Monday, 10 April 2017

சனிபகவான் பீடை விலக வழி :

துன்பங்கள் விலக.....
சனிபகவான் பீடை விலக வழி :"பத்மபுராணம் நூலில் இருந்து"
நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தல் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் வாயிலகாக் கேட்டறிய விரும்புகிறேன் .என்று கேட்டார் பரமேஸ்வரன் கூ றினார் .நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் .ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் .சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது .சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றனர் சனீஸ்வரன் .சூரியபகவானுடைய மகன் .கறுத்ததேகம்உடையவன்,அவனால் உண்டாகும் துன்பத்தைவென்றஅ
ரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்..
ரகு குலத்தில் பிறந்த தசரதன் என்ற அரசன் மிகவும் பிரபலமானவன் .மகா பராக்கிரமசாலியான ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன் ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும். அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள் .அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் .அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.
ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை .எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும் ,அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான் . சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்தையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர் ..
அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது .அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது .தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் .வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார்.தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .
சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் . தேவர்,அசுரர்,மன
ிதர்களில்லோ,சித்தர்,வித்யாதரர்
,கந்தர்வர்களிலோ,யட்சர்கள்,ராட்
சஸர்கள்,நாகர்களிலோ யாருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது .. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள் .ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிக
மான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்..
தசரதன் சனிபகவானைப் பார்த்து ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டாய வாரம் எதுவாயுனும் கேள் .உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்லா மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்றுகூறினார்...தசரதன் சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிரு
க்கிறேன் .அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன் என்று தசரதன் மீண்டும் கூறினார்....
சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனே ,என்னிடமிருந்து இந்த வாரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும
் ..மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும் .உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன் .வேறு என்ன வாரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான்..தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..
நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...
இதன் விளக்கம் :
கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன். மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் . புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.ய
ானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.ஏ சனிபகவானே,தேவர்,அசுரர்,மனிதர்,
ஆயினும், சித்தர்,வித்யாதரர்,உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
மஹா பகவானும் ,பயங்கரமனவனும்,
கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த
வனாக , "ஏ ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்க
ிறது .உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மன
ிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,
ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .
அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் .ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,
ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன் .கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்..
தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.அன
்றுமுதல் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு நரக வேதை அடையாமல் மொட்சலோகத்தை அடைவர்கள்.இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது...சனிபகவானே போற்றி போற்றி போற்றி .....
நன்றி

காங்கேயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி

காங்கேயம் சிவன்மலை சுப்ரமணிய சுவாமி
திருக்கோயில் !!! திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும் !!!!

மூலவர் : சுப்ரமணிய சுவாமி
உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : தொரட்டி மரம் (ஆண், பெண் மரங்கள் பிணைந்த நிலையிலுள்ளது)
தீர்த்தம் : காசி தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : பட்டாலியூர்

தல சிறப்பு: சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.

கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில், குன்றின் மேல் அமைந்துள்ள கோயில். 10,12ம் நுõற்றாண்டிலேயே கோயில் குறித்த செய்திகள் உள்ளன. 496 படிகள் ஏறிச்சென்றால், ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என்ற அமைப்பில் உள்ள முழுவதும் கற்களால் கட்டப்பட்ட, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாகும். மலையில் ஏறி, ராஜ கோபுர மண்டபம், தீபஸ்தம்பத்திற்கு செல்வதற்கு முன்பு, அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர்,  ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர்,  தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும், தண்டபாணி சன்னதி,கொடிமரம், பலி பீடம், சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள், மலையை சுற்றிலும், அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காளபரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனுõரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் எழுந்தருளியுள்ளனர். மலையேறும் 18ம் படிக்கு, சத்தியபடி என்ற பெயர் உள்ளது.  முற்காலத்தில் வழக்குகள் இப்படியில் நடந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. புராணப்படி எனவும் அழைக்கப்படுகிறது. சடைச்சியம்மன் இங்கு குடியிருப்பதாக நம்பிக்கை உள்ளது. அர்த்த மேரு அமைக்கப்பட்டு, அதன் வள்ளியம்மன் திருவடிகள் உள்ளன. மலை படிகளில் ஏறுவதே ஒரு தவமாக கருதப்படுகிறது. காரண மூர்த்தியான சுப்ரமணியர் சன்னதியில் காரண ஆகம விதப்படி நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு, சனி பகவான் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்; மீதமுள்ள எட்டு கிரகங்களும் சூரியனை பார்த்து அமைந்துள்ளன.கோள்கள் வரிசைப்படியாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,  சனி, குரு, சுக்கிரன் என்ற அடிப்படையில் உள்ளன. முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு, சுக்கிரன், கேது வரிசையாக காட்சியளிக்கின்றன. அதே போல், சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அமர்ந்திருப்பது, இப்பகுதியிலுள்ள பழமையான கோயில்களில் பார்க்க முடியாத அருமையான விசேஷமாகும்.இங்கு, நவக்கிரகங்களை வழிபடுவது, ஒவ்வொரு நவக்கிரக கோயில்களுக்கும் தனித்தனியாக சென்று வழிபடுவதன் பலன் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.

