர்*
-----------------------------------------------
புத்தர் ஞானமடைந்தபின்
அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு

விஷமிட முயற்சி செய்தான்.

அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான்.

ஆனால்

எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்.

ஆனால்

அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,

கண்களை மூடிக் கொண்டது

சிலர் புத்தரைக் கேட்டார்கள்,

''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால்

நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?

அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'

'புத்தர் சொன்னார்,

''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன.

கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.

அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

இது அவனுடைய செயல் அல்ல.

அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன்.

அப்படியில்லை என்றால்

அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?

இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால்

மீண்டும் ஒரு சங்கிலி உருவாகிவிடும்.

என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு
தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.

நான் இனி ஒரு புதிய

சங்கிலியை,

வினையை,

கர்மத்தை

எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.'' என்றார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.