Sunday, 4 June 2017

இறந்து போதல் என்றால் என்ன...???

🌺 *ஆத்ம  விசாரணை* 🌺

🌷 இறந்து போதல் என்றால் என்ன...???

அப்போது ரமணர் சிறு வயது....

அவரது அப்பா இறந்துபோனதும் , அதே நினைவாக இருந்து கொண்டிருந்தார்..

அப்பாவை எப்படி தகனம் செய்திருப்பார்கள்....!!!???!!!

நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா..???

ஏன் வலிக்காமல் போயிற்று...???

எது இருந்தால் வலி....???

எது இழந்தால் மரணம்....???

எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான்.

எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.

இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.

இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.' எனத் தோன்றியது.

இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும்.

அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான்.

உடம்பை விறைப்பாக்கினான்.

இப்ப உடம்பு செத்துவிட்டது.

இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது.

நான் இறந்து விட்டேன்.

இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்துவிடுவார்கள்.

அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும்.

ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய்,

சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள்.

இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு  சாம்பலாகிவிடும்..

ஒன்றுமே இருக்காது.

உடம்பு காணாமல் போய்விடும்.

எது இருப்பதால் நான் இருக்கிறேன்,

எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன்.

எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்....???

வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது.

மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று.

மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க,

மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது.

இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது,

எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ  இருக்கிறது..

அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன

இன்னும் உற்று பார்க்க,

மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று.

நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது.

தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .

இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க

வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது.

உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன.

மூச்சுஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று.

இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.

மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று.

மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,

மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது.

மூச்சு இருந்தது.

ஆனால் முழுவதுமாக இல்லாது,

ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும்.

மூச்சு அடங்க, மனமும் அடங்கும்.

இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது,

சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது.

தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது.

இரண்டு மூச்சுக்கு நடுவேயும்,

இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும்,

ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும்,

அசைந்தும், அசையாமலும்

மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது.

எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன.

அது, அந்த பேரொளி,  எண்ணத்தை விழுங்கியது.

எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' உடலே நான்' என்கிற எண்ணம் காணாமற் போக

பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான்.

சகல உயிர்களையும் இவ்வாறு நிற்பது  என்பது தெரிந்தது.

இதுவே நிரந்தரம்.

இதுவே முழுமை.

இதுவே இங்கு இருப்பு.

இதுவே இங்கு எல்லாமும்.

இதுவே முதன்மை,

இதுவே சுதந்திரம்,

இதுவே பரமானந்தம்,

இதுவே பூமி,

இதுவே பிரபஞ்சம்,

இதுவே அன்பு,

இதுவே கருணை,

இதுவே அறிவு.

இதுவே ஆரோக்கியம்.

அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம்.

இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம்,

மூடாத காதுகளில் ரீங்காரம்,

உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு,

புத்தியில் ஒரு திகைப்பு,

உள்ளங்காலில் ஒரு சுகவேதனை,

ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.

முதுகு தண்டில் ஒரு குடையல்,

நெஞ்சு துடிப்பு நிதானம்,

இருதயத்தில் அழுத்திய கனம்,

தொண்டையில் ஒரு சுழல்,

நெற்றியில் ஒரு குறு குறுப்பு,

உச்சி மண்டையில் ஒரு அக்னி,

ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே.

அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று.

வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு
அமர்ந்து கொண்டார்.

எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான்.

பிறகு காரணமின்றி சிரித்தான்.

மீண்டும் அழுதான்.

எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான்.

வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது.

உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

'என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு'

ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

'உள்ளே இருப்பது நான்.

அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

'இந்த உடம்பு நான் அல்ல,

இந்த புத்தி நானல்ல,

என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல'

ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய்,

சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான்.

அதுவே எல்லாருள்ளும்.

எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது.

நான் தான் அது

நான் தான் சித்தி,

நான் தான் சித்தப்பா,

நான் தான் அண்ணா,

நான் தான் தெரு நாய்,

நான் தான் வண்டு,

நான் தான் பசுமாடு,

நான் தான் மாடப்புறா,

நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும்.

இது மிகப் பெரிய தவறு.

'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது,

எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது,

என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்....!!!

என்ன வேறுபாடு....!!!

ஒருமை எப்படி பன்மையாகும்....!!!

