Friday, 1 September 2017

சிரிப்பு

🌺 சிரிப்பு என்பது ஒரு சிறந்த சிகிச்சை

ஆரம்ப காலம் முதல் உங்களை கட்டுப்படுத்தாமல் வயிறு குலுங்கக சிரிக்க அனுமத்தித்திருந்தால்...

உங்கள் புத்தாவை கண்டு கொள்வது என்பது எளிதான காரியமாகி இருந்திருக்கும்

ஏனெனில்.....

நீங்கள் எல்லா இறுக்க நிலையில் இருந்தும்,

மற்றும் மறுத்தல்,

அடக்குதல்,

கோவம் போன்ற வேண்டபடாத நிலையில் இருந்தும் விடுதலையாகி இருப்பீர்கள்

இந்த சுதந்திரமான நிலையில் மட்டும்தான்

ஒருவன் புத்தாவை காண முடியும்

நான் இந்த உலகத்திற்கு அளித்தது என்னவென்றால்,

ஆன்மீக வளர்ச்சிக்கு நகைச்சுவை உணர்வு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதுதான்

சிரிக்க முடியாத மனிதன்,

ஒரு வியாதியஸ்தன் தான்

இறப்பை எதிர்நோக்கும் வியாதியஸ்தன் 🌺


💐 *_ஓஷோ_* 💐

Tuesday, 29 August 2017

ஓஷோ

<3 நீங்கள் முழு ஆண் என்றால்

உன் தந்தையிடம் இருந்து பிறந்திருக்க வேண்டும்

நீங்கள் முழு பெண் என்றால் உன் தந்தையின் பங்களிப்பு இல்லாமல் பிறந்திருக்கவேண்டும்

நீங்கள் ஆண் பெண் கலவை

இதனால்தான் விஞ்ஞானத்தால் பாலினமாற்றம் சாத்தியமாயிற்று

நீங்கள் ஆண் என்றால் உனக்குள் வெளிப்படாத பெண் உண்டு

நீங்கள் பெண் என்றால் உனக்குள் வெளிப்படாத ஆண் உண்டு

இது சிறிய ஹார்மோன் வேறுபாடுதான்

தந்ரா உனக்குள் இருக்கும் பெண்னுடன் எப்படி இணைவது என்பதையும்

அதற்கு வெளியே உள்ள ஒரு பெண்னை எப்படி ஊடகமாகப் பயன்படுத்துவது என்பதையும் சொல்வது

இந்த இணைப்பு நிரந்தரமானது.

இந்த உள் இணைப்பு தொடங்கி விட்டால்

பிறகு வெளியே உள்ள பெண்மீது கவர்ச்சி இருக்காது

இது.....இது......இதுதான்
பிரம்மச்சர்யம்

ஒவ்வொரு நொடியும் உச்சம்தான்

இந்த நிலையில் பிரிவே கிடையாது

பிரிக்கவே முடியாது

முடிவே கிடையாது

முடிக்கவே முடியாத பேரின்பம்

இதுதான் மோனம்

இதுதான் சமாதி

இதுதான் ஞானம்

இதுதான் முக்தி

இதுதான் கடவுள்

இப்போது உனது பாலுணர்வு ஆற்றல் வெளியேறி விரையமாவதில்லை உள்ளுக்குள்ளே உயர்கிறது

இப்போது நீ அர்த்தநாரி <3

<3 ஓஷோ <3

Sunday, 27 August 2017

நிகழ்கால வினை

*நிகழ்கால வினை*

*புத்தர்*
-----------------------------------------------
புத்தர் ஞானமடைந்தபின்
அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு

விஷமிட முயற்சி செய்தான்.

அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான்.

ஆனால்

எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான்.

ஆனால்

அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,

கண்களை மூடிக் கொண்டது

சிலர் புத்தரைக் கேட்டார்கள்,

''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால்

நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?

அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'

'புத்தர் சொன்னார்,

''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன.

கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.

அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

இது அவனுடைய செயல் அல்ல.

அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன்.

அப்படியில்லை என்றால்

அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?

இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால்

மீண்டும் ஒரு சங்கிலி உருவாகிவிடும்.

என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு
தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.

நான் இனி ஒரு புதிய

சங்கிலியை,

வினையை,

கர்மத்தை

எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.'' என்றார்.

Saturday, 26 August 2017

அனுபவங்கள் மறக்காது.

இன்றைய சிந்தனை..(25.08.2017)
...............................

