Tuesday, 15 September 2020

சீட்டு கட்டு

*"சீட்டு விளையாட்டில்..."*  *சுவாரஸ்யமான சில உண்மைகள் *....

கணிதத்தை அறிந்திருந்தபோதிலும்  இதை நான் ஒருபோதும் கவனித்ததில்லை.

நீங்கள் விளையாடும் அட்டைகளின் பாரம்பரிய தளம் ஒரு காலெண்டரின் ஒத்திசைவான வடிவம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு வருடத்தில் 52 வாரங்கள் உள்ளன. எனவே ஒரு சீட்டுக்கட்டில் 52 விளையாட்டு சீட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு பருவத்திலும் 13 வாரங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு குரூப்பில் 13 சீட்டுகள் உள்ளன.

ஒரு வருடத்தில் 4 பருவங்கள் - அந்த வகையில் 4 குறியீட்டு சீட்டுகள்  உள்ளன.

ஒரு வருடத்தில் 12 மாதங்கள் உள்ளன. எனவே 12 நீதிமன்ற அட்டைகள் உள்ளன (ஒவ்வொரு குரூப்பிலும் ஜாக், ராணி, கிங் என்ற முகங்களைக் கொண்டவர்கள்)
சிவப்பு அட்டைகள் பகலைக் குறிக்கின்றன.
கருப்பு அட்டைகள் இரவைக் குறிக்கின்றன.

நீங்கள் அனுமதித்தால் ஜாக்ஸ் = 11, குயின்ஸ் = 12, மற்றும் கிங்ஸ் = 13,
பின்னர் 1 + 2 + 3 +… 13 = 91 வரை அனைத்து தொகைகளையும் சேர்க்கவும்.
இதை 4 ஆல் பெருக்கி, 4 வழக்குகளுக்கு,

எனவே 91 x 4 = 364, ஜோக்கர் என்று 1 ஐச் சேர்க்கவும், ஒரு வருடத்தில் நாட்கள் என்ற 365 எண்ணை நீங்கள் அடைவீர்களா?

இது வெறும் தற்செயலானதா அல்லது அதிக புத்திசாலித்தனமா?

சீட்டுகளின் அனைத்து பெயர்களிலும் உள்ள மதிப்புகள் கூட்டுத்தொகை ;
எ.கா: "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, ஜாக், ராணி, கிங்" = 52!
மண்வெட்டி உழுதல் / வேலை செய்வதைக் குறிக்கிறது.

உங்கள் பயிர்களை நேசிப்பதை இதயங்கள் குறிக்கின்றன.

கிளப்புகள் செழிப்பையும் வளர்ச்சியையும் குறிக்கின்றன.

வைரங்கள் செல்வத்தை அறுவடை செய்வதைக் குறிக்கின்றன.

மேலும், சில அட்டை விளையாட்டுகளில், 2 ஜோக்கர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
லீப் ஆண்டைக் குறிக்கிறது.

கார்டுகளை விளையாடுவதை விட ஆழமான தத்துவம் உள்ளது.
கணிதம் பரிபூரணமானது. மனதைக் கவரும். இத்தகவல் உங்களையும் கவரும்....

