Monday, 31 July 2017

வீட்டு பூஜை அறையில்

வீட்டு பூஜை அறையில் சின்னதா அம்மன் அல்லது முருகன் ஐம்பொன் சிலை வைத்து தினமும் அதற்கு பால் ஊற்றி கழுவி விட்டு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ,ஊதுபத்தி பற்ற வைத்து,நெய் தீபம் ஏற்றி வைக்கவும்.கந்த சஷ்டி கவசம் ,அம்மன் 108 போற்றி,காயத்ரி மந்திரங்கள் உச்சரிக்கவும். ஏதேனும் மலர்கள் ஒவ்வொரு மந்திரம் சொல்லும்போது அப்பூவை எடுத்து சிலை மீது போட்டு வணங்குங்கள்..உங்கள் வீடு அருள் கட்சாட்சத்துடன் விளங்கும்…இதன் பின்னால் நிறைய சூட்சுமம் இருக்கு…ஐம்பொன் சிலையில் ஐந்து விதமான உலோகங்கள் இருக்கு
தங்கம்,வெள்ளி,செம்பு,இரும்பு,வெண்கலம்..இவை அதிக காந்த ஆற்றல் ஈர்ப்பு சக்தி உடையது..நீங்க பால் அபிசேகம் செய்யும்போது அதன் நற்குணங்களை ஈர்த்துக்கொள்கிறது..இது சுக்ர அம்சம்…செம்பு செவ்வாய் அம்சம்…இரும்பு சனி அம்சம்…தங்கம் குரு அம்சம் வெள்ளி சுக்கிர அம்சம்.நீங்க மந்திரம் சொல்லி பூ போடும்போது பூவில் இருக்கும் நற்குணங்களையும் மந்திர சக்தியையும் சிலை ஈர்த்துக்கொள்கிறது..பிறகு அவை சிலை மூலம் வீடு முழுக்க ஒரே சீராக பரவுகிறது இப்போது உங்க வீடு அதிக மந்திர ஆற்றலை எதிரொலிக்கும் வீடாக மாறுகிறது..காற்று மாசில்லாமல் கிருமிகள் அழிக்கப்பட்டு ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காற்று நிரம்பிய இடமாக அந்த வீடு மாறுகிறது….
iam-pon-silai
ஒரு மந்திரத்தை எடுத்து படித்து பாருங்கள் அது சாமியை புகழ்வது என நினைச்சீங்க அப்ப்டீன்னா மாத்திக்குங்க…ஏன்னா..இதுக்கு மகரிஷி சொன்ன விசயத்தை உதாரணமா சொல்றேன்..வாழ்க வளமுடன் ஏன் நாம சொல்றோம்னா அது நீங்க உச்சரித்ததும் வான் காந்த ஆற்றலால் ஈர்க்கப்பட்டு, மீண்டும் உச்சரிச்ச இடத்துக்கே வந்து சேருது..ஆக உச்சரிச்ச நீங்க வளமுடன் வாழ்வீங்கன்னு சொன்னார்..இதில் தெரிகிறதா சூட்சுமம்..?பூஜை வழிபாடு எல்லாம் நீங்க நல்லாருக்கத்தான்…!!!
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?
மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.