''அனுபவமே உயர்ந்தது...''
............................................

பார்வையற்ற இளைஞன் ஒருவனை சிலர் புத்தரிடம் அழைத்து வந்தனர்.

அவர்கள் “இந்த இளைஞன் வெளிச்சத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் நம்ப மறுக்கிறான்” என்று கூறினர்.

அப்போது பார்வையற்ற இளைஞன், “வெளிச்சத்தை நான் தொட்டு பார்க்க வேண்டும். சுவைத்து பார்க்க வேண்டும்.

அதன் வாசனையையோ அல்லது ஓசையையோ நான் உணர வேண்டும்.இவை எதுவும் இல்லாத வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதை நான் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?” என்றான்.

அவனுடன் வந்தவர்கள் புத்தரிடம்,“நீங்கள் தான் வெளிச்சம் உண்டு என்பதை அவன் நம்பும்படி செய்ய வேண்டும்” என்று கூறினர்.

அதற்கு புத்தர், “அவன் உணர முடியாத ஒன்றை அவனை நம்ப வைக்கும் செயலை நான் செய்ய மாட்டேன்.

இப்போது அவனுக்கு தேவை பார்வை. வெளிச்சம் பற்றிய விளக்கமல்ல. அவனுக்கு பார்வை வந்து விட்டால், விளக்கம் தேவைபடாது.

அவனைத் தகுந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று பார்வை கிடைக்கச் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினார்.

புத்தர் கூறியதை ஏற்று பார்வையற்ற இளைஞனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். சிகிச்சை முலம் அவனுக்கு பார்வையும் கிடைத்தது.

உடனே அந்த இளைஞன் புத்தரிடம் ஓடி வந்து, “வெளிச்சம் இருக்கிறது” என்று கூறினான்.

உடனே, புத்தர், “வெளிச்சம் இருக்கிறது என்று அவர்கள் கூறிய போது ஏன் நம்ப மறுத்து விட்டாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன்,

“கண் தெரியாத என்னால், எவ்வாறு வெளிச்சத்தை உணர முடியும்? அவர்கள் சொன்னதை அப்படியே நான் ஏற்றுக் கொண்டிருந்தால், இன்னும் நான் கண் தெரியாதவனாகவே இருந்திருப்பேன்” என்றான்.

அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது என்பதை புத்தர் இந்த நிகழ்ச்சியின் முலம் சீடர்களுக்கு புரிய வைத்தார்..

ஆம், நண்பர்களே..!

'அனுபவமே சிறந்த ஆசான்'! அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்...

எங்கு வேலை பார்த்தாலும் அதை வேலையாகக் கருதாமல், அதை ஒரு அனுபவமாக தெரிந்து கொள்ளக்கூடிய ஓரு வாய்ப்பாக நினைத்து, அதில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

இந்த அனுபவப் பாடம்தான் மனிதர்கள் உயர்வதற்கான
தாரக மந்திரம்''நெருப்பு சுடும் என்பதும், நீர் குளிரும் என்பதும் நம் அனுபவங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டவைதானே.

பக்கம் பக்கமாகப் படித்த பாடங்கள் மறந்து போகலாம்.

ஆனால்,

பசுமரத்தாணிபோல மனதில் படிந்த அனுபவங்கள் மறக்காது..🌺🙏🌹

Thursday, 24 August 2017

_ஒரு ஜென் கதை

🎗 *_ஒரு ஜென் கதை_* 🎗

⚜ டோஜன் என்பவர் புகழ் பெற்ற ஒரு ஜென் குரு.

தனது போதனைகளின் வழியே பல முக்கியமான ஜென் சிந்தனைகளைப் பரப்பியவர்.

ஒருநாள் அவரைப் பார்ப்பதற்காக ஒரு மாணவர் வந்திருந்தார்.

‘குருவே, எனக்கு ஒரு பெரிய குழப்பம்!’ என்றார்.

‘என்னது...???’

‘நான் பெரிய அரசு அதிகாரியாக வேண்டும் என்று என்னுடைய தந்தை விரும்புகிறார்.

ஆனால் என்னுடைய தாய் நான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

எனக்கோ உங்களைப்போல் ஒரு துறவியாகவேண்டும் என்றுதான் ஆசை’ என்று அந்த மாணவன் சொன்னான்.

‘இப்போது நான் என்ன செய்யவேண்டும்...??? நீங்களே சொல்லுங்கள்!’

டோஜன் மெல்லச் சிரித்தார்.