பத்தாவது படியில் இறங்கி நின்றான்.

மாடிப்படி திரும்பினான்.

சிரித்தான்.

'இதை யாரிடம் போய் சொல்வது,

இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது,

நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா,

எனக்கு ஏதோ நடந்தது,

அது சரியாக நிகழ்ந்ததா....???

தூக்கமா...???

பிரமையா....???

அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா...???

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான்.

மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான்.

அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது,

சந்தோஷம் இருந்தது,

அமைதி இருந்தது,

அன்பு இருந்தது,

ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று.

எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி

அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.

மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்

அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது.

மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது

ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்.

அந்த பாத்திரத்தை நிரப்ப இறையருள் காத்திருந்தது.

தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை,

வெகு சிலருக்கே நடக்கிறது.

அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன்

பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார்.

பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள் 🌷

🌸 பகிர்வு 🌸

Friday, 2 June 2017

அதிர்ஷ்ட கலர்

12 ராசி (லக்கின) அதிர்ஷ்ட கலர் வீட்டை பராமரிக்கும் முறை
1) மேச (லக்கின) ராசிக்காரர்கள் :
பம்பரமாக சுழன்று வீட்டை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து இருப்பவர்கள். இவர்கள் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தான் இருக்கும் வீடு குடிசை ஆனாலும் சரி மாளிகை ஆனாலும் சரி அதை பராமரிப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. எந்த இடத்தையும் தனக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளும் திறமை உள்ளவர்கள். அப்பார்ட்மெண்ட் அல்லது காம்பவுண்ட் தொடர் குடியிருப்புகளில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
2) ரிசப (லக்கின) ராசிக்காரர்கள் :
பேச்சில் இருக்கும் சுத்தம் வீட்டை பராமரிப்பதில் இருக்காது. வீடு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். அடிக்கடி வீட்டை மாற்றும் தன்மை உள்ளவர்கள். உயரமான வீடு, அரண்மை போன்ற வீடு, காம்பவுண்போட்ட கேட் போட்ட தனி வீட்டில் வசிக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
3) மிதுனம் (லக்கின) ராசிக்காரர்கள் :
தான் வீட்டை பராமரிக்க விட்டாலும் வேலை ஆட்களை வைத்து அழகாக பராமரிப்பவர்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும்.
வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
4) கடகம் (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு கௌரவத்தையும் அந்தஸ்தையும் தருவதாக அமையும். அண்டை வீட்டார் இவரை கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு வீட்டை வைத்தி இருப்பார்கள். கீழ் வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள். ஜன நடமாட்டம் உள்ள இடத்தில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
5) சிம்ம (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கிரிமினாசினி கொண்டு தூய்மையாகவும் சுகாதாரமானவும் வைத்திருப்பார்கள். வீட்டை அலங்காரம் செய்ய அதிக செலவு செய்வார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியுடன் இருக்கும். வீட்டின் கழிவறைகள் மிக சுத்தமாக இருக்கும். அண்டை வீட்டாருடன் அளவுடன் பழகுவார்கள். வீட்டில் அதிகமாக தண்ணீர் செலவு செய்வார்கள். இவர்கள் எப்போதும் தொடர் வீடு மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்,
6) கன்னி (லக்கின) ராசிக்காரர்கள் :
தனது வீட்டை எப்போதும் கோவில் போல பூசி மெழுகி அழகுடனும் பக்தியுடனும் பராமரிப்பார்க்ள். ஆன்மீக பொருட்களைக் கொண்டு அழகுடன் பராமரிப்பதில் வல்லவர்கள். வீட்டின் ஜன்னல்கள் அடிக்கடி மூடியே இருக்கும் அதனால் வீடு வெப்பமாக விருக்கும். வீட்டில் எடுத்த பொட்களை இடம் மாற்றி வைப்பது இவர்களுக்கு பிடிக்காது. தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