Sunday, 23 August 2020

பஞ்ச பூத இயல்

*பஞ்சபூத இயல்பு*
1. நீர் - இதன் இயல்பு மேலிருந்து கீழாகப் பாய்வது,
சுவைகளில் இது - உப்பு.
2. நெருப்பு - இதன் இயல்பு மேலே நோக்குவது,
சுவைகளில் இது - கசப்பு.
3. ஆகாயம் - எதை வளைக்கவும் நிமிர்த்தவும் முடியுமோ, எங்கும் நிரப்பவும் முடியுமோ அதுவே ஆகாயம்,
சுவைகளில் இது - புளிப்பு.
4. காற்று - எதை வடிவமைக்க முடியுமோ, உருவாக்க முடியுமோ அதுவே அசையும் தன்மை கொண்ட காற்று,
சுவைகளில் இது - காரம்.
5. பூமி - எது விதைப்பிற்கும், வளர்ச்சிக்கும், அறுவடைக்கும் அனுமதிக்கின்றதோ அதுவோ பூமி,
சுவைகளில் இது - இனிப்பு.
இந்திய பாரம்பரிய தத்துவவியலில் மிக பழமையானதாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாகவும் விளங்குவது இந்த பூதாவாதம்(பஞ்சபூத தத்துவம்)., மார்க்ஸ்ய தத்துவங்கள் இந்த பூதாவத தத்துவத்தை ஒன்றிற்கும் உதாவாதவை என்று குறை கூறினாலும்., உண்மையில் பூதாவாதம் மனித உடல் அமைப்பு, மனம் மற்றும் குணாதிசயம் போன்றவற்றை எளிமையாக புரிந்து கொள்ள உதவுகிறது., இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது., பூதாவாதத்தை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் இயக்கத்தை பற்றியும் மனதின் தன்மையை பற்றியும் புரிந்து கொள்ள முடியும்.,
i) நிலம்:
மண்ணின் அம்சத்தை பெற்றவர்கள் திடகாத்திரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் இவர்கள் அனைவரையும் தன்னை நோக்கி ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாகவும், பொறுமை சாதுர்யம் ஆகிய குணங்களை உடையவர்களாகவும் இருப்பார்கள்., இவர்களின் வாயில் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் இரகசியம் வெளியே வராது., மண்ணின் அம்சம் குறைய குறைய கவலையின் அளவு அதிகரிக்கும், உணவில் புளிப்பு சுவையை சேர்த்து கொள்வது உடலில் மண்ணின் அம்சத்தை அதிகரிக்கும்.,(மிகையினும், குறையினும் நோய் செய்யும்)மண்ணின் அம்சத்திலான மரணமானது, மண்ணீரல் பாதிக்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பின் மரணம் ஏற்படும்.,
ii) நீர்:
நீரின் அம்சத்தை பெற்றவர்கள், அழகான, வசீகரமான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும், உடலாலும் மனதாலும் மிகவும் நெகிழ்வு(இளகிய) தன்மை கொண்டவர்களாகவும், அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து செல்லக் கூடியவர்களாகவும், அச்சமற்வர்களாகவும் இருப்பார்கள்.,நீரின் அம்சத்தில் குறைபாடு ஏற்படும் போது, அதிக பய உணர்வும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்., உணவில் இனிப்பு சுவையை சேர்த்து கொள்வது நீரின் அம்சத்தை அதிகப்படுத்தும்.,நீரின் அம்சத்திலான மரணமானது, சிறுநீரகம் செயலிழந்து அதனால் சருமம் சுருங்கி பின் மரணம் ஏற்படும்.,
iii) நெருப்பு:
நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள், வலிமையான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் ஆற்றல் மிக்க மனிதர்களாகவும், எளிதில் அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர்களாகவும், அனைவராலும் அன்பு செலுத்தப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்., இவர்கள் எந்த ஒன்றையும் எளிதில் உள்வாங்கும் திறனையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.,எப்போதும் தனது குறிக்கோளையும், இலக்கையும் மட்டுமே முன்னோக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்., எந்த ஒரு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.,கட்டுபாடற்ற நெருப்பின் அம்சத்தை பெற்றவர்கள் தலைகணம், கர்வம் உடையவர்களாக இருப்பார்கள்., காரம் நெருப்பின் அம்சத்தை உடலுக்கு பெற்றுத்தரும்.,நெருப்பின் அம்சத்திலான மரணமானது, இருதயம் செயலிழப்பதால் திடீரென நிகழும்.,
iv) காற்று:
காற்றின் அம்சத்தை பெற்றவர்கள், பலம் பொருந்திய ஆஜானுபாகுவான உடல் அமைப்பை பெற்றிப்பார்கள்., மேலும் வேகமாக செயல்படக் கூடியவர்களாகவும், யாராலும் கட்டுபடுத்த முடியாதவர்களாகவும், ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்களுக்கு மட்டுமே கட்டுபட்டவர்களாகவும் இருப்பார்கள்., இவர்கள் தோள் வலிமை மிக்கவர்களாக இருப்பார்கள்.,இயல்பான ஆரோக்கிய நிலையிலும் அதிக உணவு உண்ணக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,காற்றின் அம்சத்தில் குறை ஏற்படும் பொழுது, இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளும், செயல்பாடுகளில் வேகக் குறைபாடுகளும் ஏற்படும்., உணவில் துவர்ப்பு சுவையை சேர்த்து கொள்வது காற்றின் அம்சத்தை அதிகரிக்க உதவும்.,காற்றின் அம்சத்திலான மரணமானது,நுரையிரல் செயலிழப்பதால் உடலானது வலிமை இழந்து, கைகளை கூட தூக்க முடியாத நிலை ஏற்பட்டு பின் மரணம் ஏற்படும்.,
V) ஆகாயம்:
ஆகாயத்தின் அம்சத்தை பெற்றவர்கள், எல்லா வகையிலும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் பெற்றிருப்பார்கள்., மேலும் அனைத்தையும் கட்டுபடுத்தி ஆளுமை செய்யும் தகுதி உடையவர்களாய் இருப்பர்.,எப்போதும் எதையும் தீர்கமாய் சிந்தித்து பின் செயலாற்றுபவர்களாகவும், நேரான வழியில் நடப்பவர்களாகவும், வழி நடத்துபவர்களாகவும் இருப்பார்கள்., சுயநலமற்றவர்களாகவும், அடுத்தவரின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தரக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.,ஆகாயம் நிலைத் தன்மை கொண்டது என்பதால், இதன் அம்சத்தை பெற்றவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்., உணவில் (உயிர்) கசப்பு சுவையை சேர்பது ஆகாய அம்சத்தை பெறுவதற்கு உதவும் (மிகையினும், குறையினும் நோய் செய்யும்)ஆகாய அம்சத்திலான மரணம், உயிர் ஆகாயத்தின் அம்சம் என்பதால், உடல் ஆகாயத்தின் அம்சத்தை பெற்றிருக்கும் போது மரணம் என்பது சாத்தியமில்லை.,
மரணம்:
இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் மரணம் என்பது, ஆகாயம்(உயிர்) உடலை விட்டு பிரிவதாகும், ஆகாயம் இல்லாத நிலையில் காற்றுக்கு கட்டுபாடு இல்லை எனவே அதுவும் உடலை விட்டு பிரிகிறது., எரிவதற்கு தேவையான காற்று(பிராணம்) இல்லாததால் நெருப்பு அணைகிறது., எனவே உயிரோடு இருந்த வரை உடலில் இருந்த வெப்பம் இப்போது இல்லாமல் ஆகிறது., நீரை அதனுடைய இடத்தில் பிடித்து வைத்திருந்த காற்று இல்லாததால் விந்து/நாதம், கபம் ஆகியவை உடலை விட்டு பிரிகிறது., எஞ்சி இருக்கும் உடல் மக்கி மண்ணாகிறது.,

