ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். “தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர். அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது. குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது. பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது. “க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது. இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர். முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது? காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் - மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!
Saturday, 30 July 2016
கற்பூரம்
கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம்.
ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.....!!!
கிருபானந்த வாரியார் சொன்ன கதை
உற்சாகமாக இருங்கள்
உற்சாகமாக இருங்கள்
---------------------------------
* வாழ்க்கையில் நாம் செய்யும் தர்மத்திலும், இன்பத்திலும் அனைத்து பொருட்களிலும் தெய்வ ஒளியைக் காண வேண்டும்.
* அகங்காரத்தை வாழ்விலிருந்து நீக்கி விட்டால் தெய்வ சக்தியும், தெய்வ அருளும் உண்டாகும்.
* மனதை உற்சாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே சுறுசுறுப்பு ஏற்படும். உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டால் மனம் உற்சாகத்துடன் இருக்கும்.
* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். அதன் மூலம் மனிதன் தான் விரும்பியபடி ஆகிறான்.
* வாழ்வில் நமக்கு பொறுப்பு இல்லை; தொல்லை இல்லை; செய்கை இல்லை; ஆனால், கடமை மட்டும் உண்டு.
* உடம்பிலுள்ள நோய்களையும் தீர்த்து வலிமை பெறச்செய்வதற்கு மனஉறுதி, நம்பிக்கை, உற்சாகம் முதலிய குணங்கள் முக்கியமாக தேவைப்படுகிறது. இவற்றை உடையவர்கள் எந்தச் செயலையும் வெற்றிகரமாக முடிக்கிறார்கள்.
புரிந்தால் மதி
குட்டிக்கதை.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை
ஒரு செல்வந்தர் தனது வீட்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்
அந்த பால்கனியில் ஒரு சிறிய எறும்பு
ஒருசிறிய ஆனால் அதனை விட பலமடங்கு பெரிதான ஒரு இலையை நகர்த்திக் கொண்டே ஊர்ந்து சென்றது,
மெதுவாகவும் மிகவும் கவனமாகவும் சென்றது.
செல்வந்தருக்கு ஒரே ஆச்சர்யம்
மேலும் தரையில் ஒருபிளவைப்பார்த்தவுடன் அது சாமர்த்யமாக இலையை அச்சிறு பிளவின் குறுக்காக வைத்து அதன் மீது ஏறிச் சென்று பின்னர் இலையை
இழுத்துச் சென்றது மேலும் பலதடங்கல்கள்
அது தன் திசையைச் சற்றே மாற்றி
வெற்றிகரமாக முன்னேறியது.
ஒருமணிநேரம் விடாமுயற்சி செய்தவாறே பயணம்செய்தது அவர் வியந்துபோனார்
ஒருசிறு எறும்பின் விடாமுயற்சி
சாதுர்யம் மற்றும் புத்திசாலித்தனம்
அவரை அசர வைத்தது கடவுளின் படைப்பின் விந்தையை நினைத்து அதிசயித்தார்.
ஆனால் எறும்பிடம் மனிதனிடம் உள்ள சில
குறைபாடுகளும் உள்ளன.
எறும்பு இறுதியில் தனது இருப்பிட.இலக்கை
அடைந்தது.அது எறும்புப்புற்று எனப்படும் ஒரு சிறிய ஆனால் ஆழமான குழி அருகே வந்தது
எறும்பால் அந்த இலையுடன் குழியினுள்
செல்ல.இயல வில்லை.அதுமட்டுமே செல்ல முடிந்தது.
தான் ஒருமணிநேரம் கஷ்டப்பட்டு
இழுத்து வந்த இலையை குழியருகே விட்டுத்தான் செல்ல வேண்டியதாயிற்று
இதற்கு இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாமே!
மனித வாழ்க்கையும் இவ்வாறு தான்
மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்து பல வசதிகளை ஏற்படுத்திக்கொள்கிறான்.
அடுக்கு மாடிவீடு சொகுசான கார்
ஆடம்பரமான வாழ்க்கை எனப்பலப்பல
இறுதியில் அவன் கல்லறையை நோக்கிச் செல்கையில் அவன் சேமித்த அனைத்தையும் விட்டுத்தான்
செல்ல வேண்டும்.
எறும்பிடமும் பாடம் கற்கலாம்
வீணாக சுமைகளைச் சேர்த்து கட்டி இழுக்க வேண்டாம்.எதுவும் நம்மோடு வரப்போவதில்லை
புரிந்தால் மதி
புரிந்துகொள்ள மறுத்தால் விதி...
Friday, 29 July 2016
மருந்தே உணவாக இருந்தது
"வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.
ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.
மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.
அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.
மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.
இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.
மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.
அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது.
துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.
பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.
காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.
கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.
காலையில் நீராகாரத்தை உண்டனர்.
தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.
மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.
மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.
மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.
உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.
பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.
உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.
இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.
நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.
அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.
இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.
இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.
அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குயாயை மேலும் விரித்து விடும்.
பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.
இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.
அடுத்து மோர் சாதம்.
இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.
அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.
பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
நாமும் இனி திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களை கையாள வேண்டும் என்று உறுதி கொள்வோம்.
"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"
Thursday, 28 July 2016
7 க்கு இவ்வளவு பெருமையா..
7 க்கு இவ்வளவு பெருமையா..
...
கொஞ்சம் படிச்சு பாருங்கள்
பூரித்து போய் விட்டேன்..
..
எண் ஏழின் சிறப்புக்கள்:
எண் ஏழு (Number 7) பெருமை
இன்று இணையத்தில் உலாவும் போது கண்ணில் பட்ட தகவல் இது.
உங்களிடம் பகிர்த்துக் கொள்வதில் மகிழ்ச்சி:
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)
படித்ததை பகிர்ந்தது.
வாழ்கவளமுடன்.
மன்னித்தல்
மன்னித்தல்
ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியை ஒரு விளையாட்டை மாணவர்களுக்குக் கற்பிக்க நினைத்தார். அவர் மாணவர்களிடம் சென்று ”நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கூடை கொண்டுவரவேண்டும் அந்தக் கூடையில் நீங்கள் வெறுக்கும் நபரின் பெயரை ஒரு உருளைக்கிழங்கின் மீது எழுதி அதில் போட்டு கொண்டுவரவேண்டும்” என்று கூறினார். அதே போல் மாணவர்கள் கூடையைக் கொண்டு வந்தனர். சில மாணவர்கள் ஒரு உருளைக்கிழங்கையும், சிலர் இரண்டு, மூன்று உருளைக்கிழங்கையும் இன்னும் சிலர் ஐந்துக்கு அதிகமான உருளைக்கிழங்குகளையும் கூடையில் போட்டு கொண்டுவந்திருந்தனர்.
ஆசிரியை மாணவர்களைப் பார்த்து ”நீங்கள் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை ஒரு பையில் போட்டு 15 நாட்கள் நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உடன் கொண்டு செல்ல வேண்டும்” என்று கூறினார். மாணவர்களும் அதை ஒப்புக் கொண்டனர். நாட்கள் செல்ல செல்ல உருளைக்கிழங்குள் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பத்தன. அதிக உருளைக்கிழங்குகளை வைத்திருப்பர்கள் அதிக துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டி வந்தது. குறைவான உருளைக்கிழங்கை வந்திருந்தவர்கள் குறைவான நாற்றத்தையும் அனுபவித்தனர். 15 நாட்களுக்குப் பிறகு இந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது.
ஆசிரியை மாணவர்களைப் பார்த்து” 15 நாட்கள் உருளைக்கிழங்கை நீங்கள் உங்களுடன் வைத்திருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்” என்று கேட்டார். உடனே மாணவர்கள் ” நாற்றமடைந்த உருளைக்கிழங்கை தங்களுடன் செல்லும் இடம் எல்லாம் கொண்டுசென்றது மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் மிகவும் கடினாமாகவும் இருந்ததாகக் கூறை கூறினர்.
உடனே ஆசிரியை மாணவர்களைப் பார்த்து இந்த விளையாட்டின் பின் உள்ள உண்மையை இப்பொழுது உங்களுக்கு சொல்லப் போகிறேன் என்று கூறினார். எப்படி நாற்ற மடைந்த உருளைக்கிழங்குகளை உடன் வைத்துக் கொண்டிருப்பது உங்களால் எப்படி பொறுக்க முடியவில்லையோ அதே போல் மற்றவர்கள் மீது உள்ள கோபத்தையோ அல்லது வெறுப்பையோ நம் இதயத்தில் தொடர்ந்து சுமந்து கொண்டிருப்பது உங்கள் இதயத்தை தொடர்ந்து மாசு அடைய செய்து கொண்டிருக்கும். அதனால் உங்கள் இயத்தில் மற்றவர்கள் மீது இருக்கும் கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றை வீசி எறியுங்கள். மன்னித்தல் என்ற மருந்தால் இதயத்தை சுத்தப் படுத்துங்கள். இப்பொழுது உங்கள் இதயம் அமைதி அடைவதை உணர்வீர்கள்.
--