‘பள்ளித் தேர்வுகளில் நீ எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்று உன்னுடைய தந்தை எப்படித் தெரிந்துகொள்வார்...???’

‘அதற்கென்று ஒரு மதிப்பெண் அட்டை உண்டு’ என்றான் அந்த மாணவன்.

‘ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு அந்த அட்டையில் என்னுடைய மதிப்பெண்களை நிரப்பித் தருவார்கள்.

அதை நான் என் தந்தையிடம் காண்பித்துக் கையெழுத்து வாங்கிவரவேண்டும்!’

’நல்லது. அந்த அட்டையில் உன்னுடைய தந்தையின் கையொப்பத்தை நீயே போட்டுவிடுவாயா...???’

அந்த மாணவன் முகத்தில் அதிர்ச்சி. ‘குருவே, ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்....???

என் தந்தையுடைய கையெழுத்தை நான் எப்படிப் போடமுடியும்....???

அது அவருடைய தனித்துவமான அடையாளமாயிற்றே.....!!!’

‘உண்மைதான். அடுத்தவர்களுடைய கையெழுத்தைப் போடுவதற்கு விரும்பாத நீ,

அவர்கள் தங்களுடைய சிந்தனைகளை உன்மீது திணிக்கும்போது ஏன் அதை ஏற்றுக்கொள்கிறாய்.....???

உன்னுடைய தனித்துவத்தை நீ ஏன் காட்டுவதில்லை....???’ என்றார் டோஜன்.

‘நீ அடுத்தவர்களாகமுடியாது.

அடுத்தவர்கள் நீயாகமுடியாது.

இந்த ஒரு விஷயத்தை என்றைக்கும் மறந்துவிடாதே.

அது உன்னை வழிநடத்தும்" ⚜

Wednesday, 23 August 2017

சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும்

ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிக சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒருசேர பெறமுடியும். இந்த பூஜையை செய்வது மிக மிக எளிது. அனால் இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது. வாருங்கள் இந்த பூஜையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Lakshmi Guperan
இந்த பூஜையை செய்ய இரண்டே இரண்டு நிபந்தனைகள் மட்டுமே உள்ளது ஒன்று நாம் சரியான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதை ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். அதாவது ஒன்பது வாரம் செய்ய நினைப்போர் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம். அதுபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்போர் மாதா மாதம் பௌர்ணமி நாட்களில் செய்யலாம். இதை ஒருவரே தொடர்ந்தது செய்ய வேண்டும். அவருக்கு உடல்நல குறைவு ஏற்படும் பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.
இரண்டாவது நிபந்தனை, இதை செய்ய ஒரே மாதிரியான 81 நாணயங்கள் தேவை. உங்களுடைய வசதிக்கு ஏற்ப ஒரு ருபாய் நாணயமோ 10 ருபாய் நாணயமோ எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அனால் 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயங்கால இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ருபாய் என்றால், 81 நாணயங்களும் ஒரு ருபாய் நாணயமாக தான் இருக்க வேண்டும்.
coins
பூஜை செய்யும் முறை:
நீங்கள் பூஜை செய்ய தேர்ந்தெடுத்துள்ள நாளில் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும். அடுத்து இந்த பூஜை தடைபடாமல் இருக்க மகாகணபதியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு அந்த நாளின் நல்ல நேரத்தில் ஒரு பலகையை எடுத்துக்கொண்டு அதில் கீழே தரப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் கட்டங்களை வரைந்து எண்களையும் எழுதுங்கள்.
endhiram
கட்டத்தை குங்குமத்தால் வரைவதும், எண்களை அரிமாவால் எழுதுவதும் சிறந்தது. திருமகளைக் குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள “ஸ்ரீ’ எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இந்த கோலமே குபேர யந்திரக் கோலம் என்று கூறப்படுகிறது. பிறகு கட்டங்களில் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வையுங்கள். நாணயம் எண்களை மறைப்பது போல் வைக்கக்கூடாது. ஆகையால் அதற்கு ஏற்றால் போல் கட்டங்களை முன்பே வரைந்துகொள்ளுங்கள்.
நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் ஆகையால் இப்போது குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதிகம். இப்போது பூஜை செய்ய சிறிது உதிரிப்பூக்களை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டங்கள் வரையப்பட்டுள்ள பலகையை பூஜை அறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றுங்கள். சக்கரை கலந்த பாலோ அல்லது பால் பாயாசமோ இறைவனுக்கு படையுங்கள். பிறகு வீட்டில் செல்வம் சேரவேண்டும் என்று மகாலட்சுமியிடம் மனதார வேண்டிக்கொண்டு கீழே உள்ளே மந்திரத்தை கூறுங்கள்.