Monday, 27 July 2020

ஆடி செவ்வாய்

*🔯 சிறப்பு வாய்ந்த ஆடி செவ்வாய் வழிபாடு*

*🔯ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, ஆடி செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.*

 ஆடி செவ்வாயில் அம்மன் உள்ளிட்ட சகல பெந்தெய்வங்கள், முருகன் வழிபாட்டுக்கு உகந்தது என புராணங்கள் சொல்கிறது. 

 முருகப்பெருமானை வழிபட்டு விரதமிருக்க விரும்பினால் அந்த முருக பெருமானுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி வணங்கி, பின்பு அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று வணங்க வேண்டும். இந்த ஆடி செவ்வாய்களில் இப்படி விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்  நீங்கும்.

இந்த ஆடி செவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.

 இதனால்  ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திர பேறு கிட்டும். கடன்கள் தீரும். பதினாறு பேறும் கிட்டும்.  

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.

 அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 13)அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிப்பார்கள்.
 செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பது விசேஷ பலன்களை தரும். 

ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால், மற்ற நாட்களில் செய்வதைவிட பல மடங்கு அதிக பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,  ஆடி செவ்வாய்  அதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று, செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.

 நைவேத்தியத்திற்கு சிவப்பு நிற பழங்களை படைப்பது சிறந்தது. காலையில் அம்மனையும் , மாலையில் முருகனையும் வணங்குவது சிறப்பு.

 செவ்வாய் தோசம் உள்ளவர்கள் துவரை தானம் செய்யலாம்.

 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

 செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் பதித்த டாலர்களை அணிவது கூடுதல் பலனை தரும்.

 ஆடி செவ்வாயில் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிட்டும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

கடைசி ஆடிச்செவ்வாய் அன்று கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி வருடத்திற்கு ஒருவராக முன் நின்று, கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைத் தெய்வமாக வழிபட்டு வடை, பாயாசத்துடன் விருந்தளிப்பர்.

 சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுடன் அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு வைத்துக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. காலத்தின் மாற்றங்களினால் இத்திருவிழா அநேக இடங்களில் கொண்டாடப்படாமல் நின்று விட்டது. சில கிராமங்களில் மட்டும் இதை மறைய விடாமல் பெரியோர்கள் நடத்தி வருகிறார்கள்.

ஆடிசெவ்வாய் விரதமிருந்து முருகனை, அம்மனை வழிபட்டு வாழ்வில் வளம்பெறுவோம்.

Sunday, 14 June 2020

கடுக்காய்

என்றும் இளமையோடு வாழ திருமூல நாதர் கூறும் எளிய வழி...

