Monday, 31 July 2017

வீட்டு பூஜை அறையில்

வீட்டு பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108 போற்றி,காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்கவும். ஏதேனும் மலர்கள் ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது அப்பூவை எடுத்து சிலை மீது போட்டு வணங்குங்கள்..உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்…இதன் பின்னால் நிறைய சூட்சுமம் இருக்கு…ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் இருக்கு
தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வெண்கலம்..இவை அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது..நீங்க பால் அபிசேகம் செய்யும்போது அதன் நற்குணங்களை ஈர்த்துக்கொள்கிறது..இது சுக்ர அம்சம்…செம்பு செவ்வாய் அம்சம்…இரும்பு சனி அம்சம்…தங்கம் குரு அம்சம் வெள்ளி சுக்கிர அம்சம்.நீங்க மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில் இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை ஈர்த்துக்கொள்கிறது..பிறகு அவை சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக பரவுகிறது இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக மாறுகிறது..காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது….
iam-pon-silai
ஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க…ஏன்னா..இதுக்கு மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்..வாழ்க வளமுடன் ஏன் நாம சொல்றோம்னா அது நீங்க உச்சரித்ததும் வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது..ஆக உச்சரிச்ச நீங்க வளமுடன் வாழ்வீங்கன்னு சொன்னார்..இதில் தெரிகிறதா சூட்சுமம்..?பூஜை வழிபாடு எல்லாம் நீங்க நல்லாருக்கத்தான்…!!!
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

Saturday, 29 July 2017

திருமீயச்சூர்

*பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர் வரமுடியும்*
**************************************
தமிழகத்தில் ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும்  தலம் திருமீயச்சூர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர். சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை.

இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.

‘அடடா… இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது?!’ என யோசித்தாள்.

எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்! ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது. நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க… குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!

மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!

Saturday, 8 July 2017

எந்த ராசி எப்படி பேசனும்.

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?
மேசம் ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
ரிசபம் ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....
மிதுனம் ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...
கடகம் ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர
்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...
கன்னி ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...
துலாம் ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க
விருச்சிகம்..அன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க
..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..
தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க...அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்...அர்ஜுனன் ..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோ
ட்டியாக வந்தார்...வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
கும்பம் ..அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...
மீனம்..அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..

Wednesday, 5 July 2017

மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி ????