பிரார்த்தனை : வேண்டியவருக்கு வேண்டியதை வழங்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குவதால் பக்தர்கள் அதிகமானோர் வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்துனை பிரச்சனைகள்  இருந்தாலும், விடுபடலாம் என்ற ஐதீகம் உள்ளது. சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.

நேர்த்திக்கடன்: இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.

தலபெருமை: அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை  செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன் அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும்  விநாயகருக்கு  முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்கின்றனர்.கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும்,  வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும்,  வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளது.அனைத்து நோய்களும், பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும், சித்தர்கள்  பலர் தவமிருந்த மலை; இன்றும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி : சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே  ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.

தல வரலாறு: கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்லை. அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேயநாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள்  காணப்படுகிறது.

சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நுõற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நுõலை இயற்சிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர்  அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணி கலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள்  தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர  சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேகய நாட்டில் விழுந்தது  சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம்  ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ  சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, 6 April 2017

நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை

Image may contain: one or more people and closeup
நிம்மதியான நித்திரைக்கு நீர் முத்திரை <
<நமது உடல், 70 சதவிகிதம் நீரினால் நிறைந்துள்ளது.
ரத்தம், உமிழ்நீர், செல்களின் உட்பகுதி, செரிமான அமிலங்கள், மூட்டுக்களின் இடையில் உள்ள திரவம், விந்து, தோலின் ஈரப்பசை, கண்களில் உள்ள திரவம், ஏன் எலும்பில்கூட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக நீர் மூலக்கூறுகள் உள்ளன.
உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் அதிகமானாலும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
உடலில் உள்ள நீர்ச்சத்தை சமஅளவில் வைத்திருக்க உதவுவதுதான் நீர் முத்திரை.
இந்த முத்திரையைச் செய்துவந்தால், நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகக் குளிர்ச்சியால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்தும் எளிதில் தப்பிக்க முடியும்.
எப்படிச் செய்வது....???
கட்டைவிரலின் நுனியும், சுண்டுவிரலின் நுனியும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டியிருக்க வேண்டும்.
நீர், நெருப்பு என்ற இரண்டு பஞ்சபூதங்களை சமன்செய்வதற்காக செய்யப்படும் முத்திரை இது.
கட்டளைகள் :-
தரையில் அமர்ந்தோ, நாற்காலியில் கால்கள் தரையில் படும்படி அமர்ந்தோ, இந்த முத்திரையைச் செய்யலாம்.
அமரும்போது முதுகுத்தண்டு, கழுத்து நேராக நிமிர்த்தி வைத்து, 5 முதல் 20 நிமிடங ரை செய்யலாம்.
காலை, மாலை இருவேளைகளும் குளிக்கும் முன்பு செய்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மழைக் காலம், குளிர் காலங்களிலும், குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களும் இந்த முத்திரையை ஐந்து நிமிடங்கள் செய்தாலே போதும்.
ஆஸ்துமா நோயாளிகள், அதிகமாக சளித் தொந்தரவு இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
முத்திரையைச் செய்த பிறகு, அதிகமாக சளி பிடிக்கத் தொடங்கினால், நீர் முத்திரை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
பலன்கள் :-
உடல் வெப்பம், எரிச்சல், சரும வறட்சி, சுவாசிக்கையில் வரும் உஷ்ண மூச்சுக் காற்று சரியாகும்.
இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் வெயில் காலத்தில் குறைந்தது அரை மணி நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.
அதிகமாக டி.வி பார்க்கும் குழந்தைகள், வெயிலில் விளையாடும் குழந்தைகள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இந்த முத்திரையைக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் செய்வது நல்லது.
கண் வறட்சி, கண் எரிச்சல், கண் சிவந்துபோதல், கண் சோர்வு போன்றவை குணமாகும்.
உடலில் நீர்த்தன்மை குறைவதால், கண்களைச் சுற்றி கருவளையம் வருகிறது.
இந்த முத்திரையை இரண்டு வாரங்கள் செய்துவர, கருவளையம் மறையும்.
சரும வறட்சி சரியாகி, சருமம் பளபளக்கும்.
பருத் தொல்லை நீங்கும்.
சரும நோய்கள் சரியாகும்.
வயதானவர்களுக்கு ஏற்பட்ட தோல் சுருக்கங்கள் குறைந்து, சருமத்தில் ஈரப்பதம் காக்கப்படும்.
வறட்சியான கூந்தல், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் தலை சூடு, முடி கொட்டுதல் பிரச்னை சரியாகும்.
எவ்வளவு நீர் அருந்தினாலும் தீராத தாகம், சர்க்கரை நோயால் ஏற்படும் அதிகத் தாகம் (Polydypsia) பிரச்னை சரியாகும்.
நீர்க்கடுப்பு, சிறுநீரகக் கல்லடைப்பு, தொடர் தும்மல், கெண்டைக்கால் பிடிப்பு போன்றவை சரியாகும்.
வெள்ளைப்படுதல் பிரச்னை, மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வலி மட்டுப்படும்.
வயோதிகத்தில் மூளையில் நீர்த்தன்மை குறைவதால் ஏற்படும் ஞாபகமறதிப் பிரச்னை குறையும்.
மனம் அமைதியாகி, ஆழ்ந்த தூக்கம் வரும்