7) துலாம் (லக்கின) ராசிக்காரர்கள் :
செய்யும் தொழிலே தெய்வம் வீட்டை பராமரிப்பதே எனது தலையாய கடமை என்பது போல் எண்ணம் கொண்டவர்கள் ஆனால் செயல் தான் கொஞ்சம் கம்மி. வாசனை புகைகளுடன் வீடு இருக்கும். சொந்தவீடு வாங்கிய பின் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் ஆசைபடுவார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் இருக்க விரும்புவார்கள். நல்ல தண்ணீர் வசதியுள்ள பாதுகாப்பான வீட்டிலேயே குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
8) விருச்சக (லக்கின) ராசிக்காரர்கள் :
தன்னைபோல யாரும் வீட்டை பராமரிக்க முடியாது என்பது போல வீட்டை பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். இந்த வீடு வாங்கிய பின்தான் எல்லாம் வந்தது என வீட்டும் மீது செண்டிமெண்ட் வைத்து இருப்பார்கள்
ஜன நடமாட்டம் குறைவான இயற்கையான சூழ் நிலைஉள்ள தனித்த வீட்டில் இருக்கவே பெரிதும் விரும்புவார்கள். மாடி வீட்டில் மாடியில் குடியிருக்க விரும்புவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
9) தனுசு (லக்கின) ராசிக்காரர்கள் :
சுத்தத்தை உயிரை விட உயர்வாக மதிப்பவர்கள். வீட்டில் யார் எப்படி இருந்தாலும் இவர்கள் வீட்டை சரியாக பராமரித்துக்கொண்டு இருப்பார்கள். வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். மற்றவர் எடுத்த பொருளை சரியான இடத்தில் வைக்காவிட்டாலும் இவர்கள் சரியான இடத்தில் வைப்பவர்கள், எதிலும் ஒழுக்கத்துடன் இருப்பார்கள். தனது உறவினர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தனி வீட்டில் வசிக்கவே ஆசைபடுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மில்க் ஒயிட்.
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
10) மகர (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை பராமரிப்பதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் எனோதானோ என பராமரிப்பார்கள். எப்போதும் வீட்டு ஜன்னல்கள் முடப்பட்டு இருக்கும். டு எப்போதும் வெப்பமாக இருக்கும். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கமல் அடிக்கடி தேடிக்கொண்டிருப்பார்கள். ராயல் வாழ்கை வாழ்பவர்கள். எதிர் வீட்டாரை ஒப்பிட்டு வீட்டின் ஒவ்வொரு வேலையையும் செய்வார்கள். கீழ்வீட்டில் அதுவும் தொடர் வீட்டுகளில் வசிக்கும் வாய்ப்பை அதிகம் பெறுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள், சந்தணம்.
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச், ரோஸ்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு, ரோஸ்
11) கும்ப (லக்கின) ராசிக்காரர்கள் :
வீட்டை அழகாகவும் வசிகரமாகவும் சுத்தமாகவும் பராமரிப்பவர்கள். தனது வாடகை வீட்டைகூட சொந்தவீடு போல பராமரிப்பவர்கள். மற்றவர்கள் தன் வீட்டை உதாரணம் சொல்வது போல தன்வீட்டை பராமரிப்பார்கள், கடன் வாங்கி வீடு வாங்கி தனது ஆடம்பர வாழ்வை நடத்துவார்கள். தனி வீட்டில் காம்பவுண்ட் உடன் உள்ள வீட்டில் வாழ ஆசை கொண்டவர்கள். அக்கம் பக்கம் வீட்டாருடன் நட்புடன் இருக்க மாட்டார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
12) மீன (லக்கின) ராசிக்காரர்கள் :
ஆரோக்கியம், சுத்தம் சுகாதரம், சுத்தம் சோறு போடும் என்பதுபோல் வீட்டை அழக்காக பராமரிப்பார்கள். வீட்டு ஜன்னல்கள் திறக்கப்பட்டு எப்போதும் காற்றோட்டமாக இருக்கும். வாசனை புகைகளுடன் வீடு கம கம என இருக்கும். வீடு குளிர்சியாகவும் காற்றோட்டமாகவும் இருக்கும். வீட்டிற்குள் இருக்கும்போது மகிழ்சியாகவும் ஆரோக்கியமாகவும் கருதுவார்கள். ஒன்றுபோல் இருக்கும் வீடுகளில் அதிகமாக வசிப்பார்கள். அண்டை வீட்டாருடன் நட்புடன் பழகுவார்கள்.
வீட்டிற்கு உள்ளே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : நீலம், அடர்ந்த வர்ணம்
வீட்டிற்கு வெளியே அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : வெண்மை, மின்னும் நிறம்,
காம்பவுண்டுக்கு கேட்டுக்கு அடிக்க வேண்டிய அதிர்ஷ்ட நிறம் : பச்சை, சயான், பிஸ்தா
குடிசை வீடோ அல்லது மாடி வீடோ
தூய்மையான வீடு ஆரோக்கியமான வீடு
நம் வீடும் அதை சுற்றிய இடமும் சுத்தமானால்
நாடு சுத்தமாகும் சுகாதாரமாகும்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மீன்கள் அழுக்கை திண்று அந்த இடத்தை சுத்தமாகும்
மீன ராசி மருத்துவமனையை குறிக்கும்
அழகான சுத்தமான வீடு வசியமான வீடாக இருக்கும்
அதுவே நாம் நினைத்ததை நிறைவேற்றும் அதிர்ஷ்ட வீடு