மனிதர்களுக்கு மட்டுமே ஏன் இப்படி ????
.
எப்படிச்சாப்பிடுவது, எப்படிப் பேசுவது, எப்படி உடை உடுத்துவது, எப்படிக் கைகுலுக்குவது, எப்படி அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நடந்துகொள்வது, எப்படிப் பணியாளர்களை நடத்துவது, எப்படி நெருக்கடிகளைச் சமாளிப்பது, எப்படிப் பெண்களைக் கவர்வது, எப்படிக் குழந்தை வளர்ப்பது என்றெல்லாம் ஏராளமான அறிவுரைகளும் பயிற்சி வகுப்புகளும் கிடைக்கும் காலம் இது.
கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதுபோன்ற ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளர்கள் நம்மைக் குழந்தைகளைப் போலவும், முட்டாள்களைப் போலவும் நடத்துவதை நாம் எல்லாரும் ஏதாவது ஒரு தருணத்தில் அனுபவித்தே இருப்போம்.
நாம் குறையுடவர்கள், மேம்பட வேண்டியவர்கள் என்று நம்மைப் பற்றி நாம் வைத்திருக்கும் கருத்தும் குற்றவுணர்வுமே இந்தப் பயிற்சியாளர்களை நாம் ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதற்குக் காரணம்.
ஒரு சந்தர்ப்பம் அல்லது ஒரு சூழ்நிலையைச் சொல்லி எல்லாரிடமும் அந்தப் பயிற்சியாளர்கள் கேள்வி கேட்பார்கள். எல்லாரும் சிறு குழந்தைகளைப் போல ஆர்வத்துடன் பதில்சொல்வோம். ஆனால் அத்தனை பேரும் சொன்னதற்கு மாறான ஒரு கருத்தைப் பயிற்சியாளர் சொல்வார். அப்போது நம்மிடம் ஏற்படும் தாழ்வுணர்ச்சிதான் இவர்களது முதலீடு.
நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் தன்னம்பிக்கையின்மை, நமக்கு நம்மைப் பற்றி இருக்கும் சுய நிச்சயமின்மைதான் ஆகியவைதாம் இதுபோன்ற ஆளுமைத் திறன் வகுப்புகள் பெருகுவதற்கான காரணம்.
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு வகையில் தனித்துவமானவர்கள். அவர்கள் நன்மையும் தீமையுமாக நாள்தோறும் சுய அனுபவம் மூலம் மேம்படுபவர்கள். பெரும் தவறுகளைச் செய்யவும், மாபெரும் நன்மைகளைச் செய்யவும் இந்தத் தனித்துவமே அவர்களுக்கு உதவியாக உள்ளது. அதனால் எந்த மனிதருமே- வெற்றிகரமான மனிதர்கள் உட்பட- நன்மை தீமைகளோடு உள்ளவர்கள்தாம்.
நேர்த்தியாகவும் சரியாகவும் நாகரிகமாகவும் மட்டுமே திகழ்கிற ஒரு மனிதனைக் கற்பனை செய்துபாருங்கள். அவன் சுற்றியுள்ளவர்களுக்கு அலுப்பை மட்டுமே தருவான். எல்லாச் சரி, தவறுகளுடனும் அன்றாட அனுபவங்கள் வாயிலாகவும், குடும்பம், நண்பர்கள், சமூக உறவுகள் மூலம் அவன் மாறிக்கொண்டே இருப்பவன்.
வேலைச் சூழலில் அதிகாரியிடமிருந்து வரும் எந்த உத்தரவையும் எதிர்கேள்வி கேட்காமல் அதை அப்படியே பின்பற்றுவது, சுயசிந்தனைக்குச் செவிகொடுக்காமல் வேலைசெய்வது போன்ற ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை ஒத்த போக்கே இந்த ஆளுமைத்திறன் பயிற்சிகளின் நோக்கமாக உள்ளது. உள்ளூரத் தாழ்வுமனப்பான்மையைக் காப்பாற்றுகிற பணியாட்களே பெரும்பான்மையான நிறுவனங்களின் தேவையாகவும் உள்ளது. இதுவே சுயமேம்பாடு மற்றும் ஊக்கநூல்களின் உள்ளடக்கமாக மாறியது.
அந்த அடிப்படையில் இந்த நூல்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் 'போரிடுவதற்கே' தயார்ப்படுத்துக
ின்றன. சகமனிதனுடன் உறவுகொள்ளச் சொல்லித் தருவதை விட்டு அவனை மேலாண்மை செய்வது எப்படி என்று சொல்லித்தருகின்றன.
பத்து நாட்களில் பணக்காரர் ஆவது எப்படி? போன்ற பல நூல்கள் புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அந்தப் புத்தகத்தைப் படித்து யாராவது பணக்காரர் ஆகியிருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஆசிரியர்கூடப் பணக்காரர் ஆகவில்லை. எப்படி வாழ்வது? என்பதை ஒரு புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியுமா?
