Sunday, 26 March 2017

சத்துள்ள பழங்கள்

புரோட்டீன் சத்துள்ள பழங்கள்
மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம் (நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.
கால்சியம் சத்துள்ள பழங்கள்
எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.
இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள்
ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .
பொட்டாசியம் சத்துள்ள பழங்கள்
ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.
பாஸ்பரஸ் சத்துள்ள பழங்கள்
மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன. மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும்.
பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும் மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.

Tuesday, 21 March 2017

மண்பானை

*மண்பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.*❗

💧மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது.

💧எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். எனவே தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும்.
மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.

💧குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும்.
ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம்.

💧பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்.
உடலுக்கு மிகவும் நல்லது.

💧மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

Friday, 17 March 2017

குங்குமம் பொட்டு

உதிர  வேங்கை மரத்தின் துண்டுகள் நீர் விட்டு சுன்ட  காய்ச்சி எடுக்க உயிர் உள்ள குங்கும பொட்டு கிடைக்கும்... இது நெற்றியில் இட்டு செல்ல பொட்டுக் உண்டான அனைத்து செயலையும் செய்யும்... இந்த மரம் சதுரகிரி, கொல்லிமலை, செஞ்சி மலை களில் எளிதாக கிடைக்கும்

ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு

”ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு”

யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் சீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீ புரம் எனக்கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்ய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேக ஸம்சேஷோபனா சக்ரம் என்ற பெயர். இதனை குப்ததரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட சர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

ஒரே முக்கோணம் சர்வஸித்தப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

பிந்து ஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ரிபு சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இந்த அமைப்பைக்கொண்ட ஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர்; போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்த மார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.

பிராணாயாமத்துக்கான பயிற்சிகள்

பிராணாயாமத்துக்கான  பயிற்சிகள்

நாடி சுத்தீ

நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.

பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும். 

செய்முறைகள்:

1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.

பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்’ அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்.

முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.

இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.

பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும். இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும். 

2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.

3 உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.

4 நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.

பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.