Sunday 10 January 2016

மூட நம்பிக்கை

குட்டிக்கதை:
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.
Moral : மூட நம்பிக்கைகள் நம்மை மூடன் ஆக்கிவிடும்.மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ்பவன் எவனோ அவனே வாழ்க்கையை வெல்வான்.
படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.