இந்த உலகத்தில் வாழும் உயிர்களிலேயே மற்றவர்களுக்கு எப்படி வாழ்வது என்பதைச் சொல்லிக்கொடுப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியும். பெரும்பாலான தன்னம்பிக்கை மற்றும் சுயமேம்பாட்டு நூல்கள் மற்ற மனிதர்களைச் சந்தேகப்பட்டு அவர்களைக் கையாண்டு, பலன் பெறுவதை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. இந்த நூல்களைப் படிக்கும் வாசகரை, அது ஒரு பாதுகாப்பின்மை உணர்வுக்குள் தள்ளுகிறது. சுற்றி இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஏமாற்ற முயல்வதாக ஒரு கற்பிதத்தை ஏற்படுத்துகிறது. தனது நலன், தனது குறிக்கோள் என்ற ஒற்றைக் குறிக்கோளில் கவனம் செலுத்த மறைமுகமாக இந்நூல்கள் தூண்டுகின்றன.
ஒரு மனிதர் மேல் இன்னொரு மனிதர் நம்பிக்கை வைத்து அனுசரித்து வாழ்ந்த காலம் போய், அனைத்து மனிதர்களையும் சந்தேகப்பட்டு ஒரு மூடிய சமூகமாக நாம் வேகவேகமாக ஆகிவருகிறோம். அந்தச் செயல்முறையைத் தன்னம்பிக்கை நூல்களும், ஆளுமைத்திறன் பயிற்சிகளும் துரிதப்படுத்துகின்றன.
இன்று நடத்தப்படும் யோகா மற்றும் ஆளுமைத் திறன் வகுப்புகளில் முகங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அமைதியாகப் பதற்றமின்றி நேர்மறையாகப் பேச வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளர்கள் கூறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் கோபத்திற்கே இடமில்லை என்பது போல தோற்றம் அளிப்பார்கள். மேலாண்மைத் திறனையும், நிர்வாக ஆளுமைத்திறனையும் கடவுள் தன்மையாக அணுகுகின்றனர். ஒரு வாரப் பயிற்சியில் நீங்கள் யோகநிலையை அடைந்துவிடலாம். 15 நாள் பயிற்சியில் சிறந்த நிர்வாகி ஆகிவிடலாம்.
வாழ்க்கையை பாசிட்டிவ்வாக அணுகுவதற்கும், ஆளுமை மேம்பாட்டுக்குமான பயிற்சிகள் தேவையே இல்லையா என்று இதைப் படிப்பவர்களுக்கு கேள்வி வரலாம். நிச்சயம் தேவை. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற உப்புசப்பில்லாத ஆலோசனைகள் கொண்ட புத்தகங்களை விட்டு, சுயசரிதங்களைப் படியுங்கள். வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். நாடுகளின் வரலாற்றைப் படியுங்கள். என்னென்ன நெருக்கடிகள், எத்தனையோ வகையான இழப்புகளைச் சந்தித்தும் மனிதர்கள் மாமனிதர்களாக ஆவதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றி நடப்பதில் ஈடுபடுங்கள். உங்கள் வாழ்க்கை அந்தஸ்துக்குக் கீழ்நிலையில் வாழும் மனிதர்களின் சுக,துக்கங்களை பரிவுணர்வோடு பாருங்கள். நீங்கள் காரில் செல்பவராக இருந்தால், சைக்கிளில் செல்பவரின் பார்வையிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை எந்த முன்தீர்மானமும் இன்றிக் கற்பனையில் வாழ்ந்து பாருங்கள்.
வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதற்கு வாழ்க்கைக்குள் நீங்கள்தான் மூழ்க வேண்டும். நீச்சல் குளத்தில் குதிக்காமல் நூறு புத்தகங்கள் படித்தாலும் நீச்சல் கற்றுக்கொள்ளவே முடியாது.
நமது மனமும், நம்மைச் சுற்றியுள்ள வண்ணமயமான வாழ்க்கையும் எந்த நூலையும் விட, எந்த குளிர்சாதன அறை ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பையும் விட சக்திவாய்ந்தது.
நாம் செயல்படத் தொடங்கும்போதே மேம்படுகிறோம். நாம் ஒருவரையொருவர் பரஸ்பரம் நம்பத் தொடங்கும்போதே நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதம் செய்துகொள்கிறோம்.
கூட்டமாகச் செல்லும் பறவைகள்தாம் விரைவில் தனது இலக்கைச் சென்றடைகின்றன. தனிப்பறவைகள் அல்ல
.
தி ஹிந்துவில் படித்தது

