Tuesday, 29 September 2015

ஜன்னல்

ஜன்னல்..

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

Think and react...🙇🏽🙇🏽
...

தமிழன்

‪#‎தமிழன்‬என்ற திமிர் எனக்கும் உண்டு!!!..ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!ஆதாரம் இதோ...........W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை

(அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.

எடுத்துகாட்டுகள் :Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்றபலவும் தமிழ் மூலத்திலிருந்துவந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்”- ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.==========================தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,உலக கலாச்சாரங்களின்தொட்டில் ,உலக நாகரீகங்களின் ஊற்று ,உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )

கற்குவியல்= Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Buttonஉலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .ஆங்கிலத்தின் தாய் மொழியான :லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .2015 ஆய்வுகளின் படி :( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கைகிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .கீபுருவின் தாய் மொழி அரமைட் ,அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ;கி.முன் 5000 ;கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும்உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :

கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .மரத்தை கட்டுவதால் கட்டு மரம்இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் . ~

நன்றி: மின் இலக்கியப் பூங்கா🙏🏻

ஓம்

ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும்,
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை,  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை  இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும்,
அனைவரும் அறிவர்.
"ஓம்" என நாம் ஒலிக்கும்போது,  பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த,  ஒரு சம்பவமே காரணம் ஆகும்.

29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து,  அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக,  அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி,
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு,
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து,  ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,

1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு,  உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும்
"ஓம்".
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை,  அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக,  உள் காது,  இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை,  சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி "ஓம்" ன் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில்குர்ஜர்.
அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார், அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.
இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள்  இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

Tuesday, 8 September 2015

48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?

அதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) ? அந்த கணக்கு தெரியுமா?
இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம் சம்பந்தமான விசயம் அல்ல.
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.அவற்றிற்கான படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும
எப்படி என்கிறீர்களா...? இதோ இப்படி
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன. இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும், முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல. அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
இன்னும் சந்தேகமா ?
ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....! அறிவியல் உண்மை விளங்கும்.

Thursday, 3 September 2015

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல்
சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,
வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக
இருந்தால் உங்கள் நண்பர்களுடன்
பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள்

புழுவெட்டு மறைய

முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Tuesday, 1 September 2015

பேசும் மந்திரம், பேசா மந்திரம்

மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள்.





பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.


1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.






மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.


“கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக், கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம்பிடித்து பணிந்திட்டாரே”


“தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து, ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று கொங்கணர் வேண்டினார.;






“பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன் பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய், மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த, கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட புத்திகொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங்கண்டிலேனே”






கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார்.






”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா;, ஒண்டிபேநாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்படிதானாச்சு, கன்டிலேனிவரைப் போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே”





இது எவ்வளவு பெரிய ஆச்சரியம . இந்த ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப்படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான்இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது.






”மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு சொன்னா; மகத்தானபோகருந்தானுனக்குச் சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே”






கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டுகொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்கமுடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்கமுடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனேஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிறார்.


மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன:






”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப் பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்னகாசிக்கு மாகாது சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம் பொய்யென்பாரே”






மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய்போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்றபுனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,; வேதங்களே பொய் என்பர்.






”பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்றுயோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியாவிட்டால் விருதமாடே”





மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார்.






”நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந்தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே”






மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்திஅடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள்எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடையமுடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும்,கடவுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார்.






”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு, மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே”






மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல்இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளைசொல்லுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும் போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,; மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்துகொண்டே இரு.






காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.









மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌனவித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.


முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமேஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும்






புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.









நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவதுஇறப்பை வெல்ல முடியாது.






நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன்பொருள்.