மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.
விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.
இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.
இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.
இது எப்படி சாத்தியம் ஆகிறது?.., இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.
அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.
Saturday, 30 January 2016
தூக்கம் வரவில்லையா?
எள் தானம்
எள், ஸ்ரீவிஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து உருவானது. அதனால், எள் தானம் செய்தால் பல புண்ணியங்கள் கிட்டும். அதனால்தான், பித்ருக்களுக்கு பிண்டம் கொடுக்கும்போது எள்ளையும் கலந்தே தருகிறோம். தர்பைப் புல் ஆதியில் ஆகாயத்தில் உருவானது என்கிறது கருட புராணம்.
அதனால், பல தேவர்களின் அருளாசியும், தெய்வங்களின் அருளாசியும் தர்பைக்கு இருக்கிறது. ரேடியோ அலைகளை பெற ஆண்டனா உதவுவதை போல, நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த தெய்வங்களை சென்றடைய தர்ப்பை உதவுகிறது.
இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில் வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம் படைத்தால் அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன் பலனாக பல தோஷங்கள் நீங்கும்.
பூஜை முறைகள் கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து, பித்ருக்களின் படங்கள் இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும். முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். தோஷத்தையும் சாபத்தையும், அதனால் ஏற்படும் சுப தடைகளை நீக்கி நன்மைகளை அள்ளி தர பித்ருக்கள் காத்திருக்கிறார்கள். அதனால் பித்ருக்களுக்கு மரியாதை தந்து, அவர்களின் பசியை போக்க தை அமாவாசை அன்று பிண்டம் படைத்து பூஜை செய்ய வேண்டும். மறவாதீர்கள். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.
விசேஷமான தை அமாவாசையில், பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது"
👌👌👌🙏🙏🙏👌👌👌
"அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது"
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3).
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
👌🙏👌
"தமிழ் வருடங்கள்":-
~~~~~~~~~~~~
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
"அயணங்கள்":-
~~~~~~~~~~
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
"ருதுக்கள்":-
~~~~~~~~
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
"மாதங்கள்":-
~~~~~~~~
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
"பக்ஷங்கள்":-
~~~~~~~
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
"திதிக்கள்":-
~~~~~~~~
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
"வாஸரங்கள்":-
~~~~~~~~~~
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
"நட்சத்திரங்கள்":-
~~~~~~~~~~~~
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
"கிரகங்கள்":-
~~~~~~~~
கிரகங்கள் ஒன்பது ஆகும்.
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்":-
~~~~~~~~~~~~~~~
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
"நவரத்தினங்கள்":-
~~~~~~~~~~~~
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
"பூதங்கள்":-
~~~~~~~
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
"மஹா பாதகங்கள்":-
~~~~~~~~~~~~~
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
"பேறுகள்":-
~~~~~~~
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்.
"புராணங்கள்" :-
~~~~~~~~~
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,
இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
"இதிகாசங்கள்":-
~~~~~~~~~~
இதிகாசங்கள் முன்று வகைப்படும்.
1.சிவரகசியம்
2.இராமாயணம்
3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.
👌படித்தில்பிடித்து👌
👌👌👌🙏🙏🙏👌👌👌
Wednesday, 27 January 2016
இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க
இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?
தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.
• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.
• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.
• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.
• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.
அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.
தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ள
து. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.
முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.
கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.
ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.
இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.
Monday, 25 January 2016
காக்கை வழிபாடு
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக
்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடிய
சக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..
இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா ….
தெரியவில்லை!.. ஆனால்,
உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,
விபத்துக்கள்,
வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.
தீராத கடன் தொல்லைகள், புத்திர
சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்
– மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்
வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள்
உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான
சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்பஒற்றுமைவ
ேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலி
ப்பெண்கள்காக்கை
களைவழிபடுவதுவழக்கம்.
தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாக
வும்மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திக
ழஇந்தக்காணுப்பி
டிபூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்த
ரையைத்தூய்மையாக
மெழுகிக்கோலமிடுவார்கள்.
அங்கேவாழைஇலையைப
்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங
்களைஐந்து,
ஏழு,
ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவு
எடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’
என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்ப
ினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்
.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.
வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்கா
க்கைகள் “கா…
கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்க
டிஅழைக்கும்.
அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட
்டுச்சென்றதும்,
அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)
காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.
மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திரு
ப்திப்படுத்தியதாவு ம் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.
காக்கைக்குஉணவுஅ
ளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்
.காக்கைகளில்நூபூரம்,
பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனச
ிலவகைகள்உண்டு.
காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்
தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்து
மனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்கள
ின்நிலையைஅறிவாராம்.
அதனால்காக்கைக்க
ுஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம்.
எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிட
ுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும
்திருப்தியடைவதாகக்கருதப்படுகிற
து.தந்திரமானகுணம்கொண்டகா
யாராவதுவிருந்தி
னர்வருவதாகஇருந்தாலும்நல்லசெய்த
ிகள்வருவதாகஇருந்தாலும்முன்கூட்
டியேகாகம்நம்வீட்டின்முன்உள்ள
“கா…கா…’
என்றுபலமுறைகுரல்கொடுக்கும்.
இந்தப்பழக்கம்இன்றும்உண்டு.
காலையில்நாம்எழுவதற்குமுன்,
காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்
தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாச
லைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்
டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்த
ால்அதற்குஉடனேஉணவிடவே
எனவே,
காக்கைவழிபாடுசெ
ய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வ
ாதத்தினைப்பெற்ற
ுமகிழ்வுடன்வாழலாம்!
"உணவு பழக்கம்"
படித்ததில் பிடித்தது பயன் உள்ளது
தமிழரின் "உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
நலம் உடன் வாழ்வோம்.
Saturday, 23 January 2016
தை பூசம்
தைப்பூசம்.
ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடி வரும் நன்னாளில் அனைத்து சிவாலயங்களிலும், அறுபடை வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும் புனித நாளாகும்.
புராணத் தகவல்கள் :
1. தைப்பூச தினத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
2. சிவபெருமான் தனது சக்தியான உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் இந்திராதி தேவர்களுக்கு ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.
3. சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, சித்சபேசனான நடராஜப் பெருமானை, இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இப்புண்ணிய தினத்தன்று தான்.
4. ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார்.
5. இந்தப் புண்ணியத் திருநாளிலேயே அன்னை சக்தி பழனி மலையில் குமரன் கார்த்திகேயனுக்கு அசுரர்களை அழிக்க சக்திவேலை வழங்கி அருள் புரிந்தாள்.
6. முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம்.
7. தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார்.
தை பூசம் கொண்டாடும் ஒரே வைணவத்தலம்:
தைப்பூசம் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் மிகவும் விசேஷமாக கொண்டாடப் பட்டாலும், ஒரு வைணவத் தலத்திலும் தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தத் தலம் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலாகும். இங்கு காவேரி அன்னை மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கிறாள். தை மாதம் பூச நட்சத்திரத்தன்று தான் காவிரிக்கு நேரில் காட்சி கொடுத்து வரம் அளித்தார்.
தைப்பூச விரத முறை :
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.
தேவாரம், திருவாசகம் போன்ற சிவஞான நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையிலும் குளித்து விட்டு சிவபூஜை செய்ய வேண்டும்.
உணவு உண்ணாமல், நண்பகல் 1 வேளை பால், பழம் உண்டு மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து அடுத்த நாள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பவர்கள், அவர் எழுந்தருளியிருக
்கும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றைய தினம் முழுவதும் பாராயணம் செய்ய வேண்டும்.
ஸ்தல விசேஷங்கள் மற்றும் வழிபாடுகள் :
1. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.
2. தை பூசத்தன்று முருகன் தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது. எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
3. தேவ குருவாகிய பிரகஸ்பதி பகவானுக்கு உகந்த தினம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
4. தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக கூறப்படுகிறது. உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிற
து.
5. திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது. அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரம்மஹத்தி, கோயில் வாசலில் நின்று விட்டதால்,அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரம்மஹத்தி வடிவம் அமைக்கப்பட்டுள்
ளது.
6. தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த பார்வதி தேவியான காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த நாளும் இதுவே. எனவே தைப்பூசத்தன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் விழாக்கோலமாக இருக்கும்.
7. வள்ளலார் ஜோதியில் கலந்ததும் ஒரு தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும்.
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