🌸நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

🌸உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

🌸நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலநாதர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

🌸ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலநாதர்.

🌸கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

🌸தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

🌸"பெற்ற தாய்க்கு இணையாக  கடுக்காயை கருதுகின்றனர் சித்தர்கள்.

🌸கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

🌸கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

🌸நமது உடம்புக்கு ஆறு சுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

🌸எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

🌸நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

🌸துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

🌸ஆனால் உணவில் வாழைப் பூவைத் தவிர்த்து பல உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். 

🌸பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

🌸அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

🌸கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

🌸கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

🌸இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிகத்து வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

🌸கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

🌸கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி,
தேமல்,
படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல்,
கல்லடைப்பு,
சதையடைப்பு,
நீரடைப்பு,
பாத எரிச்சல்,
மூல எரிச்சல்,
உள்மூலம்,
சீழ்மூலம்,
ரத்தமூலம்,
ரத்தபேதி,
பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய்,
இதய நோய்,
மூட்டு வலி,
உடல் பலவீனம்,
உடல் பருமன்,
ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் தீர்வு காண  இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌸இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

🌸"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

🌸காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

🌸நண்பகலில் சுக்கு-

🌸இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட்டு வர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து.

🌸எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌸கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

🌸தகவல் சித்த மருத்துவம்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

தவறாமல் பகிர்வோம்.

Sunday, 8 December 2019

மூளை

👆👆👆👆
மனித மூளையும் அதன் செயல்திறனும் மற்றும் மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:-

மனித மூளையும் அதன் செயல்திறனும்

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும். 

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

 மூளையைப் பாதிக்கும் 10 செயல்கள்:

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே குளுக்கோஸ் இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்: மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய இனிப்பு சாப்பிடுதல்: நிறைய இனிப்பான பண்டங்களை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று: மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது: தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது: மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது: அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

நன்றிகளும்
பிரியங்களும்.♈♈♈♈♈💃♋♋♋♋

Friday, 25 October 2019

osho

எது தன்னிடம் இல்லையோ அதையே இருப்பதாய் காட்டிக் கொள்ள முயற்சிக்கும் இது மனதின் முரண்பாடுகளில் ஒன்று

பார்க்கப்போனால் உன்  செல்வத்தை காண்பிப்பதே உள்ளே வறுமை இருப்பதால் தான்.... எந்த அளவுக்கு ஒருவன் ஏழையோ அந்த அளவுக்கு அவன் தன் செல்வத்தை காண்பித்து திரிவான் ...எந்த அளவுக்கு ஒரு கையாலாகாதவனோ அந்த அளவுக்கு காமம் கொண்டவனாக இருப்பதாக காட்டிக் கொள்வான...எந்த அளவுக்கு ஒருவன் அறியாமையில் இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன் அறிவை பறைசாற்றிக்கொண்டு திரிவான்....எந்த அளவுக்கு ஒருவன் பலவீனமாக இருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் தன்னை பலசாலியாக காட்டி கொண்டிருப்பான்...

உண்மையில் எதைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ, அதற்கு நேர் எதிரிடையாக தான் ஒருவன் இருப்பான்.... ஓரளவுக்கு மனோதத்துவம் தெரிந்திருந்தால் போதும்.. யார், எவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.... எங்கே  ஒருவன் இருக்கின்றான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.... உண்மையிலேயே அவன் தன்னை காட்டிக்கொள்ள மாட்டான் ...அது தேவையே இல்லை... தன்னிடம் இருக்கிறது என்பதுதான் அவனுக்கு சர்வ நிச்சயமாக தெரியுமே... ஒருவகையில் அவன்  அதை மறைக்கத்தான் பார்ப்பான்., தன்னை ஒரு முட்டாள் என்று பிறர் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்வான்... தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பிறர் நினைக்கும் அளவுக்கு நடந்துகொள்வான் ..தான் எந்த வகையிலும் முக்கியமானவன் அல்ல என்றுதான் காட்டிக் கொள்வான் ...எப்படியாவது தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான்...

 உன்னிடம் ஒரு பொக்கிஷம் இருக்கையில் உன்னிடம் அது இருக்கிறது என்பதைப் பற்றிய பிறரது அபிப்ராயம் தேவையே இல்லை .,

உன்னிடம் எதுவும் இல்லை எனும் போது தான் பிறர் அப்படி நினைக்க வேண்டும் என்ற நினைப்பு வருகிறது... அபிப்ராயங்கள் மட்டுமே இருக்கும் போது அவை உனக்கு தேவையாகின்றன.. அவற்றை சார்ந்தவனாகிப் போகிறாய்.. பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அதிகம் நினைக்க ஆரம்பித்து விடுகிறாய்...
 இதைத்தான் உள்ளே இருக்கும் வறுமை என்கிறேன்...

