Thursday, 2 November 2017

ஓஷோ ஞானக் கதைகள்


ஒரு ஜென் சாதுவிடம், ஒருவன்,

"உங்கள் சாதனை எத்தகையது..???" என்று கேட்டான்.

அவர்,

"பசியெடுக்கும்போது நான் உணவளிக்கிறேன்,

உறக்கம் வரும்போது படுக்கையை விரித்துக் கொடுக்கிறேன்." என்றார்.

அந்த மனிதன், "யாருக்கு..???" என்று கேட்டான்.

ஜென் சாது, " யாருக்கு உறக்கும் வருகிறதோ, அவனுக்கு,

யாருக்குப் பசிக்கிறதோ, அவனுக்கு
என்று பதிலளித்தார்.

அந்த மனிதன்,"நீங்கள், இந்தக் குடிசை வீட்டில் தனியாக இருப்பதாக தெரிகிறது, வேறு யாரும் இல்லை.

நீங்கள் கூறுவது புரியவில்லையே" என்றான்.

சாது, "நான் அஞ்ஞானியாக இருந்தபோது,

எனக்கும், இந்தக் குடிசையில் ஒன்று தான் தெரிந்தது

இப்பொழுது எனக்கு இரண்டு  காட்சியளிக்கிறது.

ஒன்று நான், அறிந்து கொள்பவன்.

மற்றொன்று அது. செயல் புரிவது

எதற்குப் பசிக்கிறதோ அது நான் அல்ல.

யாருக்கு உறக்கம் வருகிறதோ, அது நான்அல்ல.

களைத்துப் போவது, அது நான் அல்ல.

பார்ப்பவன், கேட்பவன், அது நனல்ல.

இப்பொழுது இந்த அறையில், களைத்துப் போகும் ஒருவன் இருக்கிறான்,

ஒருபொழுதும் களைப்படையாத ஒருவனும் இருக்கிறான்

துக்கமும், சுகமும் அடைவதும் ஒருவனும் இருக்கிறான்.

சுகமும் துக்கமும் ஒரு பொழுதும் அடையாத ஒருவனும் இருக்கிறான்" 🍁

🍂 *_ஓஷோ_*
*_ஞானக் கதைகள்_* 🍂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.