Sunday, 17 January 2016

எண்ணம்

நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.
எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.
ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!
அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.
போச்சு! எல்லாம் போச்சு!
அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!
ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.
நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?
நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?
"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.
ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.
என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.
"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"
வாழ்வின் நிறமே மாறிவிடும்!
மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?
வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.
கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.
நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

Tuesday, 12 January 2016

ஒதுக்கப்படவேண்டிய 12 நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களில் 12 மிகவும் ஒதுக்கப்பட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக்கிய குறிப்பாகும்.
பரணி,கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,பூரம்,பூராடம்,பூரட்டாதி,கேட்டை,விசாகம்,சித்திரை,மகம் ஆகியவை ஆகும்.
இந்த நட்சத்திரங்களில் வெளியூர் பயணமோ ,கொடுக்கல் வாங்கலோ கூடாது. வெளியூர் தூரப்பயணம் சென்றவர் திரும்பி வருவது மிகவும் கடினம் ஆகும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் ஆரோக்கியம் உண்டாவதும் கடினம்.
ஒருவருடைய ஜென்ம நட்சத்திரமும் 3,5,7,10,14,19,22,27 ஆகிய நட்சத்திரங்களும் சுப காரியங்களுக்கு முகூர்த்தம் போன்ற முக்கிய காரியங்களுக்கு தவிர்க்க வேண்டும்..கெடு பலன்களை இவை தரும்.

அஸ்வத்தாமா உயிருடன் இருக்கிறாரா?

இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்பப்படும், மகாபாரதத்தில் வரும் ஒரு இறப்பில்லாத புராண கதாநாயகன் பற்றி நீங்கள் அறிவீர்களா? கேட்க அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது தானே? ஆனால் மிகப்பெரிய இந்திய புராணமான மகாபாரதத்தில் இவ்வகையான மர்மம் கலந்த கதைகளும் நிகழ்வுகளும் ஏராளம். இந்த புராணத்தில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஒரு மர்மம் இணைந்திருக்கும். அதனால் தான் என்னவோ உலகத்திலேயே மிக நீளமான புராணமாகவும், சுவாரஸ்யமான புராணமாகவும் இது விளங்குகிறது.
பல பேருக்கு மகாபாரதம் என்பது மிகவும் குழப்பமான கதையாக விளங்கும். அதற்கு காரணம் மகாபாரதத்தில் அத்தனை கதாபாத்திரங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவரோடு ஒருவர் சம்பந்தமுடையவராக இருப்பார். இந்த புராணத்தில் பாண்டவர்கள், திரௌபதி, கௌரவர்கள் என புகழ்பெற்ற சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்கள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இந்த புராணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் அஸ்வத்தாமா.
மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரம் உயிருடன் இருப்பதாகவும், ஆண்டாண்டு காலமாக பூமியில் வலம் வருவதாகவும் நம்பப்படுகிறது. இறப்பற்ற இந்த நாயகனை உயிருடன் கண்டுள்ளதாகவும் பலர் கூறுகின்றனர். இந்த வதந்திகள் உண்மையோ பொய்யோ, ஆனால் அஸ்வத்தாமா பற்றிய கதையை படிப்பது கண்டிப்பாக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். அதனால் மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா என்ற இறப்பற்ற நாயகன் பற்றிய கதையை படியுங்கள்.
அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வனாவார். துரோணாச்சாரியார் மற்றும் அவருடைய மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா. அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே மூலாதாராமாக அமைந்தது. வில்வித்தை மற்றும் இதர போர் கலைகளில் சிறப்பாக செயலாற்றி ஒரு மிகச்சிறந்த போர் வீரராக அவர் வளர்ந்தார்.
மகாபாரத போரின் போது, கௌரவர்களின் முகாமில் இருந்து, அவருடைய தந்தையுடன் சேர்ந்து அஸ்வத்தாமா போரில் சண்டையிட்டார். தன் மகனை உயிராக நினைத்தார் துரோணாச்சாரியார். அதனால் போரின் போது அஸ்வத்தாமா இறந்து விட்டார் என்ற வதந்தியை கேள்விப்பட்ட துரோணாச்சாரியார், தன் கைகளை துறந்து தியானத்தில் ஈடுபட்டார். அப்போது திரிஷ்டட்யூம்னரால் அவர் கொல்லப்பட்டார்.
இதற்கு பழி வாங்க நினைத்த அஸ்வத்தாமா, மகாபாரத போரின் கடைசி இரவின் போது, பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றார். தன் தவறை உணர்ந்த அவர், பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி வைப்பது என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின் கருவில் இருந்த அபிமன்யுவின் பிறக்காத குழந்தையை கொல்ல அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.
அஸ்வத்தாமாவின் இந்த குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர், தன் பாவத்தை சுமக்கும் விதமாக, அஸ்வத்தாமா முடிவற்ற காலம் வரை இந்த பூமியை வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார். எப்போதுமே அவர் யாருடைய அன்பையும் பெற முடியாது. அதே போல் யாராலும் அவர் வரவேற்கப்பட மாட்டார். தன் நெற்றியில் உள்ள இரத்தினக்கல்லை திருப்பி கொடுக்கும் படியும் கிருஷ்ணர் கூறினார். அதனால் தன் நெற்றியில் ஏற்பட போகும் புண் என்றும் ஆறாது என்றும் சாபமளித்தார். அதனால் தான் மோட்சத்தை தேடி இன்னமும் அஸ்வத்தாமா இந்த உலகத்தில் சுற்றி திரிகிறார்.
அஸ்வத்தாமாவை கண்டிருப்பதாக பலர் கூறுகின்றனர். நெற்றியில் ஆறாத புண்ணை கொண்ட ஒரு நோயாளி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவரிடம் வந்துள்ளார். தன் புண்ணுக்கு பல விதமான மருந்துகளை தடவியும் கூட அவருடைய புண் ஆறவில்லை. இந்த புண் பல காலமாக இருப்பதாகவும் அது ஆற முடியாத வகையாக உள்ளதாகவும் அந்த மருத்துவர் வியப்புடன் கூறினார். இது அஸ்வத்தாமாக்கு உள்ள புண்ணை போல் உள்ளதே என கூறி சிரித்த மருத்துவர், தன் பெட்டியை எடுத்துள்ளார். எடுத்து விட்டு திரும்பிய போது அந்த நோயாளியை காணவில்லை.
சிவலிங்கத்திற்கு இன்னமும் அஸ்வத்தாமா வந்து மலர்களால் பூஜை புரிகிறார் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இமயமலை அடிவாரத்தில் சில பழங்குடியினருடன் அஸ்வத்தாமா நடந்தும் வாழ்ந்தும் வருவதை சிலர் கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்!!!!