மகாலட்சுமியே போற்றி!
மங்கள லட்சுமியே போற்றி!
தீபலட்சுமியே போற்றி!
திருமகள் தாயே போற்றி!
அன்னலட்சுமியே போற்றி!
கிருக லட்சுமியே போற்றி!
நாரண லட்சுமியே போற்றி!
நாயகி லட்சுமியே போற்றி!
ஓம் குபேர லட்சுமியே போற்றி போற்றி!
இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே நீங்கள் எடுத்துவைத்திருக்கும் உதிரி பூவை குபேர எந்திரத்தில் உள்ளே ஒவ்வொரு கட்டத்திலும் போடுங்கள். அப்படியே தொடர்ந்து கீழே உள்ளே மந்திரத்தை கூறுங்கள்.
வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி!
குலம் செழிக்கச் செய்திடுவாய் குபேரனே போற்றி!
செல்வங்கள் தந்திடுவாய் சிவன் தோழா போற்றி!
உளமாரத் துதிக்கின்றோம் உத்தமனே போற்றி போற்றி!
guberan
பிறகு குபேரனை நன்கு வேண்டிக்கொண்டு தீபாராதனை காட்டுங்கள். அவ்வளவுதான் உங்களுடைய பூஜை சிறப்பாக முடிந்தது. அன்று மாலை உங்களால் முடிந்த மங்கள பொருட்களை சுமங்கலிகளுக்கு கொடுங்கள். பின்பு பெருமாள் கோயிலிற்கு சென்று தாயாரை தரிசியுங்கள். மங்கள பொருட்களை கொடுக்க வசதி இல்லாதோர் ஒன்பது வார முடிவிலோ அல்லது ஒன்பது மாத முடிவிலோ கொடுங்கள்.
Thamboolam
அடுத்தநாள், குபேர எந்திரத்தில் வைத்த நாணயங்களை எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு ஒரு ஈர துணி கொண்டு எந்திரம் வரையப்பட்டுள்ள பலகையை துடைத்துவிடுங்கள். பிறகு இதே போன்று அடுத்த வாரமோ அடுத்த மாதமோ தொடந்து செய்யுங்கள். ஒன்பது வார அல்லது மாத முடிவில் உங்களிடம் 81 நாணயங்கள் சேர்ந்திருக்கும். அதை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று அல்லது பௌர்ணமி அன்று சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிடுங்கள். சிவனே குபேரனுக்கு செல்வம் அனைத்தையும் அளித்தவர். அதனாலேயே சிவன் கோவில் உண்டியலில் போடவேண்டும்.


பின்பு மங்கள பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு கொடுங்கள். அப்போது மகாலட்சுமியே ஏதவது ஒரு சுமங்கலி ரூபத்தில் வந்து பொருட்களை பெற்று உங்களை ஆசிர்வதிப்பால் என்பது நம்பிக்கை. இதை செய்து முடித்தபின் உங்கள் வீட்டில் நிச்சயம் செல்வம் பெருகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதோடு வீட்டில் நிம்மதியும் நிலைக்கும்.

Sunday, 20 August 2017

நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும் !*

🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌺🌼🌸

*நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும் !*

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

*சுவாதி*

✨ நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

*விசாகம்*

✨ நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது.

✨ செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தானிய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.

*அனுஷம்*

✨ தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சு+ரியனை வழிபடல் வேண்டும்.

✨ வருணனையும், திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது.

*கேட்டை*

✨ நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது, ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்ற சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும்.

✨ பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 'தேவேந்திரனை" வழிபடல் வேண்டும்.

✨ இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பு+ஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும்.

*மூலம்*

✨ முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம். பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும்.

✨ 2-ஆம் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாய்க்கு துன்பம். 3-ஆம் பாதம் ஆண் குழந்தையால் பொருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பங்களும் ஏற்படும்.

✨ 3-ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3-ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுதில் பிறந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவில் பிறந்தால் தாய்க்கும், உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்காகும்.

✨ எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

*பூராடம்*

✨ 1, 2 மற்றும் 4-ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமாகும்.

✨ இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும் மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமகும்.

✨ நவகிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்.

✨ திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பௌர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

🌼🌸🌺🌼🌸🌺🌼🌸🌺🌼🌸