Sunday 30 October 2016

வாழ்க்கையின் ஆயுள்கால கணக்கு!

வாழ்க்கையின் ஆயுள்கால கணக்கு!

நான் நன்றாக வாழ்ந்தேன்னு ஒருவர் சொல்கிறார் என்றால், அவருடைய வயது என்னவென்று கேட்க வேண்டும்?’ என்று சொன்னார் புத்தர்.

இதைக் கேட்டு அவரது சீடர்கள் யோசித்தார்கள். ‘என்ன சொல்றீங்க குருவே? சரியாகப் புரியலையே!’

புத்தர் : ‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’
என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.

2 வது சீடர் : ‘அப்படியென்றால்? 90 வயது ?’

புத்தர்: ‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க குருவே’ என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.

புத்தர்: ‘ஒரு நல்ல வாழ்க்கையென்றால், ஒரு விநாடிப்பொழுதுதான்!’ என்றார் புத்தர்.

‘என்ன சொல்கிறீர்கள் குருவே? ஒரு விநாடியில் என்ன பெரியதாகச் சாதிக்கமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருடமாவது வாழ்ந்தால்தானே மனித வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும் ?’

புத்தர்: ‘அப்படியில்லை.

1.ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும்.

2.பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’ அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ள வேண்டும்.

3.எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’‘ சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதியதாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.