Saturday, 21 January 2017

தந்த்ரா யுக்திகள்

🌺 கவனித்தல் என்பது ஒரே ஒரு விஷயத்திற்குத்  தனிப்பட்டுக் கவனம் கொடுப்பது

விழிப்புணர்வு என்பது கவனம் கொடுப்பது அல்ல அது கவனமாய் இருப்பது

அது எல்லாவற்றையும் பற்றி உணர்வோடு இருப்பது மட்டுமே

விழிப்புணர்வு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது

கவனித்தல் என்பது தனிப்பட்டது

மெது மெதுவாக உன்னுடைய கவனித்தலை விழிப்புணர்வாக மாற்றிக் கொள்ள முடியும்

உன்னால் உனது மூச்சை தளர்வாக எந்த முயற்சியும் இல்லாமல் சந்தோஷமாக அனுபவிக்கும்போது நீ விழிப்புணர்வை அடைந்து விட்டாய்

நம்மால் எல்லோரையும் சந்தேகப்பட முடியும்

ஆனால் நாம் ஒருபோதும் நமது மனதை சந்தேகப் படுவதில்லை

நீ எதையாவது சந்தேகப்பட போகிறாய் என்றால் முதலில் உன்னுடைய சொந்த மனதை சந்தேகப்படு 

மேலும் உன் மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம் இரண்டு முறை யோசி

இறந்த காலமே உன் மனதை உருவாக்குகிறது உன் மனதை ஆட்சி செய்கிறது

மனம் உனக்கு மிகவும் நெருக்கமானது இடைவெளி மிகவும் குறைவு

ஆகவே மனதோடு உன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறாய்

நீ வெறும் எளிமையான வெகுளியான ஜீவனாகவேப் பிறந்தாய்

இந்த சமுதாயம்தான் உனக்கு மனதைக் கொடுத்தது

அதன்பின் வாழ்க்கை இந்த மனத்தோடு சேர்த்துக் கொண்டே வந்தது

மனம் அதனுடைய போக்கிலேயே உன்னைத் தள்ளிக் கொண்டே போகிறது

உன்னுடைய இறந்த காலம் உன் ஒவ்வொரு நிகழ் கால
கணத்தையும் கட்டுப் படுத்துகிறது

அதனால் நீ நிகழ் காலத்தை திறந்த நிலையில் புதுவிதமாக அணுக முடியவில்லை

இறந்த காலமும் மனமும் நிகழ் காலத்தை அழித்துக் கொண்டே இருக்கும்

நீ மனமற்ற நிலையை அடையும் கணத்திலேயே இறந்த காலம் மறைந்து போகிறது

உன்னுடைய மனம் ஒரு வெங்காயம் போன்றது முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம்தான் மிஞ்சும் 🌺

🌷 ஓஷோ
தந்த்ரா யுக்திகள்
விழிப்புணர்வு-கவனித்தல் 🌷

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.