Thursday, 2 June 2016

செங்கல்பட்டில் திருப்பதி.

செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம் ஆனால் உண்மை.

இனிமேல் யாரும் திருப்பதி செல்ல முடியவில்லையே! பெருமாளை ஒரு 10 நிமிடம் தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.

நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப்பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர் (சிவன்) ஆலயம் வரும். இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடது புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...

உலகிலேயே மிக உயரமான 51 அடி அற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.

கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீ நிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைறவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக் காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

சிவனடியார்களே, சிவபக்தர்களே, தயவு செய்து இந்தக் கோயிலைப் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் சொல்லி நீங்களும் சிவத்தொந்தில் பங்கேற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பதிவை அதிகம் பகிரவும்.

வசதியுள்ளவர்கள் கார், பைக், வேன் போன்ற வாகனங்களில் வருகிறார்கள். வசதியில்லாதவர்கள் நடந்துதான் வரவேண்டும். இது ஒரு குக்கிராமம் என்பதால் ஆட்டோவோ, ஷேர் ஆட்டோவோ இல்லை.  ஆள் அரவவமற்ற பகுதி என்பதால் காலையில் சென்று மதியமோ அல்லது மாலை இருட்டுவதற்குள் திரும்பி வந்துவிடுவதுபோல் உங்கள் பிரயாணம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

புத்தராக இரு

<3 உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று <3

புத்தராக இரு

புத்தராக இருப்பது என்பது விழித்திருப்பது.

தன்னைத் தவிர்த்த இன்னொன்றைத் தெரிந்து கொள்வதுதான் அறிவு

ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு

தெரிந்து கொள்கிறவனைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஞானம்

விவேகம், தெரிந்து கொள்பவனும் தெரிந்து கொள்ளப் படுவதும் இல்லாமல் போவதுதான் புத்த நிலை

தியானம் ஒரு ரச வாதம் கவனித்துப் பார்க்கும் போது இரும்பைத் தங்கமாக்கி விடும்

சாதாரணத்தில் அசாதாரணத்தைக் காண்பதுதான் புத்தருடைய பாதை

இந்தக் கணத்தில் இங்கிருப்பதில் முழுமையைக் காண்பது
இதைத்தான் புத்தர்

" தத்ஹதா " என்கிறார்

மனம் எதற்கெடுத்தாலும் வடிவம் கற்பித்துக் கொண்டே இருக்கும்

கடவுள் வடிவத்தோடு கூடியதொரு பொருளல்ல

" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு

எங்கே ஆசைகள் இருக்கிறதோ அங்கே மௌனித்து விடு "

மனம் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது

மனம் உன்னை திருப்தியாக இருப்பதற்கு விடவே விடாது

புத்தர் கூறுகிறார்
" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு"

இப்போது என்ன இருக்கிறதோ அது உன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது

இப்போது இருப்பவை எல்லாம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது

அந்த அழகை அனுபவி

இயற்கை இப்போது இருக்கிறது என்பதில் வெகு அழகு இருக்கிறது

ஆசையை கவனமாக வேடிக்கை பார்க்கும்போது ஆசை மெதுவாக விலகி விடுகிறது

" மகிழ்ச்சியோ துயரமோ எது நடந்தாலும் பாதிப்பில்லாதவனாக
பற்றில்லாதவனாக போய்க் கொண்டிரு"

மகிழ்ச்சியையும் துயரத்தையும் உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே

அதை மிகவும் ஆழமாக வேடிக்கை பார்

இதைத்தான் புத்தர்
" விபாசனா" என்கிறார்

ஆழ்ந்து பார்ப்பது அகக் கண் கொண்டு பார்ப்பது

புத்தர் அவரது உடலை வேடிக்கைப் பார்க்கிறார்

அவருக்கு உடல் வலியில்லை

தான் தனது உடல் அல்ல என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது

உடல் இறக்கும் போது கூட புத்தர் அதை வேடிக்கை பார்க்கிறார்

அந்த அளவுக்கு வேடிக்கை பார்க்க முடியும் என்றால்.....