Monday, 19 June 2017

கடிகாரத்தை வீட்டின் எந்த திசையை நோக்கி வைத்தால் வளம் அதிகரிக்கும்

கடிகாரத்தை வீட்டின் எந்த திசையை நோக்கி வைத்தால் வளம் அதிகரிக்கும்
********************************************
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு அதுக் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது
அனைவருக்குமே வீடு தான் சொர்க்கம். அந்த வீட்டை நாம் நமக்கு பிடித்தவாறு, பிடித்த பொருட்களால் அலங்கரிப்போம். அதே சமயம் அப்படி அலங்கரிக்கும் போது, அந்த பொருட்களை சரியான திசையை நோக்கி வைக்க வேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வேண்டுமானால், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை அலங்கரிக்க வேண்டும்.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
கடிகாரம் நம் அனைவரது வீட்டிலும் கடிகாரம் நிச்சயம் இருக்கும். சுவற்றில் தொங்க விடும் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால் தான், நேர்மறை ஆற்றல் வீட்டில் இருக்கும். அதையே தவறான திசையில் மாட்டினால், அதனால் எதிர்மறை விளைவுகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.
எந்த திசை சிறந்தது? * கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. * வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். * கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
கண்ணாடி வீட்டில் உள்ள பொதுவான பொருட்களுள் முகம் பார்க்கும் கண்ணாடியும் ஒன்று. இந்த கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைத்தால், அதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
எந்த திசை சிறந்தது? * வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. * குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்
7 குதிரைகள் கொண்ட ஓவியம் பலரும் தங்களது படுக்கை அறையை அலங்கரிக்க பல்வேறு ஓவியங்களை வாங்கி சுவற்றில் தொங்க விடுவார்கள். அதில் பெரும்பாலானோர் வாங்கும் ஓர் ஓவியம் தான் 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியம். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.
எந்த திசை சிறந்தது? * குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது. * அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது. * இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விட வேண்டும்.
மணி ப்ளாண்ட் இந்த கொடியை ஒருவர் வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். அதேப் போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது
ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள் பெரிய வீட்டில் இருப்பவர்கள், இதுப்போன்ற பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவும். அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும்.
எந்த திசை சிறந்தது? இந்த காட்சிப் பொருளை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும்
நன்றி:-மோகன் கிருஷ்ணசாமி@படித்ததில் பிடித்தது.

Monday, 5 June 2017

வளமுடன் வாழ

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.   

*இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள்*!!

ஓஷொவின் தியான முறைகள்

*🐾ஓஷோவின் உன்னத தியான முறை🐾*

*சுவாசத்தை கவனித்தல் எளிதானதாகவும்,* *எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும்*
*ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.*

*🐬இது உலகம் முழுவதும் பரவட்டும்🐬*

*இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன்,*
*இது மிகவும் எளிய முறை.*

*எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய*
எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ,
விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில் இந்த தியானத்தை செய் .
*காலம் – 2* நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.

*💥முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி.*

*சுவாசம் உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல்,*
*வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.*

*நீ சுவாசத்துடன்* *உள்ளே சென்று பின்*
*அதனுடன் வெளியே வருவது என்பது போன்று* செய்யும்
சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.

🌳நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது
அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும்.
இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும்.

*திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும்.*

☘நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும்,
பின் வெளி வரும்.

வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும் அந்த அற்புத அனுபவம் நடக்கும் .
தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.

சுவாசத்தை கவனித்தல்
தியான பயிற்சியை
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.

🌿 நீ இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம். சில சமயங்களில் வெறும் இரண்டு நிமிடங்கள் கூட செய்யலாம்.
சில நேரங்களில் படுக்கையில் படுத்திருப்பாய்.

ஆனால் தூக்கம் வராது. தூக்கத்தைப்பற்றி கவலைப்படாதே. அதைச் செய். இது இரண்டு வேலைகளையும் செய்யும்.

🍂🍂
இது ஆழ்ந்த அமைதியான தியானத்தைத் தரும், இதைச் செய்வதன் மூலம் தூக்கமும் வந்து விடும்.

ஆனால் நீ எழுந்திருக்கும் போதுதான் தூங்கி விட்டிருப்பதே உனக்குத் தெரியும்.
ஆனால் மிகவும் வேறுபட்ட விஷயம் என்னவென்றால் நீ தியானம் செய்தவாறே தூங்கி விட்டிருந்தால் நீ காலையில் எழும்போதும் தியான தன்மையோடு எழுவாய்.

அப்படி என்றால் ஆழ் மனதில் எங்கோ ஆழத்தில் நீ அறியாவண்ணம் இந்த முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது என்றுதானே அர்த்தம்

*உனது இரவு முழுவதும் தியானமாக மாறி விட்டிருக்கிறது.*

*இது உனக்கு கிடைக்கக் கூடிய மிக அதிக அளவு நேரமாகும்.*

*உனது தூக்கம் மிகவும் அமைதியானதாகவும்,*
*ஓய்வானதாகவும் புத்துணர்வு* *தரக்கூடியதாகவும் மிகவும் வேறுபட்ட குணத்தில் இருக்கும்.*

*ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை இந்த கவனித்தல் தொடர்கிறது.*

*காலையில் நீ விழித்தெழுந்த* *உடன் உனது சுவாசத்தை*
*கவனிப்பதை நீ தொடர்ந்து செய்ய ஆரம்பிப்பாய்.*

*அது உனக்கு வியப்பளிக்கும்.*


*📕📕📕📕ஓஷொவின் தியான முறைகள்*