தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன்...!
மனிதனுடைய ஆழ்மனதின் வெளிப்பாடே கனவுகள் ஆகும். எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல. அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வின் வெளிப்பாடுகள். ஆனால் அவற்றுக்கும் பலன்கள் உண்டு. தண்ணீரை கனவில் காண்டால் என்ன பலன் என்று காண்போம்....
💧 ஒரு இடத்தில் தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் விலகும். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.
💧 வறண்ட குளம் இருப்பது போல கனவு கண்டால், புதிய செலவுகள் அதிகமாக உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல தகவல்கள், பணம் சம்மந்தபட்ட தகவல்கள் வர தாமதமாகும்.
💧 குளத்தில் அதிக தண்ணீர் இருப்பது போல கனவு கண்டால், பெரிய இடத்தில் இருந்து ஆதரவும், அவர்களால் பல நன்மைகளும் உண்டாகும். வெகுநாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.
💧 குளத்தில் தாமரை பு க்கள் இருப்பது போல கனவு கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும். நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியாபார விருத்தியும், குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.
💧 குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால் புதிய உற்சாகம் ஏற்படும். உடல் பலவீனம் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்வீர்கள்.
💧 குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில் வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய பிரச்சனைகளையும், தடைகளையும் சந்திக்க நேரும். அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக அமையும்.
💧 குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரையும், வெற்றியையும் யாராலும் பறிக்க இயலாது. வெற்றி பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.
💧 தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள் இருக்கும். திடீர் தனலாபம் ஏற்படும்.
💧 அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.
💧 தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால், செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால் தொல்லையும், வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால் நன்மையும், பணவரவும் இருக்கும்.
💧 தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால், குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். எப்போழுதோ செய்த நன்மைகளின் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
💧 செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால், சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள். அவர்களால் உங்களுடைய மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.