ஒருவர் இறப்பைத் தாண்டியவராகிப் போகிறார்

இறப்பிலிருந்து உன்னை காப்பாற்றுவதல்ல புத்தருடைய நோக்கம்

இறப்பைத் தாண்டி உன்னைக் கொண்டு போவதுதான் அவருடைய நோக்கம்

மனிதனுடைய முழு முயற்சியும் மரணத்தால் அழிக்க முடியாதது

எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்
மரணமில்லாதது

எதுவோ அதைத் தன் மையமாக கொண்டிருப்பதுதான்

பிறப்பு ஏற்கனவே நடந்து விட்டது

அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது

ஆனால் மரணம் நடக்க வேண்டி இருக்கிறது

அதைப்பற்றி ஏதாவது செய்யமுடியும்

உணர்வோடு இறக்க முடியும் என்றால்.....மீண்டும் உணர்வோடு பிறக்கலாம்

கணத்துக்கு கணம்
விழித்திருப்பதுதான் புத்தரின் நெறி

அப்போது உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதைக் காண்பாய்

அதை அழித்து விட முடியாது

--- ஓஷோ ---

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்பட

துன்பத்தை மகிழ்ச்சியாக அனுபவிப்பது எப்படி?

முதலில் நீங்கள் துன்பத்திலிருந்து தப்பிச்செல்ல எண்ணாமல்,

அது உங்களிடம் இருப்பதற்கு அனுமதித்தால்,
அதை சந்திக்கத் தயாராக இருந்தால்,

அதை எப்படியாவது மறந்து விட வேண்டும் என்று முயற்சி செய்யாமல் இருந்தால்

அப்போது நீங்கள் மாறுபட்டவர் ஆகிறீர்கள்.
துன்பம் இருக்கும்.

ஆனால் அது உங்கள் வெளியே இருக்கும்.
அது உங்கள் துன்பமாயிராது.

யாருக்கோ நடப்பது போலத் தோன்றும்.
ஒரு மெல்லிய இன்பம் உங்களுக்குள் பரவ ஆரம்பிக்கும்.
ஏனெனில் நீங்கள் உண்மையில் இன்பமயமானவர்கள்.
துன்பத்தை நடு நிலையுடன் பாருங்கள்.

என்ன துன்பம்,அது ஏன் வந்தது என்று உணர்ச்சி
வசப்படாமல் பாருங்கள்.

அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதீர்கள்
.மனமானது,''துன்பத்தைப் பாராதே,தப்பி ஓடிவிடு
''என்றுதான் கூறும்.

ஆனால் தப்பி ஓடி விட்டால் ஒருபோதும் மகிழ்வுடன் இருக்க முடியாது.

--- ஓஷோ ---

பயம்

பயம் - ஓஷோ கதைகள்

(Osho Stories on Fear)

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.

குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்" என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

ஒரு நிமிடம் பயமின்றி நிதானமாக யோசித்தால் உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

திருப்பதி

உலகம் பலவாய் நிற்கிறது.
மூலம் ஒன்றாய் திகழ்கிறது

பலவாய் நிற்கும் உலகையே கண்டு உய்க்கும் நமக்கு அதன் தொப்புள் கொடி கண்ணில் படுவதே இல்லை. தொப்புள் கொடி கண்டுணர்ந்த ஆனந்த நிலையர்க்கு, ஒன்று ஏன் இப்படிப் பலவாகி பாடாய் படுத்துகிறது என்பது புரிவதில்லை.

திருப்பதி  சிறப்புடன், இத்தனை பீடுடன், உலகின் மிகப்பிரம்மாண்டமான திருக்கோயிலாக நிற்கிறது? "பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும், அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான், செங்கோலுடையன்!" என்று ஆண்டாள் சொல்கின்றபடி ஈதென்ன அரசாட்சி?

கவனித்துப்பார்த்தால் இந்தியாவின் பிரம்மாண்டமான வழிபடும் தலங்கள் மாலவனுடையனவாகவே உள்ளன. வடக்கே தூவரகை, ஹரித்துவார், நடுவே பாண்டுரங்கன், வடவேங்கடம், தெற்கே திருவரங்கம், மேற்கே குருவாயூரப்பன், பத்மநாபன். "ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம்?" என்று நம்மாழ்வார் மகிழ்வதில் பொருள் உள்ளது.

ஆயினும் வடவேங்கடம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. இந்தப் பெருமை வடவேங்கடத்திற்கு இன்று நேற்று வந்தது போல் தெரியவில்லை. இல்லையெனில் கம்பமத யானை மீது கம்பீரமாய் கொலுவிருக்கும் குலசேகர மன்னன், தன்னை ஒரு படிக்கல்லாக்கி வடவேங்கடவன் பவளவாய் காணும் நோக்கு வேண்டுமென்று சொல்வானா? அதற்கு அவன் சொல்லும் காரணங்கள் சுவாரசியமாயுள்ளன.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

