Thursday, 16 November 2017

விழிப்புணர்வு

ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,

ஆனால் அதற்கு ஒரே ஒரு பதில்தான்

உனது விழிப்புணர்வு

வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல

மனித மனங்களை தவிர

வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்

வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே

நீ நீதான்.

உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை

வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக வாழ்வது எப்படி என்று உனக்கு தெரிந்துவிட்டால்

இந்த வாழ்வின் முழு இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்

வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல, அர்த்தமற்றதுமல்ல

வாழ்க்கை ஒரு வாய்ப்புதான்,

ஒரு வாசல்தான்

கொடுப்பவனாக இரு

உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்

அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும்

வாழ்வு அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும்,

பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது

இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டு விடமுடியும்

ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்

தேடுதல் அழிவற்றதை நோக்கியதாக இருக்கவேண்டும்

மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது

ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்

அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல

எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை ஏற்றுக் கொள்வதே தைரியம்

பயம் அங்கிருக்கும்,

ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை ஏற்றுக்கொண்டால்

மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்

உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக பார்

நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்

நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது ஒரு விஷயமே அல்ல

நீ மலர்கிறாயா என்பதுதான் பிரச்சனை

இறந்த காலமும் கிடையாது,

எதிர்காலமும் கிடையாது

இந்த கணம் மட்டுமே உள்ளது

நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்

ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது

உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதை கவனி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.