Sunday, 10 January 2016

மூட நம்பிக்கை

குட்டிக்கதை:
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.
Moral : மூட நம்பிக்கைகள் நம்மை மூடன் ஆக்கிவிடும்.மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ்பவன் எவனோ அவனே வாழ்க்கையை வெல்வான்.
படித்ததில் பிடித்தது.

Friday, 8 January 2016

"ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலையும்-ஜாங்கிரி மாலையும்"

ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார்.
அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹாபெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் ,ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….”
பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்: “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?”
பதிலுக்காக மஹாபெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். “பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும
சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி ? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா ? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்
. இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிர
ுந்தவர்கள் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெலலாம் ஏற்றுமதி ஆகிறது. தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே — அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்கு saarthi வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹாபெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின்திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும்பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்

Friday, 1 January 2016

ஈரல் நோய் குணமாகும்.

நான்கு நாட்களில் உங்கள் ஈரலிலிருந்து நச்சுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தலாம் !!! ரஷ்யாவின் பாரம்பர்ய மருத்துவம்.!
பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்த
ை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்
கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்ற
ன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதைக் கீழே காண்போம்!!
வாய் துர்நாற்றம்:
கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்
கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்
வெளுத்த சருமம்:
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்
அடர்ந்த சிவந்த மற்றும் மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்:
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்:
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு:
கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது
. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள
்ளது என்று அர்த்தம்.
இப்பொழுது ஈரலை எவ்வாறு சுத்தம் செய்வது என பார்ப்போம்.
உலர்ந்த முந்திரி எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.
காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவ்வும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.
ஈரல் பாதிப்பு நீங்க மற்றொரு எளிய மருந்து:
ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.