புத்தராக இரு

<3 உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று

புத்தராக இரு

புத்தராக இருப்பது என்பது விழித்திருப்பது.

தன்னைத் தவிர்த்த இன்னொன்றைத் தெரிந்து கொள்வதுதான் அறிவு

ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு

தெரிந்து கொள்கிறவனைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஞானம்

விவேகம், தெரிந்து கொள்பவனும் தெரிந்து கொள்ளப் படுவதும் இல்லாமல் போவதுதான் புத்த நிலை

தியானம் ஒரு ரச வாதம் கவனித்துப் பார்க்கும் போது இரும்பைத் தங்கமாக்கி விடும்

சாதாரணத்தில் அசாதாரணத்தைக் காண்பதுதான் புத்தருடைய பாதை

இந்தக் கணத்தில் இங்கிருப்பதில் முழுமையைக் காண்பது
இதைத்தான் புத்தர்

" தத்ஹதா " என்கிறார்

மனம் எதற்கெடுத்தாலும் வடிவம் கற்பித்துக் கொண்டே இருக்கும்

கடவுள் வடிவத்தோடு கூடியதொரு பொருளல்ல

" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு

எங்கே ஆசைகள் இருக்கிறதோ அங்கே மௌனித்து விடு "

மனம் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது

மனம் உன்னை திருப்தியாக இருப்பதற்கு விடவே விடாது

புத்தர் கூறுகிறார்
"தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு"

இப்போது என்ன இருக்கிறதோ அது உன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது

இப்போது இருப்பவை எல்லாம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது

அந்த அழகை அனுபவி

இயற்கை இப்போது இருக்கிறது என்பதில் வெகு அழகு இருக்கிறது

ஆசையை கவனமாக வேடிக்கை பார்க்கும்போது ஆசை மெதுவாக விலகி விடுகிறது

" மகிழ்ச்சியோ துயரமோ எது நடந்தாலும் பாதிப்பில்லாதவனாக
பற்றில்லாதவனாக போய்க் கொண்டிரு"

மகிழ்ச்சியையும் துயரத்தையும் உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே

அதை மிகவும் ஆழமாக வேடிக்கை பார்

இதைத்தான் புத்தர்
" விபாசனா" என்கிறார்

ஆழ்ந்து பார்ப்பது அகக் கண் கொண்டு பார்ப்பது

புத்தர் அவரது உடலை வேடிக்கைப் பார்க்கிறார்

அவருக்கு உடல் வலியில்லை

தான் தனது உடல் அல்ல என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது

உடல் இறக்கும் போது கூட புத்தர் அதை வேடிக்கை பார்க்கிறார்

அந்த அளவுக்கு வேடிக்கை பார்க்க முடியும் என்றால்.....

ஒருவர் இறப்பைத் தாண்டியவராகிப் போகிறார்

இறப்பிலிருந்து உன்னை காப்பாற்றுவதல்ல புத்தருடைய நோக்கம்

இறப்பைத் தாண்டி உன்னைக் கொண்டு போவதுதான் அவருடைய நோக்கம்

மனிதனுடைய முழு முயற்சியும் மரணத்தால் அழிக்க முடியாதது

எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்
மரணமில்லாதது

எதுவோ அதைத் தன் மையமாக கொண்டிருப்பதுதான்

பிறப்பு ஏற்கனவே நடந்து விட்டது

அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது

ஆனால் மரணம் நடக்க வேண்டி இருக்கிறது

அதைப்பற்றி ஏதாவது செய்யமுடியும்

உணர்வோடு இறக்க முடியும் என்றால்.....மீண்டும் உணர்வோடு பிறக்கலாம்

கணத்துக்கு கணம்
விழித்திருப்பதுதான் புத்தரின் நெறி

அப்போது உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதைக் காண்பாய்

அதை அழித்து விட முடியாது <3

<3 ஓஷோ <3