Monday 8 August 2016

துரியாதீதம்

🌹துரியாதீதம் 🌹

துரியம் அதிதமாகும் பொழுது துரியாதீதம் சித்தி ஆகும் என்று சொல்வார்கள்

அதாவது தலை உச்சியில் உள்ள  துரிய சக்கரத்தில் ஆழ்ந்து செல்லும் பொழுது உடலில் இருந்து சக்தி வெளியே விரிந்து பிரபஞ்சத்துடன் இணையும் தன்மை

ஆக்கிணை - சாந்தி - துரியம்  இந்த மூன்று வித தவங்களை முறையான ஆசிரியர் மூலம் தீட்சை பெற்று ஓரளவு உணர்ந்த பின்னர் இதையும் தக்க ஆசிரியர் மூலம் தீட்சை பெற்று செய்ய வேண்டிய தவம்

🌹துரியாதீத தவம் செய்முறை 🌹

சாதாரனமாக அமர்ந்து கொண்டு

கண்களை மூடி கொண்டு

1.முதலில்
ஆக்கிணை - புருவ மையத்தில் நினைவை செலுத்தி ஆரம்பிக்க வேண்டும்

2. பின்பு துரியம் தலை உச்சி  மையத்தில் நினைவை செலுத்தி செய்ய வேண்டும்

3. துவாதசாங்கம் என்று சொல்லக்கூடிய தலை உச்சிக்கு மேலே ஓரு அடி அங்குலத்தில் நினைவை செலுத்த வேண்டும்

4.அப்படியே மனதை மேல் நோக்கி விரித்து சென்று சந்திரனுடன் நினைவை இணைத்து - அதனுடன் ஒன்றி அதுவாகவே கரைந்து விடுதல் 

5. இன்னும்  மனதை மேல் நோக்கி விரித்து சென்று சூரியனுடன்  நினைவை இணைத்து - அதனுடன் ஒன்றி அதுவாகவே கரைந்து விடுதல் 

6. சக்திகலம்

இன்னும்  மனதை மேல் நோக்கி விரித்து சென்று நட்சத்திர கோள்களுடன் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் கோள்களுடன்   நினைவை இணைத்து - அதனுடன் ஒன்றி அதுவாகவே கரைந்து விடுதல் 

7. சிவகளம் - சுத்தவெளி

இன்னும்  மனதை மேல் நோக்கி விரித்து சென்று கோள்கள் நட்சத்திரம் இவைகளுக்கு அப்பால் உள்ள சுத்தவெளியுடன்  நினைவை இணைத்து - அதனுடன் ஒன்றி அதுவாகவே கரைந்து விடுதல் 

சுத்தவெளியை - வற்றாயிருப்பு
பேராற்றல்
பேரறிவு
காலம்
என நான்கு தன்மைகளை உள் அடக்கியது

பிரபஞ்சத்துக்கும்- நம் உயிரின் மூலம் இதுவே என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் உணர்ந்து கூறியுள்ளார்

இந்த விரிந்த நிலையில் எவ்வளவு நேரம் இருக்கலாம் என்ற அவரவர் சுவைத்து உணர்வதை பொறுத்து உள்ளது

பின்பு திரும்பவும் எப்படி படிப்படியாக நினைவை உயர்த்தி சென்றோமோ அவ்வாறே படிப்படியாக கீழே நினைவை இறக்கி  துரிய நிலைக்கு வர வேண்டும்

அதாவது சிவகளம் என்று சொல்ல கூடிய சுத்தவெளியில் இருந்து கீழே இறங்கி

சக்திகளம் -( நட்சத்திர மண்டலம்)

சூரியன்

சந்திரன்

துவாதசாங்கவெளி

துரியம்

பின்பு தலை உச்சியில் உள்ள தவத்தில் பெற்ற சக்தியை உடலுக்கு உள்ளே  முழுவதும் கரைத்து பரவ செய்ய வேண்டும்  பின்பு தான் கண்களை திறக்க வேண்டும்

இதுவே துரியாதீத தவத்தின் செய்முறை ஆகும்

பிரபஞ்சத்துக்கு அப்பால் அதாவது நட்சத்திர மண்டலத்துக்கு அப்பால் உள்ள  சுத்தவெளியே  இறைநிலை என்றும்- இதுவே நமக்குள் இறைவனாக இருந்து கண்ணுக்கு தெரியாமல் வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்றும் மகரிஷி கூறுகிறார்

இந்த இறைநிலை தன்மையை முழுமையாக தன் அகத்தில் ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் என்றும்

அப்படி உணர்பவர்கள் அதே இறைநிலை தனக்கு உள்ளே இறைஉணர்வாக செயல் படும் தன்மை வளரும்

தன்னை உணரும் இத்தன்மையில் - தன் உயிரை அந்த இறை அன்பும் கருணையுமாக இயக்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை அந்த உணர்வில் ஒவ்வொரு
உயிரும் அதே  அன்பும் கருணையில் தான் இயங்குகின்றது என்பதை உணர்ந்து வாழும் தன்மை மலரும் என்பதே இந்த தவத்தில் சுருக்கமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது

உடல் அளவில் சுருங்கியே இருக்கும் மனம் - உடலை விட்டு வெளியே பிரபஞ்சத்தின் அளவு விரிய ஓரு அற்புதமான தவம்

உணர்வுக்கு பொருந்தாத  ஆறுகுணங்கள்(பேராசை, சினம் , வஞ்சம், உயர்வு தாழ்வு மனப்பான்மை , முறை தவரிய காம நோக்கம் , கடும்பற்று ) கரைந்து உணர்வுக்கு பொருந்தும் ஆறு நட்குணங்கள் மலரும் (நிறைமனம், பொறுமை , சமநோக்கு நெறி , கற்புநெறி , ஈகை, மன்னிப்பு )

மொத்தத்தில் நமக்குள் இருக்கும் ஆணவத்தை கரைத்து நமக்குள் இருக்கும் இறைவனை உணர வைக்கும் தவமே

இந்த துரியாதீத தவம் ஆகும்

ஆரம்பத்தில் பாவனையில் செய்து பழக பழக அந்த பாவனைகள்  உணர்வுக்கு உள்ளே கொண்டு செல்லும்

எப்படி இதை ஒவ்வொரு கட்டமாக மனதை விரித்து கவனிக்க வேண்டும் என்பதை

முறையாக தக்க உணர்ந்த  ஆசிரியரை கொண்டு தீட்சை வாங்கி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.