Image may contain: one or more people and closeup

Monday, 3 April 2017

எட்டு திசைகளின் சிறப்புகள

எட்டு திசைகளின் சிறப்புகள்..!

வடக்கு :

➢ வடக்கு திசை தாய்மை பகுதி ஆகும். பொருள் வரவுக்கு உரியது. இத்திசை முறையாக அமைந்தால், பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். பொருளாதாரம், அதிகாரம் சிறக்கும். இத்திசையில் ஏதேனும் குறையிருந்தால் பெண்களின் வாழ்வு பாதிப்படையும். பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

கிழக்கு :

➢ கிழக்கு திசை தந்தைக்கு உரிய திசையாகும். அறிவு ஆற்றல் போக போக்கியங்களுக்கு உரியது. இது முறைப்படி அமைந்தால் ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பர். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

வடகிழக்கு :

➢ செல்வ வளம், பொருள் வரவு, சந்ததி வளர்ச்சிக்கு உரியது. குறிப்பாக ஆண் குழந்தைகள் வளர்ச்சிக்கு உரியதாகும். இத்திசை முறையாக அமைந்தால், பொருள் வரவு மிகுந்து, செல்வ வளம் பெருகும். குழந்தைகள் தொழில் துறையில், பதவிகளில் உயர்வு அடைவர். இத்திசையில் குறையிருந்தால் வரவு குறைந்து வறுமை உண்டாகும்.

மேற்கு :

➢ மேற்கு திசை ஆண்மைப் பகுதியாகும். இத்திசை முறையாக அமைந்தால் புகழ் அடைவர். செல்வாக்கு உயரும். வாழ்க்கை மேம்படும். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

வடமேற்கு :

➢ இத்திசை சபலம், சலனங்களுக்கு உரிய திசையாகும். இத்திசை முறையாக அமைந்தால் பலரோடு நட்பையும், தொழில் வியாபார மேம்பாட்டையும், அரசியல் செல்வாக்கையும், பொருள் வரவையும் உண்டாக்கும். இத்திசையில் குறையிருந்தால் பகை, மனஸ்தாபம், நோய் போன்ற விளைவுகள் உண்டாகும்.

தெற்கு :

➢ தெற்கு திசை தாய்மைப் பகுதிக்குரிய திசையாகும். சுகம், அமைதி, செல்வம், நீதி நேர்மைக்கு உரிய திசையாகும். இத்திசை முறையாக அமைந்தால் பெண்கள் நலம் பெறுவர். செல்வம் அதிகமாகும். நோயற்ற இன்பமான வாழ்வு அமையும். இத்திசையில் குறையிருந்தால் எதிர் விளைவுகள் உண்டாகும்.

தென்மேற்கு :

➢ இத்திசை ஒழுக்கம், உடல்நலம், செல்வச் செழிப்புக்கு உரிய திசையாகும். இத்திசையில் குறையிருந்தால் நோய்கள், வறுமை, மனகஷ்டம் உண்டாகும்.

தென்கிழக்கு :

➢ இத்திசை முறையாக அமைந்தால் பெண்கள் நலம் பெறுவர். பணவரவு மேம்படும். இத்திசையில் குறையிருந்தால் தொல்லைகள், செலவு, வீண்பிரச்சனை, வறுமை உண்டாகும்.

எட்டு திசைகளின் சிறப்பறிந்து எல்லா செல்வங்களையும் பெறுவோம்!...