மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.
விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.
இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.
இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.
அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.
Saturday, 30 January 2016
தூக்கம் வரவில்லையா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.