வல்வினைகள் மண்டிக்கிடக்கின்றன. அதைத்தீர்க்கும் திறன் ஒருவனுக்கே உள்ளது. அவன் நெடியோன். திருமகளை மால் செய்பவன். வேங்கடவன். எனவே இவன் கோயில் வாசலிலே அடியவர்கள் தினமும் கூடுகின்றனர் (நாளுக்கு 40,000 பேராம். விசேஷ காலங்களில் லட்சம் பேராம்!). வானவர்களும் தேவலோகம் விட்டு இங்கு வருகின்றார்களாம் (நமக்கென்ன தெரியும். ஆழ்வார் சொல்கிறார். நாம் நம்புகிறோம் ;-) அரம்பயர் எனும் கூட்டமும் கிடந்து இயங்குகிறார்களாம். இவர்கள் சும்மா வந்து போகவில்லை. இவர்களின் இயக்கம் இக்கோயிலை அப்படி வைத்திருக்கிறது என்கிறார் ஆழ்வார். அடியார் இல்லாமல் ஆள்வானில்லை. ஆள்வானில்லாமல் அடியார் இல்லை. இந்த இங் யாங் இயக்கமே இக்கோயிலை இத்தனை சிறப்புடன் வைத்திருப்பதாக ஆழ்வார் சொல்கிறார். ஒருவகையில் டோமினோ இயக்கம்தான். இதை முதலில் ஆரம்பித்து வைப்பவன் வேங்கடவனாக உள்ளான்.

செடியாய வல்வினைகள் கொண்ட இப்பிறப்புச் சுழற்சியை எளிதே அறுத்து வருகின்ற அடியார்க்கு விண்ணகம் தந்துவிடுகிறானாம் வேங்கடவன். எல்லோரும் திருப்பதிப் பெருமாள் இகசுகம் தருகிறார் என்று நம்பிப் போய்கொண்டு இருக்கிறார்கள்! அங்கு போனவர்க்கு இனிப்பிறப்பில்லை எனும் ரகசியம் அறிந்தால் போவாரோ என்று தெரியவில்லை ;-)

வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா
மொழிநின்ற மூர்த்தியரே யாவர், - பழுதொன்றும்
வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த
சீரான் திருவேங்கடம்

உலகில் கடைசி ஜீவன் உய்யும்வரையில் நிற்பேன் என்று வடவேங்கடம் வந்துவிட்டானாம். முதலில் வராகனாக வந்து பூமியை இடந்து எடுத்தான். பின் கோவர்த்தனகிரியை கையில் எடுத்து கோப, கோபியரைக் காத்தான், கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்றான், திருப்பாற்கடலில் கிடந்தான். ஆனால் நிற்பதற்கென்றே வேங்கடம் வந்துவிட்டானாம். இது பெரிய காரியம்தான் என்று ஆழ்வார் வியக்கிறார்.

இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது

எவ்வளவுதான் ஜரிகண்டி, ஜரிகண்டி செய்தாலும் கிடைக்கின்ற சில நொடியில் செடியாய வல்வினைகள் தீர்த்து,, பழுதொன்றும் வாராத வண்ணம் விண்கொடுக்கும் படியளந்த பெருமாள் வடவேங்கடவனாம்.

இப்படிச் சொல்லும் போது நமது டோமினோ எபெக்ட் தியரி உடைந்துவிடுகிறது. வெறும் புற்றீசல் போல் மூடநம்பிக்கையில் மனிதர்கள் அங்கு கூடவில்லை. அங்கு போனால் அமரஜீவிதம் கிடைக்கிறது. கருங்குழிக்குள் போன உயிர் மீள்வதில்லை போல் வேங்கடத்துக் கருங்குழிக்குள் போன ஜீவன் திரும்புவதில்லை. இதுதான் Singularity. ஜீவனின் கடைசிப் பயணம். ஆனால், மனிதன் இதையறிந்து போகவில்லை. போகமாட்டான். ஆனால் இரும்புத்துகள் காந்தத்தை நோக்கி விரும்பிப் பயணிப்பதில்லை. காந்தம் வந்துவிட்டால் அது தானாகவே ஈர்க்கப்படுகிறது. புயல் கருக்கொண்டவுடன் மேகம் தானாகவே சுழற்சியில் பங்கு கொள்கிறது. இதுதான் ஜீவனின் நிலையும்! காந்தம் அங்குள்ளது. இனிப்பு அங்குள்ளது. ஈர்க்கப்படுகிறோம் நாம். அதுதான் உண்மை.

மனதைத் தொட்ட வரிகள்*

*மனதைத் தொட்ட வரிகள்*

1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!

2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!

3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!

4.அதிர்ஷ்டத்திற்காக  காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.

5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!

6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!

7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!

8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !

9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !

10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.

11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !

15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !

16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !

17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !

Wednesday, 1 June 2016