மிக உயர்ந்த செல்வம் வெகு குறைவாக தெரிகிறது 🌹

இதை தவறாக புரிந்துகொண்டு விடாதே.. பெரும் செல்வந்தனைக் கண்டால் அவனுடைய செல்வதை காண முடியாது.. ஞானியை கண்டால் முட்டாளாகத் தெரிவார்... எதையும் காட்டிக் கொள்ள மாட்டார் ..

அழகான ஒரு பெண்ணை கண்டால் அலங்காரம் ஏதும் செய்யாமலிருக்க காண்பாய்....
நகைகளைப் பூட்டிக் கொள்வதும,ஒப்பனை செய்து கொள்வதும் அசிங்கமானவள் செய்யும் காரியங்கள்... உண்மையாகவே அழகாக இருப்பவள் ஒப்பனையிலோ, அணிகலன்களிலோ நாட்டமுடையவளாகவே இருக்கமாட்டாள்.. அசிங்கம்தான் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிகள் செய்யும்.. உண்மையான அழகுக்குத் தான் அழகு என்பதே தெரியாது...

அழகு தன்னை காட்சிப்பொருள் ஆக்குவதில்லை ..
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.... இதை நீ கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.. அதை நீ தேடிப் போக வேண்டியிருக்கிறது.....   

மிக உயர்ந்த செல்வம் குறைவாகத் தெரிகிறது அதன் பயன் எப்போதும் தவறுவதில்லை.....🌹

 தன்னை காட்சிப் பொருளாக்காமல் வாழ்கின்றவனிடம் எப்போதும் வேண்டியது இருக்கும்... எப்போதும் வேண்டியதற்கு மேலும் அவனிடம் இருக்கும்... அவனுக்கு தேவையானது எல்லாமும் இருக்கும்....

 காட்சிப் பொருளாக இருப்பவன் ,இன்னும் வேண்டும. இன்னும் வேண்டும் என்று அலைகிறவன்...

 இருப்பதைக் காட்டிக் கொள்ளாதே. அப்படி செய்தால்தான் உன் ஆற்றல் தான் வீணாகும்.

 அதிகாரம் இருக்கிறதா ? அதை மறைத்து வைத்துக் கொள். வெகு ஆழத்தில் அதை மறைத்து வைத்துக் கொள் ..உண்மையிலேயே அதிகாரம் இருப்பவர்கள் மட்டும் அதை தெரிந்து கொள்ளட்டும்....

 உன்னுடைய அதிகாரத்தை காட்ட ஆரம்பித்துவிட்டால் திவாலாகி போய்விடுவாய்.. மலடாகிப் போவாய்.... உன்னிடமிருந்து பறித்து விடுவார்கள்... திருடிவிடுவார்கள்..  அதை கைவிட வைத்துவிடுவார்கள்... 

உன்னிடம் இருப்பதை காட்டாதே. காட்டி விடாதே... அதில் மகிழ்ச்சி கொள். ஆனால் அது பிறருக்குத் தெரியாமல் இருக்கட்டும் .யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டுமே உன்னிடம் இருக்கும் ஆற்றலை தெரிந்து கொள்வார்கள்.

 அதிகாரம் இருப்பவனை அதிகாரம் இருக்கும் இன்னொருவன் உடனே தெரிந்து கொள்கிறான்.. ஒரு ஞானியை இன்னொரு ஞானி உடனே கண்டுகொள்கிறார்... அதற்கு எந்த வெளிப்படையான அடையாளமும் தேவையில்லை ...

 ஞானிக்கு தேவையில்லை வெளிவேஷம் ..அதை தெரிந்து கொள்ளாமல் இருக்கவே முடியாது.... எனவே ஞானிகள் உன் ஞானத்தை தெரிந்து கொள்வார்கள் ..அதை காட்டிக் கொள்ள வேண்டியதே இல்லை.....

        🌹ஓஷோ 🌹

Monday, 9 September 2019

ஹீமோகுளோபின்

🎩உடலில் ரத்தத்தில்
ஹீமோகுளோபினை
அதிகரிப்பதற்கான எளியவழி!🎩

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

இந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.

நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில்

ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.

உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

1-வது நாள் 1, 1, 1, = 3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்து ப்பாருங்கள்.

தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்...